1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

அர்னாப் கோஸ்வாமிவின் மனுக்களை மட்டும் உச்சநீதிமன்றம் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்வது எப்படி?

அர்னாப் கோஸ்வாமிவின் மனுக்களை மட்டும் உச்சநீதிமன்றம் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்வது எப்படி?   ‘ரிபப்ளிக்’ டிவி முதலாளியும், இந்துத்துவா ஆதரவாளருமான அர்னாப் கோஸ்வாமி தாக்கல் செய்யும் மனுக்களை மட்டும் உச்சநீதிமன்றம் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்வது எப்படி? அவருக்கு மட்டும் ஏன் இந்தச் சலுகை? என்று உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் (Supreme Court Bar…

புதிய குடிநீர் ஆதாரங்களாக ஆற்றங்கரைகள்

2018-ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை..இப்போதும் பொருந்தி வருகிறது.. புதிய குடிநீர் ஆதாரங்களாக ஆற்றங்கரைகள் பேராசிரியர் கே. ராஜு 2018 மார்ச் 18 அன்று ஆங்கில இந்து நாளிதழில் அதிதி வீணா, விக்ரம் சோனி ஆகிய இரு சூழலியலாளர்கள் ஆற்றங்கரைகளை புதிய குடிநீர் ஆதாரங்களாக நாம் பயன்படுத்திக் கொள்வதற்கான வழிமுறையை கீழ்க்கண்டவாறு…

ஆசிரியர் திரு முகமது லுக்மன் ஹக்கீம் அவர்கள் ……..

ஆசிரியர் திரு முகமது லுக்மன் ஹக்கீம் அவர்கள் —————————- எட்டாம் வகுப்பை கிராம பள்ளியில் முடித்து ஒன்பதாம் வகுப்பு முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்தேன். கிராம சூழலிலே வளரந்த எனக்கு நகரம் புது அனுபவமாக இருந்தது. ஒன்பதாம் வகுப்பு டி பிரிவு. எங்கள் வகுப்பு ஆசிரியர் திரு லுக்மன்…

பிரணாப்

பிரணாப்- எம்.நடராசன் நெகிழ்விக்கும் நேசம் _________ எம் என் அவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப் படுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர் அவர் எனக்கு அழைப்பு விடுத்தார். நானும் அவரை பெசன்ட் நகரில் பாரி தெருவில்(என்ன பொருத்தம் பாருங்கள்) உள்ள இல்லத்தில் சந்தித்தேன். அவர் என்னிடம் புகைப்படக் கற்றைகளைக் கொடுத்தார்.…

