1. Home
  2. பயனுள்ள தகவல்கள்

Category: பயனுள்ள தகவல்கள்

திருவனந்த புரம் அரசு மருத்துவமனை

# அன்பு_நண்பர்களே…!!! 4-5 நாட்களுக்கு முன் நன்றாக இருந்த என் நண்பனின் அத்தை ( வயது 51) திடீர் என்று மயக்கம் போட, கோவையில் உள்ள பிரபலக்கல்லுரியின் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.  மூளையில் ரத்தக்கசிவு,உடனே அறுவை சிகிச்சை, 8ல் இருந்து 10 லட்சம் ஆகும் என அறிவித்தனர். மிரண்டு போன நண்பனின் மாமா செய்வதறியாமல் திகைத்த நிலையில்… அங்கேயே இருந்த ஒரு நல்லிதயம் கொண்ட மருத்துவர் ஒரு நல்ல ஆலோசனை வழங்கினார். “மிகச்சிக்கலான இந்த அறுவைச் சிகிச்சை இங்கே மாதம் ஒன்றோ இரண்டோ நடக்கும் நிலையில், தினமும் ஐந்து -பத்து சாதாரணமாக நடக்கும் திருவனந்த புரம் அரசு மருத்துவமனைக்கு ( Thirvendram Medical college Hospital) உடனே எடுத்துச்செல்லுங்கள்”, எனக்கூறினார். உடன், ஒரு கடிதமும் வாங்கிக்கொண்டு ஆம்புலன்ஸில் விரைந்து காலையில் அட்மிட் செய்துள்ளனர். உடனே, அட்மிஷன் செய்து நோயாளியின் தன்மைக்கேற்ப பரிசோதனைகள் செய்து, அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் மட்டும் வாங்கித் தரச்சொல்கின்றனர்.( ஒரு 40000 to 60000 ஆகலாம்). டாக்ட்டர் ஃபீஸ் இல்லை. சரியாகி வீடு திரும்பும்வரை அட்மிஷன் தருகிறார்கள். உணவு,மருந்து மாத்திரைகள் நாமே வாங்கிக் கொள்ளவேண்டும். நண்பர்களே, ஏதோ நம் ஊர் அரசு மருத்துவமனையை மனதில் நினைத்துக்கொண்டு அசிரத்தையாக இருக்காதீர்கள். உலகத்தரம் வாய்ந்த, இராணுவக் கட்டுப்பாடுடன் கூடிய மருத்துவமனை அது.  இதயம்,நரம்பு, மூளை போன்ற மிகச்செலவு பிடிக்கும் வியாதிகளுக்கு  மிக மிகச் சிறப்பான , செலவு மிக மிகக் குறைவாக ஆகும் மருத்துவமனை. அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ரேஷன் அட்டை, ஆதார் அட்டை கொண்டு செல்லுங்கள். நகை நட்டை விற்று, வீடு தோட்டம் விற்று, நீண்ட நாள் சேமிப்பை இழக்காமல் சிறந்த  சிகிச்சையைப் பெறலாம். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.   Trivandrum Medical College Hospital Casualty Enquiry Number 0471 –…

பாலஸ்தீன விடுதலை இயக்கம்

மே 28,1964 – PLO -பாலஸ்தீன விடுதலை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வமைப்பு அரபு லீக் இனால் உருவாக்கப்பட்டதாகும். இதன் நிறுவனத் தலைவராக யாசர் அராபத் பதவி வகித்தார். இவ்வமைப்பினுடைய துவக்க கால குறிக்கோள், ஆயுதப்போராட்டம் ஒன்றின் மூலம் இஸ்ரேல் நாட்டு அரசினை அழித்தொழித்து சுதந்திர பலஸ்தீன நாட்டினை ஜோர்தான்…

நேருவின் ஒரு நாள்!

நேருவின் ஒரு நாள்!   ஜவாஹர்லால் நேரு இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தி தலைமையில் பல போராட்டங்களில் ஈடுபட்டு 3,256 நாட்கள் – ஏறத்தாழ ஒன்பதரை ஆண்டுகாலம் சிறையில் இருந்தார். 1947-ல் இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்ற அவர், 1964 -வரை 16 ஆண்டுகாலம் இந்தியாவை வளர்த்தெடுத்தார். பேராற்றல் மிக்க இந்த மனிதர் தன்னுடைய ஒரு நாளை எப்படிச் செலவிட்டார்? பத்திரிகைகளைப் படிப்பதற்கும், யோகா பயிற்சிக்கும்.. ஒரு நாளைக்கு சராசரியாக வரும் 500 கடிதங்களையும் தந்திகளையும் படிக்க.. வெளிநாட்டுத் தூதுவர்கள், அமைச்சரவை சகாக்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என்று முடிவில்லாமல் வந்துகொண்டே இருப்பவர்களைச் சந்திக்க..  மலைபோல் குவிந்திருக்கும் கோப்புகளைப் படிக்க..  உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உடனடியாக முடிவெடுக்க வேண்டிய விஷயங்கள் பலவற்றைக் கவனிக்க.. நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களின்போது மதியம் வரை அவையில்.. முக்கியமான விவாதங்களானால் முடியும் வரை அவையில்.. அமைச்சரவைக் கூட்டம், கட்சியின் கூட்டங்கள் .. -என தினமும் 16 மணி நேரம் இடைவெளி இல்லாமல் உழைத்தவர்.  இரவு 2 மணிக்குத் தூங்கச் சென்றாலும் காலை வழக்கமான நேரத்தில் எழுந்துவிடுபவர். நேருவின் இவ்வளவு அர்ப்பணிப்புமிக்க உழைப்புக்குக் காரணம் அவர்  மக்கள் மீது கொண்டிருந்த அன்பும், இந்தியாவின் எதிர்காலம் மீது கொண்டிருந்த கனவும்தான்! – ஆ.கோபண்ணா, ஆசிரியர், தேசிய முரசு. (மே 27: நேரு நினைவு தினம்)

