1. Home
  2. தமிழ் நாடு

Category: தமிழ் நாடு

ஈதுல் அளுஹா

ஈதுல் அளுஹா – தியாகத்திருநாள் என்னும் பக்ரீத் பெருநாள் வரும் ஆகஸ்ட் 1ம் தேதியன்று கொண்டாடப்படும். ஜுலை 21 ம் தேதி செவ்வாயன்று துல்காயிதா பிறை 29 நிறைவடைந்ததை யடுத்து துல் ஹஜ் பிறை தெரியும் வாய்ப்பு இருந்ததையடுத்து துல்ஹஜ் பிறை காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.துல்ஹஜ் பிறை இன்று…

பரமக்குடி மேலப்பள்ளிவாசல் நெசவு.சாந்துபட்டறை ஜமாத்தலைவர் ஹாஜி. சம்சு அலியார் மரணம்.

பரமக்குடி மேலப்பள்ளிவாசல் நெசவு.சாந்துபட்டறைஜமாத்தலைவர் ஹாஜி. சம்சு அலியார் மரணம். முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் இரங்கல். இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் பொதுச் செயலாளர் ஏ.ஜெய்னுல் ஆலம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது. பரமக்குடி மேலப்பள்ளிவாசல் நெசவு மற்றும் சாந்து பட்டரை ஜமாஅத் தலைவரும். பரமக்குடி தாலுகா முஸ்லிம்…

துயரத்தைச் சுமக்கும் தூய்மைப் பணியாளர்கள்

துயரத்தைச் சுமக்கும் தூய்மைப் பணியாளர்கள்   கரோனா காலத்தில் நாம் நலமாக இருப்பதற்காக நம் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரித்துவரும் தூய்மைப் பணியாளர்கள் நலமாக இருக்கிறார்களா என்ற கேள்விக்கு எதிர்மறைப் பதிலைத்தான் பெரும்பாலும் பெற முடிகிறது. சென்னை போன்ற பெருநகரில் சுகாதாரக் களப்பணியாளர்கள் நாள்தோறும் நூற்றுக் கணக்கான வீடுகளுக்குச் சென்று பரிசோதனை மேற்கொள்கிறார்கள். உடல்நிலை சரியில்லை என்றாலும் விடுப்பு எடுக்க முடியாத நிலையில் பலர் பணிக்குத் தொடர்ந்து சென்று வருகின்றனர். இதனால் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.   “தமிழகம் முழுவதும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் ஐம்பதாயிரத்துக்கும் குறைவானவர்களே நிரந்தர ஊழியர்கள். சென்னையில் உள்ள 22,430 துப்புரவுத் தொழிலாளர்களில் 6,401 பேர் மட்டுமே நிரந்தர ஊழியர்கள். மற்றவர்கள் தற்காலிக, மதிப்பூதிய, ஒப்பந்த ஊழியர்கள். தற்போது வீடுவீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளும் களப்பணியாளர்களாக 13,000 பேரைத் தமிழக அரசு தற்காலிகமாக நியமித்துள்ளது. கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை, களப்பணியாளர் ஒருவருக்கு நாளொன்றுக்கு ஒரு முகக்கவசமும் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை கையுறையும் வழங்கப்படுவதாக அரசு கூறுகிறது. ஆனால், பெரும்பாலான ஆண் தூய்மைப் பணியாளர்கள் கைக்குட்டையையும் பெண் பணியாளர்கள் துப்பட்டாவையுமே முகக்கவசமாக அணிகிறார்கள். எந்தப் பாதுகாப்பு வசதிகளும் இல்லாமல்தான் பெரும்பாலானோர் பணியாற்றுகின்றனர். சென்னையில் மட்டும் முப்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒன்பது தூய்மைப் பணியாளர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இத்தனை உயிரிழப்புகளுக்குப் பிறகும் மாநகராட்சியோ அரசோ மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் இதுவரை எத்தனை பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலைக்கூடச் சேகரிக்காமல் அலட்சியத்துடன் உள்ளன. கரோனாவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா காலத்தில் பணியாற்றியதைக் கருத்தில் கொண்டு தற்காலிக, ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவியை வழங்க வேண்டும். கொரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த தூய்மைப் பணியாளர்களுக்குக் கட்டாய பரிசோதனை மேற்கொண்டு, அவர்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்துகிறார் சென்னை மாநகராட்சியின் ‘செங்கொடி சங்க’ப் பொதுச்செயலாளர் பி.சீனிவாசுலு (ஜூலை 12 தமிழ் இந்து பெண் இன்று இணைப்பில் எல்.ரேணுகாதேவி எழுதிய கட்டுரையிலிருந்து)

