1. Home
  2. இலக்கியம்

Category: கவிக்கோ அப்துல் ரகுமான்

பதவி ! ——— கவிக்கோ அப்துல் ரஹ்மான்

எத்தனை பதவிவெறி இந்த மனிதருக்கு ? செத்தால் அதையும் சிவலோக பதவியென்பார் ! பத்தெடுத்த மாதங்கள் பாரம் சுமக்காமல் தத்தெடுத்துப் பிள்ளைக்குத் தாயானால் பெருமையுண்டா ? வித்தெடுத்துத் தூவி வியர்க்காமல், உமிச்சிப்பி முத்தெடுக்க முந்தும் மூடர்க்கு உரிமையுண்டா ? தகுதி இலாதார்க்குத் தரலாமா உயர் பதவி? சகதிக்கு எதற்காகத்…

கடவுளே பதில் சொல்வாய் ! (கவிக்கோ அப்துல் ரகுமான்)

1978ஆம் ஆண்டு காயல் பட்டினத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமை யில் நான் கலந்து கொண்ட முதல் கவியரங்கம் .அந்தக் கவியரங்கத்தில் கவிக்கோ அவர்கள் பாடிய அற்புதமான தலைமைக் கவிதை இது .இதுவரை எந்த ஊடகத்திலும் வெளிவராத இக்கவிதை  தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் -( பி எம் கமால் , கடையநல்லூர் ) கடவுளே…

நோன்பு

( கவிக்கோ அப்துல் ரகுமான் ) அருளின் தேவதை ஆண்டுக்கொருமுறை கால வீதியில்காலெடுத்து வைக்கின்றாள் -சாந்தியின் தூதாக ! அவள்தான் ரமழான் ! அவள் புன்னகையில் ஆயிரம்  பூர்ணிமைகள் !கண்களிலே கருணைச் சுடர்கள் ! அவள் நான்கு வேதங்களை ஈன்றளித்தபுனிதத்தாய் ! பாவக் கறைகளை அவள்பரிவோடு துடைக்கின்றாள் !…

கோடுகள்

கோடுகள் நாம் கோடு கிழிப்பவர்கள் கோடுகளால் கிழிக்கப்படுகிறவர்கள் சில கோடுகளை நமக்காகப் பிறர் கிழிக்கிறார்கள் சில கோடுகளை நமக்காக நாமே கிழித்துக்கொள்கிறோம் நாம் கோடுகளால் வரையப்படுகிறோம் கோடுகளால் அழிக்கப்படுகிறோம் நாம் கோடுகளின் அடிமைகள் நாம் கோடுகளாலேயே அறியப்படுகிறோம் ஓவ்வொருவரைச் சுற்றியும் இருக்கிறது இலக்குவனக் கோடு இராவணன் மட்டுமல்ல இராமனும்…