அண்ணாகண்ணன் யோசனைகள்

எனது அண்மைக் கால யோசனைகள் சிலவற்றை இங்கே பகிர்ந்துள்ளேன். உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். —————————–——————————————————————– அண்ணாகண்ணன் யோசனைகள் 40 – கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? https://youtu.be/kMEXR8trg7Y Annakannan Ideas 41: Smart Bin https://youtu.be/v7wo8Ka-ddY அண்ணாகண்ணன் யோசனைகள் 42: Fake ID-களைத் தவிர்ப்பது எப்படி? https://youtu.be/OCGk-93V7gE Annakannan Ideas 43: Add…

கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு

ஞாலம் ‘கவிதைக் குரல்கள்’ கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு சென்னையில் செயல்பட்டு வரும் ஞாலம் இலக்கிய இயக்கம் ஆண்டுதோறும் பாவேந்தர் விழாவை முன்னிட்டு ஒரு கவிதைத் தொகுப்பினை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு மகுடை (கோரானோ) தாக்கத்தின் காரணமாகத் தாழ்ச்சியாக வெளிவர இருக்கிறது. ‘கவிதைக் குரல்கள்’ என்னும் தலைப்பில் வெளிவர இருக்கும் இந்தக் கவிதைத் தொகுப்பிற்குக் கவிஞர்கள் தாங்கள்…

செந்தமிழ் மாணவர் மன்றம்

செந்தமிழ் மாணவர் மன்றம் புரட்சி கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான போட்டிகள் (29-04-2020 முதல் 05-05-2020 வரை) தமிழ்நாடு அளவில் நடத்தப்படுகிறது. அனைத்துக் கல்லூரி மாணவர்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். போட்டிகள்: 1. கவிதை 2. கட்டுரை 3. ஓவியம் தலைப்பு: (மூன்று போட்டிக்கும்…

ஏப்ரல் 17: வீரன் தீரன் சின்னமலை பிறந்த தின சிறப்பு பகிர்வு

ஏப்ரல் 17: வீரன் தீரன் சின்னமலை பிறந்த தின சிறப்பு பகிர்வு வீரம் வீரம் என்கிறார்களே அதற்கான அசல் அடையாளமாக திகழ்ந்த தமிழகத்து வீரன் தீரன் சின்னமலை பிறந்தநாள் இன்று .காங்கேயம் அருகில் உள்ள மேலப்பாளையத்தில் பிறந்த இவர் ஹைதர் அலி ஆண்டு கொண்டிருந்த காலத்தில் இவரின் பகுதியில்…

முஸ்லிம் லீக்கின் வேட்பாளராக டாக்டர் அம்பேத்கர்…….

முஸ்லிம் லீக்கின் வேட்பாளராக டாக்டர் அம்பேத்கர்……. 1946ம் ஆண்டு சுதந்திரத்திற்கு முன்பாக நடைபெற்ற அரசியல் நிர்ணய சபை தேர்தலில் பம்பாயில் இருந்த பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களை காங்கிரஸ் கட்சி கைவிடாது, அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் ஆவதற்கு நிச்சயம் வாய்ப்பு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்…

இன்றைய தினம் – மார்ச் 31

இன்றைய தினம் – மார்ச் 31 1889 – ஈபெல் கோபுரம் தொடக்க விழா கொண்டாடப்பட்டது. 1918 – ஐக்கிய அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது. 1931 – நிக்கரகுவாவின் தலைநகரமான மனாகுவாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். 1959 –…

மதுவுக்கெதிராக 1970 களில் வந்த இனிமையான இலங்கைத் தமிழ் பாடல்

Dr. நித்தி கனகரத்தினம் அவர்கள் பாடிய “கள்ளுக்கடை பக்கம் போகாதே” என்ற பாடல். மதுவுக்கெதிராக 1970 களில் வந்த இனிமையான இலங்கைத் தமிழ் பாடல் https://www.youtube.com/watch?v=LRakBAp-Qfs சின்ன மாமியே நித்தி கனகரத்தினம் https://ourjaffna.com/cultural-heroes/சின்ன-மாமியே-நித்தி-கனகர