List/Grid

தகவல்கள் Subscribe to தகவல்கள்

துபாயில் நடிகை ஹேமமாலினி நூல் அறிமுக நிகழ்ச்சி

துபாயில் நடிகை ஹேமமாலினி நூல் அறிமுக நிகழ்ச்சி

துபாயில் நடிகை ஹேமமாலினி நூல் அறிமுக நிகழ்ச்சி   துபாய் : துபாயில் நடிகை ஹேமமாலினியின் டிரீம் கேர்ள் என்ற ஆங்கில நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. தொடக்கமாக குத்துவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய துணை தூதர் விபுல்… Read more »

ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில்  தமிழக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்

ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் தமிழக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்

ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் தமிழக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் வாசகர்களுடன் சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சி ஷார்ஜா : ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் தமிழக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் வாசகர்களுடன் சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. ஷார்ஜா புத்தக ஆணையத்தின் சார்பில் சர்வதேச புத்தக கண்காட்சி கடந்த 11ஆம் தேதி தொடங்கி எக்ஸ்போ சென்டரில் நடந்து வருகிறது. வரும் 11-ஆம் தேதிவரை இந்த கண்காட்சி நடக்கும். இந்த புத்தக கண்காட்சியில் வாசகர்கள் தங்களது மொழி சார்ந்த இலக்கிய ஆளுமைகளை சந்திக்கும் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தமிழ்மொழியில் இந்த ஆண்டு இலக்கிய ஆளுமையாக தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ். ராமகிருஷணன் தேர்வு செய்யப்பட்டு சார்ஜா அரசின் சிறப்புவிருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அவருடனான வாசகர்கள் சந்திப்பு நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை மாலை நடந்தது. அவரது துணையெழுத்து என்றநூல் இந்த நிகழ்ச்சியின் கருவாக அமைக்கப்பட்டிருந்தது. அவர் தனது உரையில் தன்னை இந்த புத்தக கண்காட்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்த நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்ற தமிழ் வாசகர்களை சந்திப்பதில் மிகவும் சந்தோசம் அடைகிறேன். தன்னை அடையாளம் காட்டும் வகையில் பிரபலவார இதழில் வெளியான Ôதுணையெழுத்துÔ மிகவும் முக்கியமாக இருந்தது. இது பின்னர் நூலாக வெளியிடப்பட்டது. அந்த நூல் இதுவரை 35 பதிப்பைகண்டுள்ளது. தொடர்ந்து இந்த நூலின் விற்பனை அதிகரித்து வருகிறது. தன்னை ஒரு சீரியசான எழுத்தாளர் என்ற அடையாளத்தை இந்த கட்டுரை மாற்றியமைத்தது. இதில் சமூகத்தில் நடைபெறும் நிகழ்வுகளை எழுத்தின் மூலம்படம் பிடித்துக் காட்டியிருந்தேன். அது பலரது உள்ளத்தையும் கவர்ந்துள்ளது. தமிழ் இலக்கியத்துக்காக பாடுபட்ட கம்பர், சீத்தலைச் சாத்தனார், மாங்குடி மருதன்  உள்ளிட்ட பலர் பாடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவரும்இலக்கியத்துக்காகவே தங்களது வாழ்க்கை அமைத்துக் கொண்டுள்ளனர். எனினும் அவர்கள் எங்கு இருந்தார்கள், எங்கு மறைந்தார்கள் என்பன போன்றதகவல்களை தெரிந்து கொள்ள முடியாத சூழல் நிலவி வருகிறது. ஒரு சிலருக்கு மட்டுமே நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வெள்ளி வீதியார் என்ற பெண் காதல் கவிதைகளை சிறப்புடன் எழுதி வந்தவர். அவர் குறித்த தகவல்களை இலக்கிய உலகம் மிகவும்அரிதாகவே தெரிய முடிகிறது. வரலாறு, மொழி ஆகியவற்றில் முன்னோடியாக இருந்து வருவது தமிழ் இனம் ஆகும். தமிழர்களின் நாகரிகம் தொன்மையானது. செய்தித்தாள்களில் மருத்துவ உதவி கேட்டு வரும் விளம்பரங்களை பார்த்து சாமான்யர்கள் சிறு உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம்பெரிய அளவிலான உதவிகள் சென்று சேர முடியாவிட்டாலும், அந்த குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் காவலாளி உள்ளிட்ட சிறுவேலைகளை செய்து வருவது தனது எழுத்துக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம் ஆகும். ஒரு சிறு உதவி செய்தாலும் அதனை நன்கொடையளிப்பவர்கள் தங்களது பெயரை அந்த பொருளில் பதிப்பவர்களுக்கு மத்தியில் தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டியன் உள்ளிட்ட மன்னர்களின் சேவைகள் மிகவும் பெருமைக்குரியது ஆகும். எனது வாழ்வை  ஒரு எழுத்தாளனாக மட்டுமே அமைத்துள்ளேன். பலர் அரசு அல்லது அவரவரது விடுமுறைகளை அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனம்நிர்ணயிக்கும். எனினும் எனது விடுமுறையை நானே நிர்ணயித்துக் கொள்ளும் வாய்ப்பு பெற்றுள்ளேன். மேலும் இந்திய வரைபடத்தை பார்த்த நான் அந்த வரைபடத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கும் பயணப்பட்டேன். இது எனக்கு ஒரு புதிய அனுபவத்தைஅளித்தது. இதன் மூலம் நமது வரலாறு, பண்பாடு உள்ளிட்டவற்றை கற்றுக் கொடுத்தது. இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத், கம்பம் தினேஷ், மதுரை அக்மல் ஹசன், காரைக்குடி ஹமீத் உள்ளிட்ட வாசகர்கள் பலர்குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

