1. Home
  2. கலந்துரையாடல்

Category: கலந்துரையாடல்

பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் விதம் இதுதானா?

பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் விதம் இதுதானா?   பெண்களுக்கு அதிக அதிகாரம் வழங்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் பாஜ/க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட துர்கா பூஜை நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்து பேசிய அவர், பெண்கள் பாதுகாப்பு குறித்து…

அப்துல் கலாம் அவர்களின் மகத்துவம்

அப்துல் கலாம் அவர்களின் மகத்துவம்.   டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதியாக இருந்தபோது, அவர் தமிழகத்தில் இருக்கும் குன்னூருக்கு விஜயம் செய்து இருந்தார். அப்போது பீல்ட் மார்ஷல் சாம் மானேக்சா அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது அவருக்கு தெரிய வந்ததுள்ளது.   டாக்டர் அப்துல் கலாம் அவர்களின்…

இந்தியாவின் தடைக் கற்கள்

இந்தியாவின் தடைக் கற்கள்           விவசாயம்  பிறப்பு முதல் இறப்பு வரை மனித வாழ்வோடு தொடர்புள்ளது.  விவசாயமில்லா வாழ்வை நினைத்துக் கூட பார்க்க இயலாது. உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினங்களும் விவசாயத்தைச் சார்ந்தே வாழ்க்கை பயணத்தைப் பயணிக்கின்றன. விவசாயம் அழிந்தால் உலகம் தன் இயல்பு…

கடலோடி நரசய்யாவுடன் கடலாடுவோம்!

source – https://mymintamil.blogspot.com/2020/09/blog-post_4.html கடலோடி நரசய்யாவுடன் கடலாடுவோம்! — முனைவர் ச.பாரதி “கடற்படை அனுபவங்கள்”  – முதல் நாள் சிறப்புரை (31/8/2020):             “கடலோடி நரசய்யாவுடன் கடலாடுவோம்” என்ற முதல் நாள் கருத்தரங்கில், தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவனர் முனைவர் சுபாஷிணி அவர்கள்…

அறிவொளி இயக்கத்தில்….

வணக்கம். 1991-92 இல் நடந்த அறிவொளி இயக்கத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவனாக இருந்த எனது நேரடி அனுபவப் பகிர்வு காண அழைக்கிறேன்! வலையொளி இணைப்பு– https://valarumkavithai.blogspot.com/  

கால்நடை – பெருகும் அசையும் சொத்து

கால்நடை – பெருகும் அசையும் சொத்து நிலம், மனிதருக்கு அசையா சொத்தென்றால், மாடு, ஆடு, கோழி போன்ற கால்நடைகள் மனிதருக்கு அசையும் சொத்து. வேறெந்த அசையும் சொத்தும், கால்நடைகளைப் போல், பல்கிப் பெருகாது. செலவில்லா விவசாயத்திற்கும் உறுதுணையாக அமைவது, கால்நடைகளாகும். மக்களின், இயற்கையுடன் ஒன்றிய விவசாய வாழ்வில், நண்பனாக,…

