1. Home
  2. மருத்துவம்

Category: மருத்துவம்

கரோனா சந்தேகங்களுக்கு அறிவியல் என்ன சொல்கிறது?

கரோனா சந்தேகங்களுக்கு அறிவியல் என்ன சொல்கிறது? தொகுப்பு- ச. கோபாலகிருஷ்ணன் கோவிட்-19 நோயும் அதற்குக் காரணமான நாவல் கரோனா வைரஸ் குறித்த சந்தேகங்களும் அச்சங்களும் அதிகரித்துவருகின்றன. இந்தப் பின்னணியில் கரோனா குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக ‘கோவிட்-19-க்கு இந்திய அறிவியலாளர்களின் எதிர்வினை’ (Indscicovi-Indian Scientists’ Response to Covid-19) என்ற தன்னார்வ அமைப்பு இணையவழி…

கரோனா வைரஸ்

கரோனா வைரஸ் தொற்றால் கடுமையான மூச்சுத் திணறல் மற்றும்ஆக்சிஜன் அளவு குறைவால் பாதிக்கப்பட்ட பெண் பல் மருத்துவர், சித்த மருத்துவ சிகிச்சையால் ஒரே வாரத்தில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். அவர் தனது அனுபவத்தை நெகிழ்ச்சியோடு நம்முடன் பகிர்கிறார்… என் பெயர் சந்தியா ஜி.ராம். 25 வயது. பல் மருத்துவர். காஞ்சிபுரத்தில் குடும்பத்துடன் வசிக்கிறேன். ஜூன் 24-ம் தேதி காய்ச்சல்ஏற்பட்டது. லேசான நெஞ்சுவலியுடன், மூச்சு விடுவதிலும் சிரமம் இருந்தது. தனியார் மருத்துவரிடம் சென்றபோது, ‘‘சாதாரண வைரஸ் காய்ச்சல்தான்’’ என்று கூறி ஊசி போட்டு மாத்திரை கொடுத்தார். திரும்பத் திரும்ப காய்ச்சல் வந்து,சில நாட்களில் மூச்சுத் திணறல் அதிகமானது. நடக்கவே முடியவில்லை. மீண்டும் மருத்துவரிடம் சென்றபோது, கரோனாவாக இருக்கலாம் என்றார். உடனே காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்றோம். அங்கு எனக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அங்கு சிறிது நேரம்ஆக்சிஜன் வைத்தும், 91 என்ற அளவிலேயே இருந்தது. மருத்துவமனையில் மின்சாரம் தடைபட்ட நிலையில், ஜெனரேட்டரும் இல்லை. நோயாளிகளும் அதிகம் இருந்தனர். அதனால், ‘‘மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டால், வாருங்கள்’’ என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.   எனக்கு கரோனா இருப்பது கடந்த 6-ம் தேதி உறுதியானது. இந்நிலையில், சென்னை விருகம்பாக்கம் ஜவஹர் பொறியியல் கல்லூரியில் சித்தா சிகிச்சை மையம் செயல்படுவதாக கேள்விப்பட்டு, அன்று இரவே அங்கு சென்றேன். என் உடல்நிலை குறித்து விசாரித்த சித்த மருத்துவர் வீரபாபு அப்போதே கசாயம், மாத்திரை கொடுத்தார். ஒரு மணி நேரத்திலேயே ஓரளவு தெம்பு வந்ததுபோல இருந்தது. 2-வது மாடியில் படுக்கை கொடுத்தனர். நானே நடந்து சென்றேன். ஆனால், ஆக்சிஜன் அளவு ஏறவில்லை. மூச்சுத் திணறல், காய்ச்சலும் குறையவில்லை.   அடுத்த ஒருநாளில் எல்லா பிரச்சினைகளும் படிப்படியாக சரியாகின. நன்றாக நடக்கத் தொடங்கினேன். தொடர்ந்து கசாயங்கள், சித்தா மாத்திரைகள், சத்துள்ள உணவு கொடுத்தனர். ஆக்சிஜன் வைக்கவில்லை. முகக் கவசம் அணிவிக்கவில்லை. மருத்துவர் உள்ளிட்டோரும் பாதுகாப்பு கவச உடை அணியவில்லை. எங்களை தொட்டுப் பார்த்துதான் சிகிச்சை அளித்தனர். 3 நாட்களில் காய்ச்சல், மூச்சுத் திணறல் சரியானது. ஒரு வார சிகிச்சைக்குப் பிறகு, பூரண குணமடைந்து இன்று (நேற்று) வீடு திரும்பியுள்ளேன். இப்போது ஆக்சிஜன் அளவு 99 உள்ளது. நான் சேர்ந்த 2 நாட்களில் என் அம்மாவும் கரோனாவால் பாதிக்கப்பட்டு அதே மையத்துக்கு வந்தார். அவரும் குணமடைந்து ஒன்றாக வீடு திரும்பி உள்ளோம். சர்க்கரை நோய், 3 மாதம் முன்பு கருக் கலைப்பு நடந்தது ஆகிய பாதிப்புகள் இருந்தாலும் சித்த மருத்துவத்தால் ஒரே வாரத்தில் நான் குணமடைந்ததில் வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி. நடைபயிற்சி சென்றபோது எனக்கு கரோனா தொற்றி இருக்கலாம். தயவுசெய்து  காய்ச்சல், மூச்சுத் திணறல் இருந்தால் தாமதிக்காமல் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார். மூலிகை ரசமே மருந்து சித்த மருத்துவர் வீரபாபு, தமிழக அரசுடன்இணைந்து சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜவஹர் பொறியியல் கல்லூரியை கரோனா சிகிச்சை மையமாக மாற்றியுள்ளார். அங்கு  400 படுக்கைகள் உள்ளன. சித்த மருந்துகளான கபசுரக் குடிநீர், நிலவேம்பு கசாயம், மூலிகை தேநீர், தூதுவளை ரசம், கற்பூரவல்லி ரசம், ஆடாதொடை ரசம், மணத்தக்காளி ரசம், மூலிகை உணவுகள், நவதானிய பயறுகள் வழங்கி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு சித்த மருத்துவ சிகிச்சையால் இதுவரை 1,050 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது  400 பேர் சிகிச்சையில் உள்ளனர். (ஜூலை 15 தமிழ் இந்துவில் வந்த செய்தி)

