1. Home
  2. கலந்துரையாடல்

Category: கலந்துரையாடல்

இந்தி பற்றி அதிகம் அறியப்படாத 10 உண்மைகள்!

இந்தி பற்றி அதிகம் அறியப்படாத 10 உண்மைகள்! [https://i.ytimg.com/vi/QiUih_BhXl0/maxresdefault.jpg]   இந்தி பற்றி அதிகம் அறியப்படாத 10 உண்மைகள்! https://youtu.be/QiUih_BhXl0

மாதச் சம்ளக்காரர்கள் 1 கோடியே 89 லட்சம்பேர் வேலையிழப்பு

மாதச் சம்ளக்காரர்கள் 1 கோடியே 89 லட்சம்பேர் வேலையிழப்பு   கடந்த மார்ச் 25 அன்று பொதுமுடக் கம் அமல்படுத்தப்பட்டது தொடங்கி, ஜூலைமாதம் வரையிலான 4 மாத காலத்தில்,1 கோடியே 89 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக பொருளாதாரக்கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy – CMIE) புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. முக்கியமாக, இவர்கள் அனைவரும் முறைசாரா தொழிலாளர்கள் அல்ல; மாறாகநிலையான சம்பளத்தில் (Salaried Jobs) பணியாற்றி வந்தவர்கள் என்ற அதிர்ச்சித்தகவலையும் சிஎம்ஐஇ வெளியிட்டுள்ளது.அதாவது, கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த ஏப்ரல் – மே காலத்தில், முறைசாரா கூலித் தொழிலாளர்கள் மட்டுமே (Informal Sector) அதிகமான அளவில்வேலையிழந்தனர். தற்போதோ நிலையான சம்பளம் பெற்ற ஊழியர்களும் (Salaried Jobs) சுமார் 1 கோடியே 89 லட்சம்பேர் வேலையை இழந்துள்ளதாக பொருளாதாரக் கண்காணிப்பு மையம் குறிப்பிட்டுள்ளது. சிஎம்ஐஇ அமைப்பின் தரவுகள்படி ஏப்ரல் மாதத்தில் நிலையான சம்பளத்தில்இருக்கும் 1.77 கோடி பேர் வேலைவாய்ப்பைஇழந்துள்ளனர். மே மாதத்தில் 1 லட்சம்பேரும், ஜூலை மாதத்தில் 50 லட்சம் பேரும்வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். ஜூன் மாதத்தில் 39 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. இறுதியாக கடந்த 4 மாதங்களில் ஒட்டுமொத்தமாக வேலைவாய்ப்பை இழந்தவர்களின் எண்ணிக்கை 1.89 கோடி என்றுசிஎம்ஐஇ கூறியுள்ளது.இந்தியாவின் மொத்த வேலைவாய்ப்புச் சந்தையில், நிலையான வேலைவாய்ப்புகளைக் கணக்கில் கொண்டால், அவை வெறும் 21 சதவிகிதம்தான். இதுமுறைசாரா துறையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையை விட மிகக் குறைவுதான்.ஆனால் இந்த 21 சதவிகித வேலைவாய்ப்புகள்தான், நாட்டின் பொருளாதாரம் மற்றும்வர்த்தகச் சந்தை கட்டமைப்பிற்கு மிகவும்முக்கியமானது என்று சிஎம்ஐஇ தெரிவிக்கிறது.   நகர்ப்புற வீடுகளில் உள்ளவர்கள் தங்கள் மாதச் செலவுகளைக் குறைத்து, குறைவாக செலவு செய்கின்றனர் என்பதற்கான தரவுகள் பல்வேறு அறிக்கைகளில் உறுதியாகி இருக்கும் நிலையில், நகர்ப்புறங்களின் தேவை தொடர்ந்து குறையுமானால், அது முறைசாரா மற்றும் கிராமப்புற பொருளாதாரத்திலும் கடுமையான பணப்புழக்கத் தட்டுப்பாட்டை உருவாக்கும்; இது நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத் தும் என்று எச்சரிக்கிறது.ஏற்கெனவே, பணவீக்கம், மொத்தஉள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி, தொழிற்சாலைசெயல்பாட்டுத் தரவு மற்றும் நிதிப் பற்றாக் குறை போன்ற முக்கிய குறிகாட்டிகள் தொடர்ந்து கவலையளிக்கும் விதமாகவே இருக்கின்றன என்பதையும் சிஎம்ஐஇ நினைவுபடுத்தியுள்ளது.   நமது நாட்டைப் பொறுத்தவரை, நிலையான சம்பள வேலைவாய்ப்புகள் எளிதாககைவிட்டுப் போகக்கூடியன அல்ல. ஆனால் ஒருமுறை  இந்தச் சம்பள வேலைவாய்ப்புகள் பறிபோனால் திரும்பப் பெறுவது என்பது சாத்தியமற்றது என்று கூறும் பொருளாதாரக் கண்காணிப்பு அமைப்பு, முறைசாரா துறை மற்றும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு ஏப்ரல் மாதத்திலிருந்து அதிகரித்துள்ளது; ஆனால், நிலையான வேலைகளில் முன்னேற்றம் இல்லைஎன்ற யதார்த்த நிலையையும் பதிவு செய்துள்ளது.