“தற்சார்பு இந்தியா” என சொல்வது நாடகமா? .. தில்லி உயர் நீதிமன்றம் கேள்வி

“தற்சார்பு இந்தியா” என சொல்வது நாடகமா? .. தில்லி உயர் நீதிமன்றம் கேள்வி   விமான நிலையங்கள் தொடர்பான ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்களின் தகுதியை (Eligibility Criteria) மாற்றி அமைத்திருக்கும் விஷயத்தில், மத்திய அரசின் செயல் அதிருப்தி அளிப்பதாகவும்; மேக் இன் இந்தியா, தற்சார்பு இந்தியா முழக்கங்கள் பாசாங்குத்தனமானதா என்ற சந்தேகத்தை வரவழைப்பதாகவும் தில்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. விமான நிலைய பராமரிப்புப் பணி தொடர்பான ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கான தகுதியை, திடீரென மத்திய அரசு மாற்றியமைத்தது. அதாவது, சரக்குகள் கையாளுதல், விமானங்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட சேவைகளுக்கான இந்த ஏலத்தில், ஆண்டுக்கு ரூ.35 கோடி விற்றுமுதல் இருக்கும் நிறுவனங்கள்தான் பங்கேற்க முடியும் என புதிய விதியைக் கொண்டு வந்தது.இதற்கு எதிராக மத்திய விமானக் கொள்கை, பாதுகாப்பு மற்றும் ஆய்வு (Centre for Aviation Policy,Safety and Research – CAPSR)அமைப்பு, தில்லி உயர் நீதிமன்றத் தில் அண்மையில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில்தான், நீதிபதிகள்விபின் சாங்கி, ரஜனிஷ் பட்நாகர் ஆகியோர் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளனர். மத்திய அரசின் நிலைப்பாடு எங்களுக்கு வேதனை அளிக்கிறது. ஒருபுறம் மேக் இன் இந்தியா, தற்சார்பு இந்தியா என்று பிரச்சாரம் செய்கிறார்கள். மறுபுறம், விமான நிலையசேவைக்கான டெண்டரில் சிறு நிறுவனங்களைத் துரத்தி விடும் வகையில் விதிகளை மாற்றுகிறார்கள்.மத்திய அரசும், இந்திய விமான நிலையங்கள் ஆணையமும் சிறு நிறுவனங்களை ஏலத்திலிருந்து வெளியேற்ற விரும்பினால், ‘இதுதான் எங்கள் கொள்கை’ என்று வெளிப்படையாக துணிச்சலாக கூறுங்கள். அரசியல் தலைமைப் பதவியில்உள்ளவர்கள் ‘மேக் இன் இந்தியா’,‘தற்சார்பு இந்தியா’ பற்றிப் பேசுகிறார்கள். உள்நாட்டு தொழில்களைவளர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், விமான நிலையங்கள் ஆணையத்தின் செயல்பாடு அவர்களின் வார்த்தைக்குப் பொருத்தமாக இல்லை. முழுவதும் பாசாங்குத்தனமாகவே (Hypocritical) இருக்கிறது. இதுபோன்று சிறிய நிறுவனங்களை வெளியேற்றும் விதத்தில் நடந்துகொண்டால், எதற்காக, ‘மேக் இன் இந்தியா’ பற்றி அரசியல்தலைவர்கள் பேசுகிறார்கள்? இந்தியாவில்தான் தயாரிக்க வேண்டும் என்று கூறுகிறோம், இந்தியாவுக்காகச் சேவை செய்ய வேண்டும், தற்சார்பு பொருளாதாரமாக மாற வேண்டும் என பேசுகிறோம். இந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்துங்கள் என்று கூறுகிறோம். மறுபுறம் நம்முடைய சொந்த நாட்டைச் சேர்ந்த தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்துவதில் தோல்வி அடைந்து விடுகிறோம்.நம் மண்ணைச் சேர்ந்த சொந்த தொழில் முனைவோரை ஊக்குவிப்பதில் நாடு அலட்சியமாகவும் உணர்ச்சியற்றதாகவும் இருந்ததன் காரணமாக, இந்நாட்டில் உற்பத்தி செய்வதும் அல்லது தொழில் நடத்துவதும் கடினம் என்று கூறி பலர் வெளியேறி விட்டனர். “சிறிய நிறுவனங்கள் வளர்வதற்கு அனுமதிக்காவிட்டால், சந்தையில் பெரு நிறுவனங்களின் ஆதிக்கம் மட்டுமே இருக்கும், அரசுக்கே அவர்கள் ஒரு கட்டத்தில்கட்டளையிடுவார்கள்” என்று நீதிபதிகள் சாட்டையைச் சுழற்றியுள்ளனர்.நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்பதற்கான தகுதி குறித்த விஷயத்தில், மத்திய அரசும், இந்திய விமான ஆணையமும் தங்களின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண் டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.  