கிராமங்களில் சூழ்ந்திருக்கும் அச்சமும் மன அழுத்தமும்

விருகம்பாக்கம் சித்தா மருத்துவமனை அளிக்கும் சிகிச்சை பற்றி இந்து தமிழ்வில் வந்த கட்டுரையை நான் நேற்று உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். அது நம்மிடையே ஒரு விவாதத்தை உருவாக்கியது. நல்லது. கொரோனா பற்றி ஜூன் 29 தீக்கதிர் முதல் பக்கத்தில் டாக்டர் வி.பிரமிளா எழுதிய கட்டுரையையும் நாம் படித்துப் பார்ப்பது நல்லது என நினைக்கிறேன். கிராமங்களில் சூழ்ந்திருக்கும் அச்சமும் மன அழுத்தமும்  …

சங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல்

சங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல் (Quarantining in Sangam Period) பேய்வேறு நோய்வேறு உண்டா? பேய் பிடிக்கிறதென்றால் தீமை தொற்றுகிறதென்று பொருள். ஆங்கிலத்திலே Infection என்று சொல்கிறோம். தீமை தொற்றினால், மனத்தை உடலை அல்லது இரண்டையும் பாதிக்கும். தங்கம், வெள்ளி, செப்பு போன்ற மாழைகளில்(metal) ஒன்றினால் செய்யப்பட்ட கழல்,…

கொரோனா நோய் காற்றின் மூலம் பரவும்..