ஆமையைத் தோற்கடிக்கும் மசூதி இடிப்பு வழக்கு

  ஆமையைத் தோற்கடிக்கும் மசூதி இடிப்பு வழக்கு   அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், இதில் பிரதமர் மோடி பங்கேற்கவிருப்பதாக வும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திரா என்ற அறக்கட்டளை கோவிலை கட்டுவதாகவும், ஐந்து கோபுரங்களுடன் 161 அடி உயரத்தில் கட்டுமானம் நடைபெறவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டு விழாவில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்க இருக்கிறார்களாம்.   கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதத்திலிருந்து மீண்டும் அந்தப் பணி துவங்கியுள்ளது. அடுத்து வரும் மாதங்களில் கொரோனா நோய்த்தொற்றும், உயிரிழப்பும் அதிகமாக இருக்கும் என்றும் மருத்துவ நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கையை கோவில் கட்டும் அறக்கட்டளை யோ, விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடியோ கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.   அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர் பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தீர்ப்பு நீதியின்பாற் பட்டதாக இல்லை என்ற விமர்சனம் எழுந்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம்தான் தற்போது கோவில் கட்டும் அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்படியென்றால், பாபர்  மசூதியை சட்ட விரோதமாக இடித்த வழக்கு என்னாயிற்று என்ற கேள்வி எழுவது இயல்பு.  அந்த வழக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது. 1992ஆம் ஆண்டு  டிசம்பர்  6ஆம் தேதி உச்ச நீதிமன்றத்திற்கு அளித்த உறுதி மொழியை யும்  மீறி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட சங்பரிவாரத்தினர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மசூதி இடிப்பிலும், அது தொடர்பான சதியிலும், அத்வானி உள்ளிட்ட 68 பேர் மீது லிபரான் கமிஷன் குற்றம் சாட்டியது. இதில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் அடக்கம். லிபரான் கமிஷனால் குற்றம் சாட்டப்பட்ட பலர் மரணமடைந்து விட்டனர். அந்த கமிஷன் அடிப்படையில் எந்த நடவடிக்கையும், யார் மீதும் எடுக்கப்படவில்லை. மறுபுறத்தில் மசூதி இடிப்பு வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இம்மாதம் ஜூலை 24ஆம் தேதி எல்.கே. அத்வானி வாக்குமூலம் அளிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் கூட ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டு மென்று உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டதால்தான் நடக்கிறது. 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலையில், இப்போதுதான் வாக்குமூலம் பெறும் பணியே நடைபெறுகிறது என்றால், ஆமையை தோற்கடிக்கும் வேகத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவருவதை நாம் புரிந்து கொள்ள முடியும். இத்தகைய போக்கு நீதித்துறையின் மீதான மக்க ளின் நம்பிக்கையையும் தகர்க்கக் கூடியதாகும். (ஜூலை 22 தீக்கதிர் நாளிதழின் தலையங்கம்)

அல்ஹாஜ் K.M. இஸ்மாயில் காலமானார்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சென்னை மண்ணடி சீதக்காதி பிரைமரி தலைவர் அல்ஹாஜ் K.M. இஸ்மாயில் காலமானார் இ.யூ.முஸ்லிம் லீகின் முதுபெரும் தலைவர் சென்னை மண்ணடி காசிம் நியூஸ் ஏஜன்சி உரிமையாளர் தூத்துக்குடி மர்ஹும் M.முஹம்மது காசிம் அவர்களின் புதல்வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர்…

கொரோனா பரிசோதனை

முதுகுளத்தூர் சுற்று வட்டார பொதுமக்கள் யாரேனும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள விரும்பினால் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்.தாங்களுக்கு சிறிதளவில் சந்தேகம் இருக்குமேயானால் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.இது அவமானபட கூடிய விசயம் கிடையாது.வருமுன் காப்பதே சிறந்தது. குறிப்பு: ஆதார் கார்டு கட்டாயம் கொண்டு செல்ல…

எதிர்கொள்ள….

வெட்டி மாற்றப்படும் மரத்தின் சின்ன வேர்களில் இருந்துகூட புதிய தளிர்கள் தோன்றும்.அதுகூட மரமாகலாம். வெட்டி எறியப்படும் செடிகள் ,தங்களது உடல்கள் நாசமாக்கப்பட்ட வேதனைகளைப்பற்றிப் பேசுவதில்லை.இனி வளர்ந்து பூத்துக் குலுங்கும் வாய்ப்புகளைப் பற்றியே அவை பேசும். ஒரு காலமும் ஒருபாடு காலத்திற்கு நீள்வதில்லை.அது நல்ல காலமானாலும் சரி,கஷ்ட காலமானாலும் சரி.…

அதிராம்பட்டினத்தில் அல்ஹாஜ் L.S.M முகமது அப்துல் காதர் ஆலிம் வஃபாத்!

அதிராம்பட்டினத்தில் அல்ஹாஜ் L.S.M முகமது அப்துல் காதர் ஆலிம் (81) வஃபாத்! அதிராம்பட்டினம், நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் L.S.M முகமது உமர் தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி L.M.S முகமது அப்துல்லா மரைக்காயர் அவர்களின் மருமகனும், ஹாஜி ஹாஜா முகைதீன், ஹாஜி முகமது அப்துல்லா, ஹாஜி…