துபாயில் திமுக செயல் தலைவருடன் அதிராம்பட்டினம் பிரமுகர்கள் சந்திப்பு

துபாயில் திமுக செயல் தலைவருடன் அதிராம்பட்டினம் பிரமுகர்கள் சந்திப்பு

துபாயில் திமுக செயல் தலைவருடன் அதிராம்பட்டினம் பிரமுகர்கள் சந்திப்பு துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜா மாகாணத்தில் நடந்து வரும் 36-வது சர்வதேச புத்தக கண்காட்சிக்கு ஷார்ஜா ஷேக்கின் அழைப்பை ஏற்று சிறப்பு விருந்தினராக வருகைதந்த திமுக செயல் தலைவரும்… Read more »

துபாயில் நடந்த ஓட்டப் போட்டியில் தமிழக வீரர் சிறப்பிடம்

துபாயில் நடந்த ஓட்டப் போட்டியில் தமிழக வீரர் சிறப்பிடம்

துபாயில் நடந்த ஓட்டப் போட்டியில் தமிழக வீரர் சிறப்பிடம் துபாய் : துபாயில் நடந்த ஓட்டப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் சையது அலி சிறப்பிடம் பெற்றுள்ளார். நாகர்கோவிலை சேர்ந்தவர் சையது அலி ( வயது 51 ). இவர்… Read more »

அஜ்மானில் மருத்துவ மற்றும் அறிவியல் கண்காட்சி

அஜ்மானில் மருத்துவ மற்றும் அறிவியல் கண்காட்சி

    GMU MASE 2017: Gulf Medical University Opens its Doors to 5000+ Students Visiting the Biggest Annual Interschool Medical & Science Exhibition   Being held at the Gulf Medical… Read more »

ஷார்ஜாவில் பாதிக்கப்பட்டுள்ள மூன்று தமிழர்கள்

ஷார்ஜாவில் பாதிக்கப்பட்டுள்ள மூன்று தமிழர்கள்

ஷார்ஜாவில் பாதிக்கப்பட்டுள்ள மூன்று தமிழர்கள் ஷார்ஜா : ஷார்ஜாவுக்கு வேலைக்காக மணிகண்டன் உள்ளிட்ட மூன்று பேர் காரைக்குடி பகுதியில் இருந்து வந்துள்ளனர். ஆனால் அவர்களை வேலைக்கு அழைத்து வந்த நிறுவனம் வேலைக்கான சம்பளமோ அல்லது தங்குமிடமோ வழங்கவில்லை. இதன் காரணமாக அவர்… Read more »

இந்தியாவில் வெளிநாட்டுக்கு பணியாட்களை தேர்வு செய்ய உதவும் அரசு நிறுவனங்கள்

இந்தியாவில் வெளிநாட்டுக்கு பணியாட்களை தேர்வு செய்ய உதவும் அரசு நிறுவனங்கள்

The Government of India accords the highest priority to the welfare of Indian nationals working and living abroad. It has introduced E-migrate system since February 2015 to facilitate transparent recruitment,… Read more »

தைவானில் தமிழ்ப் பள்ளி தொடக்க விழா-  முப்பெரும்விழா

தைவானில் தமிழ்ப் பள்ளி தொடக்க விழா- முப்பெரும்விழா

தைவானில் தமிழ்ப் பள்ளி தொடக்க விழா-  முப்பெரும்விழா தேசியத் தைவான் பல்கலைக்கழக விளையாட்டு வளாகம், தைவான் தைவானில், தமிழ்ப் பள்ளி  தொடக்க விழா, தமிழ்ச் சங்கத் தலைவர்  முனைவர்  (இ)யூசி அவர்களுக்கு பாராட்டு விழா, தமிழ்ஆராய்ச்சி மாணவர்களுக்கு வரவேற்பு என முப்பெரும் விழா… Read more »

அஜ்மானில் உங்கள் குழந்தைகளின் ஓவியங்களை கண்காட்சியாக வைக்க வாய்ப்பு

அஜ்மானில் உங்கள் குழந்தைகளின் ஓவியங்களை கண்காட்சியாக வைக்க வாய்ப்பு

அஜ்மானில் உங்கள் குழந்தைகளின் ஓவியங்களை கண்காட்சியாக வைக்க வாய்ப்பு   அஜ்மான் : அஜ்மானில் வித்யாரம்பம் என்ற நிகழ்ச்சி 30.09.2017 சனிக்கிழமை காலை 7 மணிக்கு நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சி அஜ்மான் ஈஸ்ட் பாய்ண்ட்  இந்திய சர்வதேசப் பள்ளியில் நடைபெற… Read more »

மக்காவில் சிங்கப்பூர் ஹஜ் குழுவினர்

மக்காவில் சிங்கப்பூர் ஹஜ் குழுவினர்

மக்காவில் சிங்கப்பூர் ஹஜ் குழுவினர் மக்கா : புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள சிங்கப்பூரில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்துள்ளனர். இந்த குழுவுக்கு முதுகுளத்தூரைச் சேர்ந்த பரிஹுல்லா சிங்கப்பூர் நாட்டு குழுவினருக்கு தலைமையேற்று சென்றுள்ளார். அந்த குழுவினர் மக்காவில் சிங்கப்பூர் நாட்டின்… Read more »