கொரோனா நோய் காற்றின் மூலம் பரவும்.. உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் !   அப்படியானால் ஒரு தெருவிலுள்ள நோயாளியிடமிருந்து வேறு ஒரு தெருவில் இருக்கும் ஒருவருக்கு காற்றின் மூலம் நோய்  பரவுமா?  ஓர் அலசல். முதலில் கொரோனா நோய் எப்படியெல்லாம் பரவுகிறது என்று பார்ப்போம். இது கீழ்க்கண்ட மூன்று வகைகளில் பரவுகிறது. 1 Droplet infection -நீர்த்திவலைகள் மூலம் 2. Droplet nuclei – நுண்திவலைகள் கருக்கள் மூலம் – இதைத் தான் நாம் காற்றின் மூலம் பரவுதல் என்கிறோம் 3. Fomites – தொடுபொருட்கள் மூலம். இவற்றை  விரிவாகப் பார்ப்போம்.  அதாவது நோயுள்ள ஒருவர் இருமும்போதோ தும்மும்போதோ, பேசும்போதோ அல்லது பாடும்போதோ  வைரஸ் கிருமியானது மூச்சுக் குழல் வழியாக வெளியேறுகிறது. அவ்வாறு வெளியேறும்போது மூச்சுக் குழலிலுள்ள  காற்று, நீர்  மற்றும் இறந்துபோன அணுக்கள் இவைகளுடன் வைரஸ்  சேர்ந்து பல வகை அளவுகளில் உள்ள  நீர்த்துளிகளாக வெளியேறுகிறது. இது வேறு ஒருவரின் மூச்சுக் குழலுக்கு நேரடியாகவோ அல்லது  இந்தக் காற்றை சுவாசிப்பதன் மூலமாகவோ அல்லது  இந்த வைரஸ் படிந்த பொருட்களைத் தொட்டுவிட்டு அதே கைகளைக் கொண்டு வாய், மூக்கு மற்றும் கண்களைத் தொடுவதாலோ சென்று நோயை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் அடங்கிய நீர்த்துளிகள் எப்படி அடுத்தவரின் மூச்சு மண்டலத்திற்கு செல்கிறது? இங்கேதான் இந்த நீர்த்துளியின்  அளவு  முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு நீர்த்துளியின் அளவு 5 மைக்ரானிற்கு (ஒரு மைக்ரான் அல்லது ஒரு மைக்ரோமீட்டர் என்பது ஒரு மில்லிமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு) மேற்படும்போது அதை நீர்த்திவலை (droplet) என்கிறோம். அதுவே  5 மைக்ரானுக்குக் கீழாகும்போது அதை நுண்திவலைகள் (droplet nuclei…

