குவைத் : IGC ஏற்பாட்டில் “விடுதலைப் போரில் முஸ்லிம்கள்

IGC ஏற்பாட்டில் “விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி” – 21/8/2015 வெள்ளிக்கிழமை
நம் இந்தியத் தாய் திருநாட்டின் விடுதலையில் முஸ்லிம்களுடைய பங்கு அளப்பரியது என்பதும் முஸ்லிம்களுடைய தியாகங்கள் இன்று மறைக்கப்படுவதும் திரிக்கப்படுவதும், முஸ்லிம்கள் நாட்டுப்பற்று அற்றவர்கள் என்று தீவிர பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதும் தாங்கள் அறிந்த ஒன்றே.
இந்நிலையில், நம் நாட்டின் சுதந்திரத்தில் முஸ்லிம்களுடைய பங்கை நினைவுகூரி போற்றும் விதமாக இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் (IGC) சார்பில் “விடுதலைப் போரில் முஸ்லிம்கள்” என்ற மையக்கருத்தில் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி ஒன்று 21/08/2015 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணியளவில் ஃபஹாஹீல் – சூக் சபா பகுதியில் உள்ள கோஹினூர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது சமயம் பிற மதங்களைச் சேர்ந்த, பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள், விடுதலைப் போரில் முஸ்லிம்களின் தியாகங்கள் குறித்து சிறப்புரைகள் நிகழ்த்த உள்ளனர்.
இவ்வழைப்பினை நிர்வாகத்தினரின் அழைப்பாக கருதி, நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சியில் தாங்கள் அனைவரும் குடும்பத்தினருடன் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அன்போடு அழைக்கிறோம். மேலும், தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ள வேண்டுகிறோம்.
இங்ஙணம்,
இஸ்லாமிய வழிகாட்டி மையம் – IGC,
குவைத்.
Tags: , , ,

Leave a Reply