1. Home
  2. இலக்கியம்

Tag: இலக்கியம்

கொள்ளை நோய் தந்த இலக்கியம்

கொள்ளை நோய் தந்த இலக்கியம்   பெரிய அனுபவமான கொள்ளை நோய்கள் இருக்கும்போதும், அவை நம்மைக் கடந்த பிறகும் சில பண்பாட்டு விளைவுகள் வருவது இயல்பு. நல்லது, கெட்டது பற்றிய நம் தெளிவு குலைவது உண்டு. மக்களின் அனுபவம் ஆழமாகி இலக்கியங்களும் உருவாகியுள்ளன. கதைக்குள் வரும் கதைகளாக “டெக்கமரான்” என்று பெயரிட்டு ஒரு கதைத் தொகுப்பு எழுதினார் பதினான்காம் நூற்றாண்டு இத்தாலியக் கவிஞர் ஜொவான்னி பொக்காச்சோ. ஒட்டுவாரையெல்லாம் ஒட்டிக்கொண்டு ஃப்ளாரண்டைன் நகர மக்களில் பாதிக்கும் மேல் வாரிக்கொண்டுபோன பிளேக் தொற்று அவர்களின் அன்றாட நெறிகளை என்ன செய்தது என்று அவர் விவரிக்கிறார். எதையும் நிச்சயமாக அறிந்துகொள்வது மனிதர்களுக்குச் சாத்தியமா என்று நாம் என்றைக்கும் கேட்க மாட்டோம். அறிவின் நிச்சயத்தன்மைக்கு நாம் இப்படிப் பழகிக்கொண்டதால், ஆல்பெர் காம்யு எழுதிய “கொள்ளைநோய்” என்ற பிரெஞ்சு நாவல் எதையும் நிச்சயமாகச் சொல்ல முடியாது என்று கூறுவது நம்மை அதிரவைக்கும். நிச்சயமில்லாத சூழலில் நிற்பவர்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை நாவலின் ஒரு கதாபாத்திரம் இப்படிச் சொல்கிறது : “இதை பிளேக் என்று எடுத்துக்கொண்டு நாம் செயல்பட வேண்டும். அப்படிச் செயல்படும்போது அந்த முடிவுக்கும் நாம் பொறுப்பேற்க வேண்டும்.” உலகத்தில் மனிதனின் நிலைமை பற்றியும், நாம் செய்யக்கூடியது பற்றியும் காம்யு இதையேதான் சொல்கிறார். நாம் செய்ய வேண்டிய முடிவுக்கு நமக்கு வெளியே ஒரு வழிகாட்டி இல்லை. மறைகளை, நெறிகளை, இறைவனையெல்லாம் நம் முடிவுக்குப் பொறுப்பாக்க முடியாது. எல்லாவற்றையும் தீர்மானித்துக் கொண்டிருந்த இறைவன் இருந்த இடம் இப்போது வெற்றிடம். நம் செயல் வழியாக நாமே தீர்மானிப்பதுதான் உண்மையாக வாழ்வதாகும். கொரோனா காலத்தில் உலகம் முழுதும் மக்கள் மறுவாசிப்பு செய்யும் நாவல் காம்யுவின் “கொள்ளைநோய்”. கதைக்காக அல்ல, காம்யுவின் தத்துவ மரபுக்காக அந்த நாவலை மீண்டும் வாசிக்கிறார்கள். கொரோனாவால் ஆழப்பட்ட மக்களின் அனுபவத்துக்கு காம்யுவின் நாவல் இப்போதும் ஒரு உருவம் கொடுத்து உதவியிருக்கும். – மே 31 தமிழ் இந்துவில் எழுதிய திரு. தங்க.ஜெயராமன் எழுதிய கட்டுரையிலிருந்து)

இறவாத இலக்கியம்..!

(இரங்கற்பாக்களாலும் இதயங்களைக் கசிய வைக்கும் கலைஞருக்கு ஒரு கலங்கிய நெஞ்சின் இரங்கற்பா…) இறவாத இலக்கியம்..! -ஆரூர் புதியவன் தமிழினத்திற்காய் துடித்த ஓர் இதயம் தன் துடிப்பை நிறுத்தி விட்ட போது… துடிதுடிக்கும் இனத்திற்கு ஆறுதல்தான் ஏது..? காலத்தை வென்ற கருணை நதி… இதற்கு இன்னொரு பெயர்தான் கருணாநிதி ……

அரபி இலக்கியம்

அரபி இலக்கியம் இ லக்கியம் (LITERATURE) என்றால் என்ன என்பதை முதலில் காண்போம். கலை நயத்தோடு ஏதேனும் ஒரு வடிவத்தில் வெளிப்படுத்தும் படைப்பு. அது கவிதையாக, வசனமாக, சிறுகதையாக, நாவலாக எந்த வடிவத்திலும் அமையலாம். அரபி இலக்கியம் என்பதை ‘அல்அதபுல்அரபிய்யு’ என்பர். ஒரு செய்தியைச் சாதாரண நடையில் சொல்வதற்கும் ஈர்ப்புடன் கலைநயத்தோடு…