மருத்துவர் எஸ்.எம்.சந்திரமோகன்

மருத்துவர் எஸ்.எம்.சந்திரமோகன்   தன்னுடைய பணியை முழுக்கவும் மக்களை மையப்படுத்தி ஆக்கிக்கொள்ளும் எவரும் வரலாற்றில் இடம்பெற்றுவிடுகிறார்கள். மரணங்கள் வெறும் எண்ணிக்கை யாகிவிட்ட கொரோனா காலத்திலும், மருத்துவரான எஸ்.எம்.சந்திரமோகனின் மறைவு மருத்துவத் துறையைத் தாண்டி பலராலும் பேசப்படவும் தமிழ்நாடு அளவில் ஒரு பெரிய இழப்பாகவும் கருதப்படவும் காரணம் அதுதான். எப்போதும் அடித்தட்டு மக்கள் நலனில் அக்கறையோடு செயல்பட்டார் சந்திரமோகன். ராயப்பேட்டை பொது மருத்துவமனையின் தொற்றாநோய்களின் மையத்தில் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறையை அவர் நிறுவினார்.  அமிலத்தைக் குடித்துத் தற்கொலைக்கு முயன்ற பலரையும் சந்திரமோகன் காப்பாற்றியிருக்கிறார். இது எளிதான விஷயம் அல்ல. அமிலம் உணவுக் குழாயையும் இரைப்பையையும் அரித்துவிடும். அதன் பிறகு தண்ணீர்கூடக் குடிக்க முடியாது. அவர்களை மீட்டெடுக்க பல்வேறு ஆபத்தான அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டும். இப்படி நூற்றுக்கணக் கானோரை சந்திரமோகன் காப்பாற்றியிருக்கிறார். இவர்களில் பெரும்பாலானோர் ஏழைகள். ‘தனியார் மருத்துவமனைக்குப் போய் பல லட்சங்கள் செலவழித்திருந் தாலும்கூட இப்படி ஒரு சிகிச்சை கிடைக்காது’ என்று சொல்லும் நிலையை அரசு மருத்துவமனையில் தன்னுடைய துறையில் அவர் உருவாக்கினார். அவரால் குணமடைந்தவர்களில் சிலர் பின்னாட்களில் அவரிடம் தன்னார்வலர்களாகப் பணியாற்றியது அவர்களுக்கு அவர் மீது இருந்த பிடிப்பை நமக்கு உணர்த்துகிறது.   நோயாளிகளை அவர் ஒருபோதும் வெறும் நோயாளிகளாக அணுகியதில்லை. எவ்வளவு வேலை இருந்தபோதும் தனது நோயாளிகள் ஒவ்வொருவரையும் பார்த்து அனுசரணையாக நான்கு வார்த்தைகள் பேசாமல் போக மாட்டார். ‘நம்பிக்கையைவிட ஒரு நோயாளிக்கு மருத்துவர் அளிக்கும் பெரிய சிகிச்சை வேறு எதுவும் இல்லை’ என்பார். இரைப்பை குடல் அறுவை சிகிச்சையில் டாக்டர் சந்திரமோகன் பின்பற்றிய உத்திகளும் கண்டுபிடிப்புகளும் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றவை. குறிப்பாக, நோயாளிகள் தாங்களாகவே செய்துகொள்ளக்கூடிய வகையிலான ’செல்ஃப் டிலட்டேஷன்’ முறையும் அவற்றில் ஒன்று. குரல்வளை, உணவுக்குழாய், இரைப்பை ஆகியவற்றின் பாதைகள் குறுகலாவதைத் தடுக்க அவர் முன்வைத்த உத்திகள் இன்று உலக அளவில் பின்பற்றப்படுகின்றன.   தனது துறையில் சர்வதேச அளவில் முன்னணி நிபுணர்களில் ஒருவராக இருந்தாலும் சந்திரமோகன் பலரையும்போல, தனது நிபுணத்துவத்தை செல்வம் குவிப்பதற்குப் பயன்படுத்தவில்லை. 1990-களின் இடைப்பகுதியில் மூன்று மாதப் பயிற்சிக்காக நியூசிலாந்து சென்றபோது, அங்கே அவரது திறமையைப் பார்த்து அங்கேயே வேலைக்கு வந்துவிடும்படி கேட்டிருக்கிறார்கள். தான் பெற்ற கல்வியும் பயிற்சியும் தன்னுடைய தமிழ்ச் சமூகத்துக்குப் பயன்பட வேண்டும் என்று கூறியவர், அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். இத்தனைக்கும் அப்போது இங்கே அரசு மருத்துவராக அவர் வாங்கிய சம்பளம் ரூ.20 ஆயிரம். அதுபோல 15 மடங்கு சம்பளம் தருவதாக அங்கே கூறப்பட்டதைத்தான் அவர் புறந்தள்ளினார்.   அரசு மருத்துவராக 31 ஆண்டு காலம் பணியாற்றிய சந்திரமோகன், ‘ஒரு அரசு மருத்துவராக இருப்பதில் உள்ள பெரிய சுகம் ஏழை மக்களோடு அன்றாடம் புழங்க முடிவதுதான்; உண்மையான சேவைக்கான அர்த்தத்தை அவர்கள்தான் உணர்த்துகிறவர்கள்’ என்று அடிக்கடி சொல்வார். மக்களின் சேவகரைக் காலமும் தமிழ் நிலமும் நினைவில் கொள்ளும்! – (ஜூலை 8 தமிழ் இந்துவில் ஆசை எழுதிய கட்டுரையிலிருந்து) 

கொரோனா

கொரோனா தொற்று கண்டவர்களில் 85% பேருக்கு அறிகுறிகள் ஏதுமின்றி எப்போது வந்தது எப்போது சென்றது என்பது கூட அறிய முடியாத அளவில் வந்து செல்கிறது அறிகுறிகள் தோன்றுவோரில் பெரும்பான்மை சாதாரண அறிகுறிகளுடன் சரியாகிவிடுகிறார்கள் மரண விகிதம் நூறுக்கு ஒன்று என்ற அளவில் மட்டுமே இருக்கிறது இதனால் கொரோனா வந்தாலே…

கோவிட்-19

கோவிட்-19, பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சென்று மீண்டு வந்தவர்களிடமிருந்து பெற்ற தகவல் … தினமும்:: 1. Vit C-1000 mg எடுத்துக் கொள்ளுங்கள் 2. வைட்டமின் ஈ 3. 10:00 – 11:00 சூரிய ஒளி 15-20 நிமிடங்கள் அல்லது வைட்டமின் டி 3 4. முட்டை ஒன்று 5.…

