1. Home
  2. இலக்கியம்

Category: மஸ்கட் பஷீர் முகமது

தோற்றமும், பின்புலமும், புது நினைவும் !

முதல் கவிதை..! தோற்றமும்,  பின்புலமும், புது நினைவும் ! கவிஞர். மஸ்கட் மு.பஷீர்     துண்டுக் காகிதங்களில் துளிர் விட்ட வார்த்தைகள் தூளியில் கூடுகட்டி தூங்காமலே போனது – எங்கு தேடியும் கிடைக்காமல்- இறுதியில் தேடினேன் கிடைத்ததென் மனதில் மறைவில் !   கன்னிக் கவிதை கன்னியர் பார்வையால் கர்ப்பம் தரிப்பது காலங்கால உண்மை !   மரபு மாறாத அந்த சுகப்பிரசவம் என்னிலும் சுகமாய்ப் பிறந்ததில் சுவைதானே சொல்வதற்கு ! X அன்று.. என் பள்ளிப் பருவம் பதினாறாய் மலர்ந்தது !   துள்ளிப் பறந்தன கவிதைப் பட்டாம் பூச்சிகள் ! கள்ளிக் கண்களின் கடையோரப் பார்வையால்… முள்ளால் குத்தியக் கள்ளியின் பாலாய் வெள்ளியாய் பரந்தது மனதில் கூடவே…

விரதத்தின் நாட்கள் !

ஒரு மாதம் விரதத்தின் நாட்கள் ! வீணான எண்ணங்கள் விலங்கிடப் படட்டும் ! விரும்பத்தகாத வார்த்தைகள் விரட்டியடிக்கப் படட்டும் ! கருணையும், சாந்தியும் கஸ்தூரியாய் வாசம் வீசட்டும் ! பொறுமையும், அன்பும் பிறர்மீதும் பரவட்டும் ! வறுமையின் கோரம் வறியவர் மட்டுமன்றி வசதி படைத்தவரும் அறிய வரையறுப்பதுதான் நோன்பு…

ரமலான் நோன்பின் மாண்பு !

நோன்பு ! மனசாட்சியால் விதைத்த மனங்களின் விரதம் ! கட்டவிழ்ந்த விட்ட மனத்தை கைப்பிடிக்குள் கொண்டுவரும் நோன்பு ! பசியின் சோகத்தை பணக்காரர்களுக்கும் ருசியாய் பரிமாறி கட்டாயமாக்கிய ரமலான் ! உணவை மட்டும் துறப்பதா நோன்பு ? ஊனாசை உடம்பாசை பேராசை பொருளாசை ஒருசேர ஒத்திவைக்கப்பட்ட மாதம் !…