1. Home
  2. கவிதை

Tag: கவிதை

தந்தையர் தின கவிதை

தந்தையர் தின கவிதை தாயின் தலைவனே தன்னலமற்ற ஜீவனே ! குடும்பத்தை தோள்மீது சுமக்கும் சுமைதாங்கியே ! சுகம் நூறு தந்திட ! உழைத்து ஓடாய் தேயும் உன்னத உறவே ! தோள் உயர்ந்த மகனுக்கு தோழனாய் தோள் கொடுப்பவரே ! மகளைத் தன் தாய் என அழைப்பவரே…

கவிதை

சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பால் இறந்து போன  கன்னட மொழிக் கவிஞர் சித்தலிங்கையாவின் கவிதை ஒன்று...   “நான் இறந்தால் நீங்கள் அழுவீர்கள். உங்கள் கதறல் எனக்குக் கேட்காது. என் வலிக்கு இப்போதே வருந்த முடியாதா?   நீங்கள் பூமாலை சாத்துவீர்கள். என்னால் முகர முடியுமா என்ன?…

ஐக்கூ சார்ந்த கவிதை

இனிய கவி இதயங்களே பிப்ரவரி மாதத்திற்கான ஐக்கூ சார்ந்த கவிதைகளை ஜன30க்குள் அனுப்பி வைக்கவும் -கண்ணன்சேகர், ஆசிரியர் ‘Kavisooriyan’ Haikoo idhazh, cell:9894976159.   kavisooriyan@gmail.com

தொ பரமசிவனார் அஞ்சலிக் கவிதை

தொ பரமசிவனார் அஞ்சலிக் கவிதை தொ. ப தமிழ்க்குடியின் பண்பாட்டு வேர் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் கருக் கொண்ட திரு எஙகள் கல்லூரியில் விழுதிறக்கிய அறிவுலக ஆசான் பாளையம் கோட்டையின் பண்பாட்டுக் கோட்டை பொருநை நதியில் கரைந்து விட்ட பொதுத் தமிழ் வையை நதியில் முத்துக்குளித்த அழகர்…

கவிதை என்ன செய்யும்!!!

கவிதை என்ன செய்யும்!!! கனவு காணச் செய்யும் கனவுகள் துரத்தச் செய்யும் சுயம் உணர்த்தவும் சுற்றம் நேசிக்கவும் பழக்கும்… பூக்களோடு சிரிக்கவும் புயலோடு பறக்கவும் கற்பிக்கும்… கடமையை காதலோடும் காதலை கடமையோடும் காணச்செய்யும்… கண்ணீருக்கு இறங்கவும் கடல்கண்டு வியக்கவும் கற்றுத்தரும்… வெறும் கவிதை என்ன செய்யும் உலகிற்கு உன்னை…

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனைக் கவிதை

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனைக் கவிதை ————————————— முத்திரை நபி ! முடிவான நபி !! —————————————————- உலகுக்கு ஔியாய் உத்தமத் தூதாய் ……………..அருளாய் வந்த நபி – நல்ல மலருக்கு மணம் போல் மாந்தர்கள் நெஞ்சில் ……………..தீனை விதைத்த நபி இன்மொழியாக ஓரிறைக் கொள்கையின் உயர்வை சொன்ன நபி –…

வயது கூடினாலும் வெள்ளி முகிழ்த்தாலும்

வயது கூடினாலும் வெள்ளி முகிழ்த்தாலும் (கவிதை) வித்யாசாகர்!   1 ஒரு நிலா செய்து தெருவில் உருட்டிவிடவும், நட்சத்திரங்களை பொருக்கி சட்டைப்பையில் கொட்டிக்கொள்ளவும், பூமியைச் சுருட்டி வீட்டுக் கதவு மூலையில் வைத்துவிடவும், வானத்து முதுகில் ஒரு பெயரெழுதி வைக்கவும், கடலுக்குள் கைவிட்டு ஒரு முத்தெடுத்து உனக்கு மூக்குத்தி மாட்டிவிடவும்,…

ஆயிரம் பூக்களால் அர்ச்சிப்பவள் நீ

ஆயிரம் பூக்களால் அர்ச்சிப்பவள் நீ – காதல் கவிதை – வித்யாசாகர்!   உயிரானாய் உயிராகவே இருப்பாய் உயிருள் உயிர்மை ஊட்டுபவளே உயிருள்ளவரை உடனிரு. ஒரு அலைபோல மீண்டும் மீண்டும் ஓயாது வருபவள் நீ அந்த அலை அந்தக் கடலிலிருந்து மெல்ல விலகினால் அந்தக் கடலென்ன ஆகும்? நானென்ன…

அப்பா எனும் ஆயிரஞ் சிரிப்பு

  அப்பா எனும் ஆயிரஞ் சிரிப்பு – வித்யாசாகர் – கவிதை!   அடித்தாலும் திட்டினாலும் முண்டம் முண்டமென மண்டையில் குட்டினாலும் அப்பா வீட்டிலிருக்கும் நாட்கள் தான் எங்களுக்கு வசந்தமான நாட்கள்.. அப்பா கையில் அடி வாங்குவது அவ்வப்பொழுது இறந்து பிறப்பதற்கு சமம்.. நம்மை புதிதாகப் பெற்றெடுக்க அனுதினமும்…

பெண்களின் காதல் ரகசியம்

பெண்களின் காதல் ரகசியம் (கவிதை) வித்யாசாகர்!! மனம் வலிக்குமென்றெல்லாம் அவளுக்கு கவலையில்லை, பிரிவை பொழுதின் மாறுதலாக எடுத்துக் கொள்பவள் அவள், சட்டை மாற்றும் போது காதலும் மாறிப்போகுமா தெரியவில்லை அவளொரு காதல் தெரியாதவள் என்னை ஏதோ பெரிதென்று எண்ணி நேசித்தவள் அருகில் வந்ததும் லேசாகிவிட்டேன் நான்; காதல் இப்படித்தான் தொடும்வரைதான் மின்சாரம் பாயும் தொட்டப்பின் கொன்றோ விட்டொவிடுகிறது என்றெல்லாம் எழுதுவோரைக் கொஞ்சம் காது திருகி அழைக்கிறேன் வாருங்கள்…