ஆரோக்கியத்தால் பெருகும் வருமானம்

ஆரோக்கியத்தால் பெருகும் வருமானம்   ஆரோக்கிய உணவெல்லாம் பாட்டி காலத்துடனே போய்விட்டது எனப் பெருமூச்சு விடுபவர்களுக்கு ஜென்சிலின் வினோத் ஆச்சரியம் தருகிறார். இயற்கை முறையில் பதப்படுத்தப்பட்ட 180 விதமான உணவுப் பொருட்களை ஆண்டுக்கு ஐம்பது லட்சம் ரூபாய் அளவுக்கு இவர் விற்பனை செய்துவருகிறார். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் திருமணத்திற்குப் பிறகு சென்னைக்குக் குடிபெயர்ந்தவர். “நான் தயாரிக்கும் உணவு வகை எல்லாமே, ஒரு காலத்தில் நம் வீடுகளில் செய்யப்பட்டவையே. ஆனால், காலப்போக்கில் பாரம்பரிய உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், துரித உணவின் மீது நம் கவனம் திரும்பிவிட்டது. எனக்குச் சமையல் குறிப்புகளைக் கற்றுத்தந்தவர் என் அம்மா குளோரி. நான் ஐந்தாம் வகுப்புப் படித்தபோதே, சமையல் செய்யக் கற்றுக்கொண்டேன். சிறுதானியங்களில் நூடுல்ஸ், கஞ்சி, தின்பண்டங்கள், இனிப்பு வகைகள் என ஏராளமானவற்றை அம்மா தயாரித்துக்கொடுப்பார். என் தாத்தா நாட்டுவைத்தியர் என்பதால், எங்கள் வீட்டில் எப்போதும் பாரம்பரிய உணவுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்போம். இப்படிப்பட்ட சூழலில் வளர்ந்த எனக்கு வேதிப் பொருட்கள் கலக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவும் குளிர்பானங்களும் பிடிக்காது. அதனால்தான் என் குழந்தைகளுக்கும் வேதிப்பொருட்கள் கலப்பில்லாத உணவை தயாரித்துக்கொடுக்கத் தொடங்கினேன்” என்கிறார் ஜென்சிலின். தொடக்கத்தில் தன்னுடைய குழந்தைகளுக்காக உணவு வகைகளைச் செய்யத் தொடங்கிய ஜென்சிலின், பின்னர் அதையே தொழிலாகத் தொடங்க முடிவெடுத்தார். “ ஃபார்ம் டு ஹோம் ” என்ற நிறுவனத்தை 2018-ல் தொடங்கினார். குழந்தைகளுக்கான கஞ்சி வகைகள், சத்துமாவு போன்றவற்றுடன் விற்பனையைத் தொடங்கினார். தற்போது குழந்தைகளுக்கான 40 வகைக் கஞ்சி, பால் கொடுக்கும் தாய்மார்களின் ஊட்டச்சத்துக்கு 16 வகை உணவு, உடனடியாகத் தயாரிக்கக்கூடிய 20 வகைக் காலை சிற்றுண்டி, நீரிழிவு நோயாளிகளுக்கு 12 வகை உணவு, சிறுதானியத்தில் செய்யப்பட்ட நான்கு வகை நூடுல்ஸ் போன்றவற்றுடன் சிகைக்காய், குளியல் பொடி, முகப்பூச்சு உள்ளிட்ட 180 வகைப் பொருட்களைத் தயாரித்து அசத்துகிறார். இரண்டு ஆண்டுகளில் ஜென்சிலின் கண்டிருக்கும் இந்த அசத்தல் வளர்ச்சி நமக்கு மலைப்பை ஏற்படுத்தினாலும், அதற்குப் பின்னால் பலரின் கூட்டு உழைப்பு அடங்கியுள்ளது என்கிறார் அவர். (ஜுன் 7 தமிழ் இந்து பெண் இன்று இணைப்பில் எல்.ரேணுகாதேவி எழுதிய கட்டுரையிலிருந்து)    

எல்லோரும் கண்டிப்பாக டெஸ்ட் எடுத்தே ஆகணுமாம்!

எல்லோரும் கண்டிப்பாக டெஸ்ட் எடுத்தே ஆகணுமாம்! அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்கிறார்! அதுவும் எப்ப சொல்கிறார்! தனியார் மருத்துவமனைகள் கல்லா கட்ட களம் கண்டதும் சொல்கிறார்! டெஸ்டுக்கு ரூ 4,500 என்று இருந்ததை 3,000 ரூபாயாக நிர்ணயிக்க சொல்லிட்டாராம்! அதில் 2,500 அரசு தந்துவிடுமாம்! பரிசோதனைக்கு பணத்தை குறைக்க சொன்னவர்,…