பேராபத்தின் துவக்கம்

பேராபத்தின் துவக்கம்   இஸ்ரோ தனியார்மயமாக்கப்படாது என்று அதன் தலைவர் சிவன் கூறுகிறார். ஆனால் மத்திய அரசின் தனியார்மய நடவடிக்கைகள் விண்வெளித் துறையையும் விட்டுவைக்கவில்லை. ராக்கெட் வடிவமைக்கவும் செலுத்தவும் அதுகுறித்த ஆராய்ச்சிகளில் தனியார் நிறுவனங்கள் ஈடுபடவும்  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் தனியார் ஏவுதளங்களும் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைய உள்ளது. இவை அனைத்தும் இஸ்ரோவை படிப்படியாக தனியாரிடம் தள்ளிவிடும் நடவடிக்கைகளே. நாட்டிலுள்ள மிக முக்கியமான துறைகளில்  விண்வெளி தொழில் நுட்பத்துறையும் ஒன்று. இந்த துறை  கடந்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந் துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். கடந்த 20 ஆண்டுகளில்  300க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது. 90களில்  அதிகபட்சமாக  804 கிலோ எடை கொண்ட தொலை உணர்வு செயற்கைக் கோள்களைத்தான்  நமது ராக்கெட்டுகள் விண்ணில் ஏவும் திறனைப் பெற்றிருந்தன. விஞ்ஞானிகளின் அயராத உழைப்பாலும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியாலும் தற்போது 2250 கிலோவுக்கும் அதிகமான செயற்கைக்கோள்களை நமது ராக் கெட்டுகள் விண்ணுக்கு ஏந்திச்சென்று அதன் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்துகின்றன.  இந்த வரிசையில் இஸ்ரோ இதுவரை  45க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தியுள்ளது. இதில் நிலவை ஆய்வு செய்யும் சந்திரயான், செவ்வாய் கிரகத்தை ஆராயும் மங்கள்யான் ஆகியவையும் பல சிறிய ரக செயற்கைக் கோள்களும் அடங்கும். வர்த்தக ரீதியில் 33க்கும் மேற்பட்ட நாடுகளின் 310 செயற்கைக் கோள்களை யும்  விண்ணுக்கு செலுத்தியதன் மூலம் இந்தியாவுக்கு வருவாயும் கிடைத்துள்ளது.  நமது விஞ்ஞானிகளின் கடுமையான உழைப்பாலும் அரசாங்கத்தின் நிதியுதவியாலும் பொதுத்துறை நிறுவனமான இஸ்ரோ இன்று உலகில் மிகவும் நம்பிக்கையான விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் என்ற பெயரை பெற்றுள்ளது. நமது நாட்டின் விண்வெளி தொழில்நுட்பத்திற்கு சோவியத் யூனியன் அளித்த ஆதரவு குறிப்பிடத்தக்கது. பல முன்னேறிய நாடுகள் விண்வெளி தொழில்நுட்பத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள முன்வராதபோது நட்பு நாடான சோவியத் யூனியன் தாராளமாக உதவி செய்தது. கிரையோஜெனிக் என்ஜின் தொழில்நுட்பத்தை அமெரிக்க தர மறுத்தபோது ரஷ்யா தந்து உதவியது. இதனால் குறைந்த செலவில் அதிக எடைகொண்ட செயற்கைக் கோள்களை இந்தியாவால் விண்ணிற்கு அனுப்பமுடிகிறது. தனியார் நிறுவனங்கள் இந்த துறையில் ஈடுபடும்போது அவை லாபத்திலேயே குறியாக இருக்கும். மக்களின் முன்னேற்றத்திற்கான அறிவியல் என்ற நிலை மாறி தனியாரின் லாபவேட்டைக்கு அறிவியல் என்ற நிலையாகிவிடும். மேலும் விண்வெளி தொழில் நுட்பமும் ஏவுகணை தொழில்நுட்பமும் கிட்டத் தட்ட ஒன்றுதான். இத்துறையில் தனியார் ஈடுபடும்போது ரகசியங்கள் கசியலாம். பணத்திற்காக தொழில் நுட்பங்கள் விற்கப்படலாம்.  எனவே விண்வெளித் துறையில் தனியார்மயம் என்பது இஸ்ரோவுக்கு மட்டுமல்ல நாட்டிற்குமே ஆபத்தானது. (நன்றி .. 22-08-2020 தீக்கதிர் தலையங்கம்)  

செலவில்லா விவசாயம்

செலவில்லா விவசாயம்   சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில், இயற்கையின் மூலங்களான மண், நீர், சூரிய ஒளி மற்றும் காற்று ஆகியவற்றை, அறிவியல் முறையில் ஒழுங்கு படுத்தாத காரணங்களால், பயிர் விளைச்சல் குறைவாய் இருந்தது. இரண்டாம் உலகப்போர் காலத்தில், வெடிமருந்திற்காக உற்பத்தி செய்யப்பட்ட அம்மோனியா பல உலக நாடுகளில் தேங்கி…

வேலைவாய்ப்புகளைக் கொன்றொழிக்கும் கொரோனா

வேலைவாய்ப்புகளைக் கொன்றொழிக்கும் கொரோனா   யாருமே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள், 2020-ம் ஆண்டு மனித குல வரலாற்றில் நெருக்கடி மிகுந்த ஆண்டாக இருக்குமென்று.  இரண்டு உலகப் போர்கள், ஸ்பானிஷ் ஃப்ளு, 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் 21-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை போன்ற சில நெருக்கடிகள்தான் உலகளாவிய பாதிப்பை ஏற்படுத்தின. அந்த வரிசையில் கரோனாவும் வந்துசேர்ந்திருக்கிறது. உடல்நலம், பொருளாதாரம், கலாச்சாரம், வாழ்க்கை முறை எல்லாவற்றையும் கொரோனா பெருந்தொற்று குலைத்துப் போட்டிருக்கிறது. குறிப்பாக, பொருளாதாரத்தில் அது ஏற்படுத்திக்கொண்டிருக்கும் பாதிப்பு இந்திய அளவிலும் உலக அளவிலும் முன்னுதாரணமற்றது. இந்த நிலையில்தான் அதிர்ச்சி தரும் அறிக்கையை ‘இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம்’ (சி.எம்.ஐ.இ.) வெளியிட்டிருக்கிறது.   இந்த அறிக்கையின்படி 2020 ஜூலையில் மட்டும் 50 லட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 2020 ஏப்ரலிலிருந்து 1.8 கோடி மாதச் சம்பளக்காரர்கள் தங்கள் வேலையை இழந்திருக்கிறார்கள். இந்தியாவில் 21% பேர் முறைசார்ந்த பணிகளில் இருக்கிறார்கள். அமைப்புசாராப் பணிகளுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு. எனினும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முறைசார்ந்த பணிகளின் பங்களிப்பு அதிகம் என்பதால் இது இந்தியப் பொருளாதாரத்துக்கு ஒரு மோசமான செய்தி.   பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதும் பெரும் பாதிப்புக்குள்ளானவர்கள் அமைப்புசாராத் தொழிலாளர்கள்தான். இவர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர் தொழிலாளர்கள். கட்டுமானப் பணிகளில் ஆரம்பித்து தொழிற்பேட்டைகள் வரை அவர்களின் பங்களிப்பு அதிகம். பொது முடக்கத்தின் காரணமாக ஏப்ரலில் இவர்களில் 9.12 கோடிப் பேர் வேலை இழந்தார்கள். அரசுகளும் பிழைப்புக்காக வந்த ஊர்களும் கைவிரித்துவிட்ட நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினார்கள். மே மாதத்தில் 1.44 கோடிப் பேரும், ஜூனில் 4.45 கோடிப் பேரும், ஜூலையில் 2.55 கோடிப் பேரும் வேலைக்குத் திரும்பினார்கள். இன்னும் 68 லட்சம் பேர் வேலைக்குத் திரும்பவில்லை என்கிறது சி.எம்.ஐ.இ. அறிக்கை. முறைசார்ந்த துறைகளில் பணிபுரியும் மாதச் சம்பளக்காரர்களின் கதையோ வேறு. அவர்கள் தங்கள் வேலைகளை இழந்தால் அவற்றைத் திரும்பவும் பெறுவது கடினம். கொரோனா ஒரு நோயாக உண்டாக்கும் பாதிப்பைக் காட்டிலும், பொது முடக்கம் வழி உருவாக்கும் பாதிப்புகள் மோசமான விளைவுகளாக இருக்கும் என்பது கொஞ்சம் கொஞ்சமாக நிரூபணம் ஆகிறது. கொரோனாவுடன் போராடிக்கொண்டே பொருளாதாரத்தை இயல்புநிலைக்குக் கொண்டுவருவது பெரும் சவால் என்றாலும், இந்தியா அந்த சவாலில் கடுமையாகப் போராடவில்லை என்றால், பல கோடிப் பேரை சீரழிவில் தள்ளுவதாக அது அமைந்துவிடும். நிச்சயமாக பொது முடக்கத்திலிருந்து வேகமாக இந்தியா வெளியே வர வேண்டும். கடந்த காலப் பொருளாதார மந்த நிலைகளைவிட மோசமான ஒன்றைத் தற்போது எதிர்கொண்டிருக்கிறோம். மக்கள்மையக் கொள்கைகளே இந்த நிலையைச் சமாளிப்பதற்கு ஒரே வழி. – நன்றி .. ஆகஸ்ட் 25 அன்று தமிழ் இந்துவில் ஆசை எழுதிய கட்டுரையிலிருந்து)