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு | மர்ஹூம் டிப்ஸ் ஹஜ்ரத் அவர்களுடைய மகனாரும் – சாந்தம் பிரச்சார அறக்கட்டளை நிறுவனரும், வானியம்பாடி மஹல்லா ஜமாஅத் ஒருங்கினைப்பாளருமான தளி Dr.ஜாபர் சாதிக் MS அவர்கள் சற்றுமுன் (10-07-2020) சேலத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீவூன். அன்னாரது ஜனாஸா பள்ளப்பட்டி வந்துகொண்டுள்ளது. அன்னாரின்…

தமிழகத் தொழில்களை நடுக்கத்தில் தள்ளியிருக்கிறது ஊரடங்கு!

‘தமிழகத் தொழில்களை நடுக்கத்தில் தள்ளியிருக்கிறது ஊரடங்கு!’ – சிறு-குறு நிறுவன அதிபர்களின் கூக்குரல்   நாட்டின் தொழில் துறையில் மிக முக்கியமான களம், சிறு-குறு நிறுவனங்கள். தொழில் துறை என்பது டாடாக்களும் பிர்லாக்களும் மட்டும் அல்ல. டிவிஎஸ் நிறுவனம் ஒரு மோட்டார் சைக்கிளை உருவாக்குகிறது என்றால், அதற்கான நூற்றுக்கும் மேற்பட்ட உதிரிபாகங்களை உற்பத்திசெய்யும் சிறு-குறு நிறுவனங்களையும் உள்ளடக்கியதே அது. ஆடைகள் தொடங்கி ஊறுகாய் வரை உள்ளடக்கிய ஒவ்வொரு உற்பத்திக்கும் பின்னணியில் பல சிறு-குறு நிறுவனங்கள் இருக்கின்றன. தொழில் துறையில் பெருநிறுவனங்களைக் காட்டிலும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பையும், பெரிய அளவிலான உற்பத்தியையும் மேற்கொள்பவை இவைதான். கரோனாவுக்குப் பின் சர்வதேச அளவிலான தொழில் முடக்கங்கள் ஒருபுறம் நம்மூர் தொழில்க ளைத் தாக்கியிருக்கின்றன என்றால், தொடரும் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் ஒருபுறம் முடக்கியிருக்கின்றன. தமிழகத்தின் முக்கியமான நகரங்களில் தொழிலகங்களின் நிலையை… சுஜீஷ், தலைவர் (அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்), பி.என்.ரெகுநாதராஜா ( கப்பலூர் தொழிலதிபர்கள் சங்கத் தலைவர்), நேரு பிரகாஷ் (சிறு–குறு தொழில்கள் சங்கத் தலைவர், தூத்துக்குடி), பா.அறிவொளி (கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நலச் சங்கம்), வெற்றி. ஞானசேகரன், ஒசூர், தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்கம் ஆகியோர் சிறுகுறு தொழில்கள் இன்று சந்திக்கும் பிரச்சினைகளை எடுத்துரைக்கின்றனர். தொகுப்பு: கா.சு.வேலாயுதன், கே.கே.மகேஷ், என்.சுவாமிநாதன் (தமிழ் இந்துவில் வந்த கட்டுரை)  