பயிர்க் காப்பீடும், பரிதவிக்கும் விவசாயிகளும்..

பயிர்க் காப்பீடும், பரிதவிக்கும் விவசாயிகளும்..   இன்சூரன்ஸ் துறையில் தனியாரை, பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்கும் போது சாமானிய மக்களுக்கு பயனளிக்கும் என்றுதான் சொன்னார்கள். ஆனால் அனுபவம் என்ன?  இதோ எந்த மாநிலத்தை இன்றைய ஆட்சியாளர்கள் “மாடல் மாநிலம்” என்றார்களோ அந்த மாநிலத்தின் அனுபவம் இது. இந்து பிசினஸ் லைன் (11.08.2020) இதழின் முதல் பக்க செய்தி இது. குஜராத் மாநில அரசும் பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டத்தை விட்டு வெளியேறுகிறது… பிரீமிய சுமை தாங்க முடியவில்லையாம்_ “என்பது தலைப்பு. “பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்” 2016ல் குஜராத்தில் அமலுக்கு வந்தது. இவ்வாண்டு இன்சூரன்ஸ் பிரீமியங்களுக்கான டெண்டர்கள் மிக மிக அதிகமான பிரீமியத்தை கோரியதால் இத் திட்டத்தை விட்டு வெளியேறுவதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. குஜராத் முதல்வர் விஜய் ரூபானி  “ரூ.4500 கோடி பிரீமியம் கேட்கிறார்கள். இது மிக அதீதம்” என்று சொல்லி இவ்வாண்டு பயிர்க் காப்பீட்டில் இணையப் போவதில்லை என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டு குஜராத்தில் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி, யுனிவர்சல் சாம்போ, பாரதி ஆக்சா போன்ற தனியார் நிறுவனங்களோடு இந்திய விவசாயக் காப்பீட்டு நிறுவனமும் சேர்ந்து பயிர்க் காப்பீடு வழங்கின.  ஏற்கெனவே பீகாரும், மேற்கு வங்காளமும் இத்திட்டத்தில் இருந்து வெளியேறி விட்டன. பஞ்சாப் இந்த திட்டத்திற்குள் வரவேயில்லை. ஆரம்ப காலங்களில் நிறைய விவசாயிகள் வெளியேறிய செய்திகள் வந்தன. இப்போது மாநிலங்களே வெளியேறுகின்றன. லாபம் வந்தால் அரசு நிறுவனம் விலகி நிற்க வேண்டும். லாபம் வராது என்ற நிலை ஏற்பட்டால் தனியார் நிறுவனங்கள் பயிர்க் காப்பீட்டில் இருந்து வெளியேறிவிடும் என்பதற்கும் சாட்சியங்கள் உள்ளன. 2019 காரீஃப் சீசன் டெண்டர்களில் ஐ.சி.ஐ.சி.ஐ- லாம்பார்டு, டாட்டா ஏ.ஐ.ஏ, சோழமண்டலம் எம்.எஸ், ஸ்ரீராம் ஆகிய நான்கு கம்பெனிகளும் பங்கேற்கவில்லை. பருவமழை பொய்க்கும் என்றால் ஓடிப் போய் விடுவார்கள் போலிருக்கிறது. விவசாயிகள் தாம்புக் கயிறை நாடுகிற தருணங்களில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்கக் கயிறை தாயத்தாக கட்டிக் கொண்டார்கள் என்று நினைக்க வேண்டியுள்ளது. இதில் தாமதம், இழுத்தடிப்பு தனிக் கதை. நவம்பர் 2019 ல் இருந்த நிலைமை இது. 2018 க்கான உரிமங்களில் ரூ.2511 கோடிகள் (16%) நிலுவையில் இருந்தன. 2019 ஏப்ரலில் கோரப்பட்ட உரிமங்களில் ரூ.1269 கோடிகள் (26%) நிலுவையில் இருந்தன. உரிய நேரத்தில் விவசாயிகளின் துயரை துடைப்பதிலும் தோல்வி.  அதுவும் பிரதமரின் “செல்லம்” குஜராத்தே இப்போது வெளியே போகிறது. (ஆகஸ்ட் 14 தீக்கதிரில் ஆயுள் காப்பீட்டு ஊழியர் சங்கப் பொறுப்பாளர் க. சுவாமிநாதன் எழுதிய கட்டுரையிலிருந்து)

ஒரு புட்டித் தண்ணீர்

ஒரு புட்டித் தண்ணீர் ஒரு மாதத்திற்கும் மேலாகப் பார்க்கிறேன் மஸ்ஜிதின் நுழைவாயிலில் ஆடாமல் அசையாமல் ஒரு பாட்டில்; அதில் தண்ணீர். ‘யாரோ வைத்துவிட்டு மறந்துவிட்டார்களோ, இந்த ஊரில் யார் இப்படியான பாட்டிலில் தண்ணீர் சுமக்கிறார்கள், ஒருவேளை ஜம்ஜம் தண்ணீரோ, இல்லையே இந்த முறை வெளிநாட்டவருக்கும் ஹஜ் இல்லையே…’ இப்படியாக…

வேண்டுவது அட்டை அல்ல..மருத்துவம்

வேண்டுவது அட்டை அல்ல..மருத்துவம்   சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி இந்திய சுகாதாரத்துறை யில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில் தேசிய டிஜிட்டல் சுகாதாரத்திட்டம் துவக்கப்படும் என்றும் அனைவருக்கும் தனித்தனி மருத்துவ அட்டை வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.   ஏற்கெனவே ஆதார் அட்டையை அறிமுகப் படுத்தியபோதும் இதுஒரு மிகப்பெரிய புரட்சி என்றுதான் வாய்ப்பந்தல்போட்டார்கள். ஆனால் நடைமுறையில் பல்வேறு குளறுபடிகளை  அந்தத் திட்டம் உருவாக்கியது மட்டுமல்ல, குடி மக்களுக்கு அதனால் பெருமளவு பலன் எதுவும் இல்லை என்பதே நமது அனுபவமாகும். இன்னமும் கூட இந்தியாவில் மருத்துவ வசதி பெறாத கிராமங்கள் உள்ளன. அதற்கு முன்னுரிமை தராமல் இன்னும் சொல்லப்போனால் ஒட்டுமொத்த சுகாதாரத்துறை யையும் தனியாருக்குத்தர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் நிலை யில் ஆளுக்கொரு மருத்துவ அட்டையை வைத்துக்கொண்டு என்ன செய்வது? ஏற்கெனவே இருக்கிற அட்டைகளில் மேலும் ஒன்று கூடும். அவ்வளவுதான்.   பொது சுகாதாரத்திற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் மூன்று சதவீத மாவது ஒதுக்கிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவதை நிறைவேற்றத் தயாராக இல்லாத மத்திய அரசு மேலும் ஒரு அட்டையை அறிமுகப்படுத்துவதையே தன்னு டைய சாதனையாகக் கருதுகிறது.   ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங் களை தனியாருக்கு தந்து கொண்டிருக்கும் பிரதமர் மோடி, சுயசார்பு இந்தியா என்ற கனவை  நனவாக்க 130 கோடி இந்தியர்களும் உறுதி மொழி ஏற்க வேண்டும் என்று தன்னுடைய உரை யில் கூறியிருக்கிறார். பொதுத்துறை நிறுவன ங்கள் அனைத்தையும் அழித்துவிட்டு, நாட்டின் சுற்றுச்சூழல், இயற்கைவளம் அனைத்தையும் சூறையாட வழிசெய்து விட்டு சுயசார்பு இந்தியா என்று முழக்கமிடுவதால் மட்டும் என்ன லாபம்? இப்படியே போய்க்கொண்டிருந்தால் சுயசார்பு என்பது வெறும் கனவாகவே மாறிவிடும்.   கடந்த ஆண்டு சுதந்திர தினவிழாவின்போது ஜல் ஜீவன் என்ற திட்டத்தை அறிவித்தேன்; இதன் மூலம் ஒவ்வொரு நாளும் சுமார் ஒரு லட்சம்  வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது என்று கொஞ்சம் கூட கூச்சப்படாமல் பிரதமர் மோடி கூறியிருக்கிறார். ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வீட்டுக்கு குடிநீர் இணைப்பு தரப்பட்டிருந்தால் அதன் மொத்தக் கணக்கை மத்திய அரசு வெளியிடட்டும்.   சுயசார்பு இந்தியாவை உருவாக்குவதன் ஒரு பகுதியாகவே புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படுகிறது என்றும் பிரதமர் கூறியுள்ளார். இந்தியாவின் கூட்டாட்சித் தன்மைக்கு எதிராக மொழித் திணிப்பையும், கல்வித்துறையை கொஞ்சம் கொஞ்சமாக தனியாரிடம் தருவதை நோக்கமாகக் கொண்டும், கல்வித்துறையை மதவெறிமயமாக்குவதை இலக்காகக் கொண்டும்  உருவாக்கப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கை சுயசார்பு இந்தியாவை உருவாக்கப்பயன்படாது. மாறாக அறிவு வளர்ச்சியை பல நூற்றாண்டுகள் பின்னுக்குத் தள்ளும் என்பதே உண்மை.  ஆகஸ்ட் 15 கொரோனா தடுப்பு மருந்துஅறிமுகப் படுத்தப்படும் என்று ஏற்கெனவே கூறியிருந் ததை மட்டும் பிரதமர் வசதியாக மறந்துவிட்டார். (நன்றி ஆகஸ்ட் 17 தீக்கதிர் நாளிதழின் தலையங்கம்)

பேரிடர் காலத்தில் மக்களின் சேவை

பேரிடர் காலத்தில் மக்களின் சேவை கேரளம் ஒரே நேரத்தில் மூன்று பேரிடர்களை சந்தித்துள்ளது. 1. கோவிட் தொற்று. 2. பெரு மழை/ வெள்ளம் மற்றும் நிலச்சரிவு. 3. கோழிக்கோடு விமான விபத்து. இந்த பேரிடர்களை எதிர்கொண்டு மீள்வதற்கு அசாத்திய நம்பிக்கையும் வலிமையும் தேவை. அத்தகைய நம்பிக்கையையும் வலிமையையும் கேரளாவில்…