இலக்கிய நூல்களுக்கான பரிசுப் போட்டி

இலக்கிய நூல்களுக்கான பரிசுப் போட்டி   தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து நடத்தும் இலக்கிய நூல்களுக்கான பரிசுப் போட்டி 29ஆம் ஆண்டாக நடத்தப்படவுள்ளது. ஆய்வுநூல்கள், மொழிபெயர்ப்பு, புதினங்கள், சிறுகதை, சிறார் நூல்கள், கவிதை, கட்டுரை, குறும்படம், ஆவணப்படம் என ஒன்பது பிரிவுகளில் இரண்டு…

இசுலாமியரின் இலக்கியப் பங்களிப்பு

இசுலாமியரின் இலக்கியப் பங்களிப்பு: [சென்ற ஆண்டு நான் எழுதியது; தகவல்கள் சில இணையத்திலிருந்து பெறப்பட்டவை] முஸ்லிம் புலவர்கள் பலரும் இலக்கிய வளர்ச்சிக்குத் தொண்டு செய்துள்ளனர். படைப்போர், முனஜாத்து, கிஸ்ஸா, மசலா, நாமா என்ற இலக்கிய வகைகளைத் தமிழில் முதன்முதலில் இசுலாமியப் புலவர்கள் அறிமுகம் செய்தனர். பரணி இலக்கியம் போன்று…

இஸ்லாத்தின் பார்வையில்… திருக்குர்ஆனும் இலக்கியமும்

இஸ்லாத்தின் பார்வையில்… 46. திருக்குர்ஆனும் இலக்கியமும் ‘திருக்குர்ஆன்’ என்கிற வார்த்தைக்கான பொருள் என்ன தெரியுமா? ஓதப்பட்டது, ஓதப்படக் கூடியது, ஓதப்பட வேண்டியது. இதுவே ‘குர்ஆன்’ என்கிற வார்த்தைக்கான உள்ளார்ந்த பொருளாகும். சுருக்கமாக சொல்வதென்றால், எல்லா காலத்திற்கும் எல்லா மக்களுக்கும் ஏற்ற வேதம் குர்ஆன். ஆம், திருக்குர்ஆனுக்கு இதர வேதங்களை…

‘நவீனநொச்சி’ – இலக்கிய இதழுக்குப் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன

‘நவீனநொச்சி’ – இலக்கிய இதழுக்குப் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன   வணக்கம். இருமாதக் கவிதை இதழான‘நவீனநொச்சி’ இது வரை பத்து (10) இதழ்கள் வெளிவந்துள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்விதழின் முதன்மை நோக்கங்களில் ஒன்று மாணவர்களிடமும் ஆய்வாளர்களிடமும் உள்ள படைப்பாற்றல் திறத்தை வளர்த்தெடுப்பதும் ஊக்குவிப்பதும் ஆகும். அதனால் மாணவர்கள் ஆய்வாளர்கள்…

சங்க இலக்கியத்தில் ஊசி

  முன்னுரை பண்டைத் தமிழகம் அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், கலை-பண்பாடு, தொழில்துறை, உற்பத்தித்துறைகளில் சிறந்து விளங்கியுள்ளது. உற்பத்தித்துறையில் இரும்பைக் கொண்டு தமிழர் பலவித கருவிகளை உருவாக்கியுள்ளனர். இரும்பின் கண்டுபிடிப்பானது மனிதனது வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் கொண்டு வந்துள்ளது. ஆதிச்ச நல்லூர் மற்றும் முதுமக்கள் தாழி உள்ள…

இலக்கியத்தில் நோன்பு…..

ரமலான் மாதம் இஸ்லாமியர்க்கு நோன்பு மாதமாகும். முப்பது நாள் நோன்பிருந்து.., இறைவனை வணங்கி நோன்பு நோர்ப்பர். ஏழை, பணக்காரன் என்ற பேதமையை கழிந்து ஒற்றுமையாய் நோன்பினை நோப்பர், நமது இலக்கியத்திலும் நோன்பினைப் பற்றியும் விரிவாக பல செய்திகள் காணப்படுகிறது. அவற்றில் சில….., ***************************************************************************************************************** இலக்கியத்தில் நோன்பு….. #1 இப்போது நம்மில்…

சிங்கப்பூரில் தமிழ் இலக்கிய வளர்ச்சி

http://nagoori.wordpress.com/2014/06/21/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D/   21JUN வரலாறு படைப்பிலக்கியம் என்பது ஒரு கலை வடிவம். சமகாலத்தின் வாழ்க்கையைப் படைப்பிலக்கியம் வழி கலையாக்கும் போது, எழுத்தாளன் அவனை அறியாமலேயே காலமாறுதல்களுக்கு ஏற்ப மாறும் சமூகமாற்றத்தைத் தன் படைப்புக்களில் காட்டுகிறான். சிங்கப்பூரில் மலர்ந்த சிறுகதை, கவிதை, நாவல், நாடகம் ஆகிய இலக்கிய வடிவங்கள், சிங்கப்பூர்ப்…