ஊரடங்கு

ஊரடங்கு ஒழிந்தால்தான் எங்களுக்குப் பிழைப்பு   விவசாயிகள் உற்பத்தி செய்கிற பஞ்சை நூலாக்கி, துணியாக்கி, சாயமேற்றி, ஆடையாக்குகிற ஜவுளித் துறை சுமார் 6 கோடிப் பேருக்கு வேலை அளிப்பதுடன், நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் 13% பங்களிக்கிறது. நூல், ஆயத்த ஆடை, கைத்தறி உற்பத்தியில் நாட்டிலேயே முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு, இந்த ஊரடங்குக் காலத்தில் எப்படியிருக்கிறது? அந்தத் தொழிலாளர்கள் என்ன செய்கிறார்கள்? -என அறிந்துகொள்ள தமிழ் இந்து சார்பாக கா.சு.வேலாயுதன், கே.கே.மகேஷ் ஆகிய இருவரும் கிருஷ்ணமூர்த்தி ( பட்டு நெசவாளர், காஞ்சிபுரம்), பிரபு தாமோதரன் (நூற்பாலை உரிமையாளர், கோவை), யுவராஜ் சம்பத் (பனியன் தயாரிப்பாளர், திருப்பூர்), ஹனீபா (ஆயத்த ஆடை தயாரிப்பாளர்,     புத்தாநத்தம்), அ.மணிகண்டன் (நைட்டி – உள்ளாடை உற்பத்தியாளர், தளவாய்புரம்), பிரபாகரன் (ஆயத்த ஆடை தயாரிப்பாளர், மதுரை) ஆகியோரைப் பேட்டி கண்டு ஜூலை 8 தமிழ் இந்துவில் அவர்கள் கருத்துகளைப் பதிவு செய்திருந்தனர்.   சுருக்கமாகச் சொன்னால் “கரோனா முடிவுக்கு வந்தால்தான் பழைய நிலைமைக்குத் திரும்ப முடியும். அது எப்போது என்பது தெரியவில்லை; ஊரடங்கையாவது முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். ஊரடங்கு ஒழிந்தால்தான் எங்களுக்குப் பிழைப்பு” என்பதுதான் அவர்களது…

ஈகை பெருநாள் வாழ்த்துச்செய்தி..!

ஈகை பெருநாள் வாழ்த்துச்செய்தி..! ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், கோவை மாநகரத் தலைவர் பி.எஸ் உமர் ஃபாரூக்  ரம்ஜான் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். அவர் தமது வாழ்த்துச் செய்தியில், ” புனித ரமலான் மாதம் 30 நாள் நோன்பு இருந்த முஸ்லிம்கள் பெருநாள் தினத்தை உலகம் முழுதும் ஈகைத் திருநாளாக கொண்டாடி மகிழ்கின்றனர். இல்லாதோருக்கு ஈந்து, அவர்களின் சிரிப்பில்…

தன்னம்பிக்கை நாயகன்

தன்னம்பிக்கை நாயகன், லலிதா ஜுவல்லரியின் நிர்வாக இயக்குநர் திரு.கிரண் குமார் அவர்களைத் தலை வணங்குகிறேன்… “தன்னம்பிக்கை நாயகன்” லலிதா ஜுவல்லரியின் நிர்வாக இயக்குநர் திரு.கிரண் குமார் அவர்கள்… “2020” இந்த வருடம் நம்ம மைண்ட்ல இருக்க வேண்டியது பணம் இல்லங்க உயிர். பணத்தை அப்புறமா சம்பாதிச்சுக்கலாம். ஏன்னா நம்ம…

டெஸ்ட் கிட் இல்லை

“டெஸ்ட் கிட் இல்லை, எல்லோருக்கும் நெகடிவ் னு ரிப்போர்ட் கொடுங்க” – தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி டீன் !. இன்று வாட்சப்பில் பரப்பாக வந்து கொண்டிருக்கும் காணொளி இது. இடம் – தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி வளாகம். காரிலிருந்து பேசுபவர் – மருத்துவக் கல்லூரி டீன். “மருத்துவக் கல்லூரி மாணவர்களை உடனே வெளியேறச் சொல்லுங்கள் அல்லது போலீஸைத்தான் கூப்பிட வேண்டி இருக்கும் அவர்களை வெளியேற்றுவதற்கு” என்கிறார். கொரோனா டெஸ்ட் செய்யாமல் அவர்களை எப்படி வெளியே அனுப்புவது எனக் கேட்பவரிடம், “டெஸ்ட் கிட் இல்லை, எல்லோருக்கும் நெகடிவ் னு ரிப்போர்ட் கொடுங்க” என டீன் சொல்கிறார். மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ” கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்” என இருக்கிறது. பழகிக்கொள்வோம் !..

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் தளர்வுகள் எதுவும் இல்லை

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் தளர்வுகள் எதுவும் இல்லை. பச்சை, ஆரஞ்சு பகுதிகளுக்கு அதிகளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என பிரிக்கப்பட்டு அதற்கேற்ப நெறிமுறைகள் அமல்படுத்தப்படும் – மத்திய அரசு. தமிழகம: சிவப்பு, பச்சை, ஆரஞ்ச் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு…