1. Home
  2. அதிரை கவியன்பன் கலாம்

Category: அதிரை கவியன்பன் கலாம்

மறைகூறும்…..

மறைகூறும் செய்திகளைப் பின்பற்ற ,,,,,மனிதகுலத்தில் முஸ்லிம்கள் ஆனோரே பிறைகூறும் செய்திகளாய்ப் பாவடிவில் ,,,,,பொழிகின்றேன் ஏற்பீரே தீனோரே! இருளகற்றி ஒளிவீசி வானில்நான் …..இருந்துகொண்டு பேசுகின்றேன் மானிடரே! அருள்வசந்தம் சுமந்துகொண்டு உங்களிடம் ….அகத்தினுள்ளே நீக்குகின்றேன் மாஇடரே! வரவேற்கக் காத்திருந்த நீங்களெல்லாம் …வாய்மையை மட்டுமுங்கள் வாய்களிலே உரமிட்டு வைத்திருந்து என்வரவை ….உற்சாகமாய்க் காணவந்தீர்…

காதலர் தின கவிதைகள்

காதலர் தின கவிதைகள் ==================== கண்ணில் மணியாய்க் கருவிழித் தன்னில் கடப்பதுபோல் எண்ணம் நிறைய இயங்கும் நினைவும் படர்ந்துளது மண்ணில் விழுந்த மழைநீர் உறைந்து மணம்தரும்போல் கண்ணில் அவளுரு காலம் முழுதும் கலந்துளதே. சித்திரம்போ லுன்றன் சிரித்த முகவெழில் முத்திரையாய்ப் பதிந்து முழுவது முள்வாங்கி நித்திரையைக் குலைத்தென்னை நித்தம்…

உருவத்தில் ……

உருவத்தில் நிறத்தில்நீ வேறு பட்டும் .. ..உள்ளத்தில் உணர்வுகளில் மனித நேயம் கருத்தில்நீ கொள்வதனால் புனிதம் காண்பாய் .. ..கண்முன்னே பல்லுயிர்கள் பசியால் வாட வருத்தத்தில் பங்கின்றித் திரிவர் தீயர்; ….வறியநிலை மண்டையிலே கொண்டோர் இங்கே! விருத்தத்தில் நானிங்குப் பாடி வைக்க …..விரும்பியவர் படித்துணர்ந்தால் என்றும் நன்றே! எல்லார்க்கும்…

சுகமாய் எழுந்து வா, சுர்ஜித்

அன்னையின் கருவறையில் அனுபவித்த கதகதப்பை அனுபவிக்கவே மீண்டும் ஆழ்குழாய் வழியாக பூமியன் கதகதப்பைக் காண புதைந்தாயோ குழந்தையே சுர்ஜித்! சட்டங்களும் விதிகளும் சரியில்லை என்பதை சரியாக உணரவேண்டும் மன்பதை பட்டங்கள் பெற்றவர்ட்குப் பாடங்களும் பயிற்சிகளும் பள்ளத்திலிருந்துச் சொல்கின்றாயோ? உள்ளங்கள் வேண்டுகின்றன பள்ளங்கள் தோண்டுகின்றனர் உறங்காமல் உண்ணாமல் இருக்கின்றனர் இறங்கிய…

“என்னமோ போ”

“என்னமோ போ” ================ சொல்ல முடியாத சோகம் நிறைந்திங்கு மெல்லக் கரைகின்ற வெற்றியும் __ இல்லையே ஆன்மீகக் கல்வி அனைத்துத் துறைகளில் மேன்மைகள் போயின மேலோர்கள் _ சான்றாகச் செந்தமிழும் மெல்லமெல்லச் சீரழியும் பாடலைத் தந்தவொரு நாடென்று தன்னிலை _ சிந்தனையே இல்லாத நம்மவர்கள் என்னதான் செய்வரோ? வெல்லதான்…

ஆதலினால் காதலிப்பீர்

ஆதலினால் காதலிப்பீர் ஆளும் கடவுளையும் ********************** காதலியின் கரம்பற்றிக் காதலினை உணர்ந்தோரே காதல் சுவைதன்னைக் காட்டிடுங்கள் காட்சியாய்; காதல் மணம்தன்னைக் காட்டிடுங்கள் நுகர்ந்தவாறு; காதல் வடிவத்தைக் காட்டிடுங்கள் கண்டதுபோல்; ”இல்லை; முடியாது” இதுவே விடையானால் ”இல்லை; காதலியுடன் இல்லை காதல்” விண்டிடத் துணிவு உண்டா காதலர்காள்! கண்டவர் விண்டிலர்…

தாயை விலக்கும் …….

தாயை விலக்கும் மகனை எண்ணி தாயும் வேதனை என் பாடல் வரிகளில். பாடல் மெட்டு: ” பொன்னை விரும்பும் பூமியிலே” என்னை விலக்கல் ஏன்மகனே உன்னை விரும்பும் தாயிவளே உதயம் ஆன பருவம் முதலாய் இதயம் ஆளும் ஓருயிரே! கண்ணை விலக்கிக் காட்சியுண்டோ என்னை விலக்க சாட்சியுண்டோ நிதமும்…

அரஃபாத்!

அரஃபாத்! வெள்ளுடையில் பாவக்கறை வெளுக்கும் வண்ணான் துறை ஆதி பிதாவும் அன்னையும் சந்தித்த “அருள்மலை”த் திடல் ஆகிரத்தின் “மஹ்ஷரை” நினைவூட்டும் மக்கள் கடல்! ஒருநிமிடமேனும் தரிபட நிறைவேறும் ஹஜ் எனும் பேறு கருவிலிருந்து பாவக் கறையின்றி வெளியாகும் சிசு போன்று ! கனவினை மெய்ப்டுத்த “கலீலுல்லாஹ்”அறிந்த இடம் “காத்தமுன்…

ஆஷிஃபா

ஆறுதல் கூற மனம் வலிக்குது ஆஷிஃபா உன் அலங்கோல காட்சி! மாறுதல் வேண்டியதற்கு மகா மிருகங்கள் ஆட்சி? இந்தியாவின் மானம் இந்து கோவிலில் வைத்துக் கற்பழிப்பு!! இந்த நாட்டில் வாழ்வதா ? வெந்து வெந்து சாவதா என்பதே இப்போது நினைப்பு! இத்தனைக் கொடுமைகள இரக்கமின்றிச் செய்யும் இந்துத்துவா இந்தியாவுக்குத்…

கரையும் கடலும்

கண்டதும் காதற் கடலில் விழுவோரே கண்டது மிந்தக் கரையும் அலையும்போல் விண்டதும் தீர்ந்து விலகியே செல்கின்ற உண்டு மறக்கும் உணர்வு. _அதிரை கவியன்பன் கலாம், துபை