1. Home
  2. பயனுள்ள தகவல்கள்

Category: பயனுள்ள தகவல்கள்

சுத்தமான நகரத்துக்கு இலக்கணம் எது?

அறிவியல்   சுத்தமான நகரத்துக்கு இலக்கணம் எது?   இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஜூன் மாதத்தில் வீடு வசதி, நகர்ப்புற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சகம், ஸ்வச் சர்வேக்ஷன்-2018 ( மத்திய அரசின் திட்டங்களுக்கான பெயர்கள் எல்லாம் சுத்தமான இந்தியில் மட்டும்தான் இருக்க வேண்டுமா? கூடவே ஆங்கிலத்திலும் இருந்தால் தேசகௌரவம் குறைந்தா போய்விடும்?) என்ற அறிக்கையை வெளியிட்டது.  துப்புரவு மற்றும் நகராட்சியின்…

சரோஜ் நாராயண் ஸ்வாமி ..

ஆல் இண்டியா ரேடியோ .. செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் ஸ்வாமி .. TV காலத்துக்கு முந்தையவர், எங்களை ப்போல. இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இவரின் இன்முகம் காண்போமே .. ! வயது 85 இந்த உலகில் அழகால் அறியப்படுபவர்களுக்கு இணையாக குரலால் அறியப்பட்டு, அழியாப் புகழ்…

நம் கையில் இருப்பது ஒரே ஒரு புவிக் கோள்..

நம் கையில் இருப்பது ஒரே ஒரு புவிக் கோள்..   கடந்த இருபதாண்டுகளில் சூழலியலாளர்களிடையே அதிகம் உச்சரிக்கப்பட்ட சொற்கள் புவிவெப்பமாதல், பருவநிலை மாற்றம், பசுங்குடில் விளைவு, கரிம உமிழ்வு போன்றவையாகும். இந்தச் சொற்கள் நம் அன்றாடத்தின் ஒரு பகுதியாக மாறவில்லை என்றாலும் அவை குறிப்பிடும் விளைவுகள் நம் அன்றாடத்தை வெகுவாகப் பாதித்துவருகின்றன. எனினும், இதற்கெல்லாம் நான் காரணமில்லை என்பதுபோல்தான்…

மெட்ராஸின் சிவப்பு நிற பேரழகு கட்டிடங்கள்

மெட்ராஸின் சிவப்பு நிற பேரழகு கட்டிடங்கள்  – கரன் கார்க்கி ரிப்பன் மாளிகை செந்நிற கட்டிடங்களைப் பற்றி பேசத்தான் துவங்கினோம். ஆனால் அந்த கட்டிடங்களின் மூல ஊற்றான அரை வெள்ளை நிற ஜார்ஜ் கோட்டையைப் பேச வேண்டிய அவசியம் பற்றி நான் என்ன சொல்வது? உங்களுக்கே தெரியும்.  கடந்த…

பனையும் முருங்கையும்

“பனையும் முருங்கையும்” – ஊருக்கு ஒரு தோப்பு உருவாக்குவோம் _________________________________________ செப்டம்பர் 23 ம் தேதி, புதன் கிழமை, 2020 தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு வழங்கும் _________________________________________ “பனையும் முருங்கையும்” – ஊருக்கு ஒரு தோப்பு உருவாக்குவோம் நிகழ்ச்சி யூடியூப் காணொளியாக https://youtu.be/5meAVbnXOdU —–

கடலோடி நரசய்யாவுடன் கடலாடுவோம்!

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்தும் இணையவழி உரைத்தொடர்  நிகழ்ச்சி கடலோடி நரசய்யாவுடன் கடலாடுவோம்! சிறப்புரை  உரைத்தொடர் (31/8/2020 – 4/9/2020) யூடியூப்  காணொளிகளாக .. .. .. 1. கடற்படை அனுபவங்கள்  – கடலோடி நரசய்யா https://youtu.be/_e7vw4b7K20 2. வணிகக் கப்பல்கள் அனுபவங்கள் https://youtu.be/Mm8GI3MdyDI 3.…

பொதுப்போக்குவரத்து முடக்கம்.. ஏழைகள் மீதான வன்முறை

பொதுப்போக்குவரத்து முடக்கம்.. ஏழைகள் மீதான வன்முறை   கரோனாவின் பிறப்பிடமான சீனாவின் வூஹானில் பொதுப் போக்குவரத்து இயங்குகிறது. உலகிலேயே மோசமாகப் பாதிக்கப்பட்ட அமெரிக்காவிலும், இந்தியாவிலேயே மோசமாகப் பாதிக்கப்பட்ட மஹாராஷ்டிரத்திலும்கூடப் பொதுப்போக்குவரத்து இயக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பொதுப்போக்குவரத்தை முடக்கி வைத்திருப்பதன் மூலம், மக்களைப் பார்த்து நாமும் அரசும் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பது ஒன்றே ஒன்றுதான், “சொந்த வாகனம் இல்லாதவர்கள் வாழத் தகுதியில்லாதவர்கள்!” தமிழ்நாட்டில் மார்ச் 22 அன்று நிறுத்தப்பட்ட பொதுப்போக்குவரத்து, ஐந்து மாதங்களாகியும் இன்னும் தொடங்கப்படவில்லை. இடையில் ஜூன் 1 முதல் மாவட்டம், மண்டலத்துக்குள் பேருந்து இயக்கப்படும் என்று அறிவித்த தமிழக அரசு, ஓரிரு வாரங்களிலேயே அதையும் முடக்கிவிட்டது. பொதுப்போக்குவரத்து முடக்கத்தால் வேலையையும் வருமானத்தையும் இழந்து, வறுமையில் வாடிக்கொண்டிருப்போரின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டும். நசுக்கப்படும் ஏழைகளின் குரல் இ-பாஸ் பிரச்சினை நடுத்தர வர்க்கத்தின் பிரச்சினை என்பதால், ஓரளவுக்கு அது ஊடகங்களிலும், அரசியல் அரங்கிலும் எதிரொலித்தது. ஆனால், “பஸ் எப்ப விடுவாங்க அய்யா?” என்று கேட்கும் ஏழைகளின் குரலை, “அறிவிருக்குதா? பஸ் விட்டா கரோனா பரவிடாதா?!” என்று நசுக்கிக்கொண்டிருக்கிறோம் நாம். தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டிருந்த 22 ஆயிரம் பேருந்துகளில், தினமும் விற்பனையாகும் பயணச்சீட்டுகளின் எண்ணிக்கை 2.10 கோடி. அதில் முக்கால்வாசி டிக்கெட்டுகள், நகர்ப் பேருந்துகளில் கிழிக்கப்படுபவை. தங்கள் வருமானத்துக்கும், வாழ்க்கைத் தரத்துக்கும் பொதுப்போக்குவரத்தே சிக்கனமானது, பாதுகாப்பானது என்பது பொதுமக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. பொதுப்போக்குவரத்து கைவிட்டதால், அதில் பாதிப் பேர் வீட்டில் முடங்கிக் கிடக்கிறார்கள். கட்டுமானப் பணி, சிறு மில்கள், தீப்பெட்டி, பஞ்சாலைகள் போன்றவற்றில் அன்றாடக் கூலி வேலைக்குச் செல்வோரை முற்றாக முடக்கியிருக்கிறது பொதுப்போக்குவரத்து முடக்கம். குறிப்பாக, பெண்களின் வேலைவாய்ப்பை அடியோடு ஒழித்துக் கட்டியிருக்கிறது. திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் சுருங்கிவிட்டன. கோயில்களில் விழாக்களோ வழிபாடுகளோ இல்லை. எனவே, இப்போது புறநகர்ப் பேருந்துகளின் தேவை குறைந்துவிட்டது. ஆனால், நகர்ப் பேருந்துகளின் தேவை கொஞ்சம்கூடக் குறையவில்லை. பேருந்து இல்லாததால் நிறையப் பேர் ஷேர் ஆட்டோக்களில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆட்டோவும் தன்னை ஒரு பேருந்தாகப் பாவிக்கத் தொடங்கியிருக்கிறது. முக்குக்கு முக்கு போக்குவரத்துக் காவலர்கள் நிற்கும் மதுரை போன்ற பெருநகரங்களிலேயே டீசல் ஆட்டோக்கள் 10, 12 பேரை ஏற்றிக்கொண்டு பறக்கின்றன. கரோனா அபாயம், விபத்து பயத்தைவிட வாழ்ந்தாக வேண்டும் எனும் உந்துதலே அவர்களை இப்படியெல்லாம் பயணிக்க வைக்கிறது. கிராமத்துப் பெரியவர்கள் காலை 8 மணிக்கு ஒரு டவுன் பஸ்ஸில் ஏறி, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குப் போய், ஊசி போட்டுக்கொண்டு மாத்திரையும் வாங்கி வந்துவிடுவது வழக்கம். ஆரம்ப சுகாதார நிலையமெல்லாம் நமக்குச் சரிவராது, டவுன் தர்ம ஆஸ்பத்திரியில்தான் நன்றாகப் பார்ப்பார்கள் என்கிற கூட்டத்துக்கும், அரசுப் பேருந்துகள்தான் உதவும். இந்நிலை இப்படியே தொடர்ந்தால், மீண்டும் போக்குவரத்து தொடங்கப்படும் காலத்தில் நம்முடைய பழைய பேருந்துகளில் எத்தனை பேருந்துகள் நகரும் என்ற சந்தேகம் போக்குவரத்து ஊழியர்களுக்கே இருக்கிறது. இன்னொருபுறம், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நஷ்டம் கைமீறிப் போய், ஒட்டுமொத்தமாகத் தனியாருக்குத் தாரை வார்க்கப்படக்கூடிய சூழலும் வரலாம். கரோனா காலத்தில் ரயில்களைத் தனியாருக்குத் தாரை வார்த்துக்கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு. அரசுப் போக்குவரத்துக் கழகத்தை என்ன செய்யக் காத்திருக்கிறது தமிழ்நாடு அரசு என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை! – ஆகஸ்ட் 28 தமிழ் இந்துவில் கே.கே.மகேஷ் எழுதிய கட்டுரையிலிருந்து ………………………………………………………………………………………………………………………

பாலாவின் சங்கச்சுரங்கம்

பாலாவின் சங்கச்சுரங்கம் இணையப் பத்து – முதலாம் பத்து _____________________________________________ 1 – பாலாவின் சங்கச்சுரங்கம் – தொடக்க உரை https://youtu.be/CvKR-6GchLM?t=342 2 – பசிப்பிணி மருத்துவன் https://youtu.be/uXP7rZw0jmo 3 – பிறர்க்கென முயலுநர் https://youtu.be/3qXWGHshdUA 4  – பருத்திப் பெண்டிர் https://youtu.be/SyootbPJjBo  5 – கடவுள் ஆயினும்…