1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

தடை செய்யப்பட்ட சொற்கள்

தடை செய்யப்பட்ட சொற்கள் சு.வெங்கடேசன் எம்.பி. ஒரு கழுதை தனது கஷ்டங்களை நினைத்து கண்ணீரோடு சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தது. அதைப்பார்த்த அரசு அதிகாரி ஒருவர் “இந்த கழுதையின் மீது வழக்கு போடுங்கள்” என்று கூறினார்.   “ நான் எந்த தவறும் செய்யவில்லையே, என் மீது ஏன் வழக்கு போடுகிறீர்கள்?,” என கழுதை கேட்டது. அதற்கு அந்த அதிகாரி “ நீ அரசுக்கும் அரசருக்கும் எதிரான செயலில் ஈடுபட்டாய்” என்று கூறினார். “இல்லை, நான் நமது அரசர் செய்த ஊழலைப் பற்றியோ, அவரது மோசடிகளைப் பற்றியோ, நாட்டில் கிரிமினல் பேர்வழிகள் அதிகமாகிவிட்டார்கள் என்றோ, ரவுடித்தனம் செய்யும் குண்டர்கள் அதிகமாகிவிட்டார்கள் என்றோ, அரசரைச் சுற்றி  இரட்டைவேடம் போடும் துதிபாடிகள் நிறைந்திருக்கிறார்கள் என்றோ எதுவும்  சொல்லவில்லை, என்னைப் போய் அரசுக்கு எதிரான செயலில் ஈடுபட்டதாக எப்படி சொல்கிறீர்கள்?” என்று கேட்டது.  “உன் மீது வழக்கு போட்டாகிவிட்டது. இனி நீ எது சொல்வதாக இருந்தாலும் நீதிமன்றத்தில் வந்து சொல்” என்று சொல்லி கழுதையைக் கைது செய்தனர்.  மறுநாள் நீதிமன்றத்தில் விசாரணை துவங்கியது. கழுதையின் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் கூறினார். அதைக்கேட்டு பதட்டமான கழுதையின் தரப்பு வழக்கறிஞர், கழுதையை பார்த்து கேட்டார்:   “நீ நமது அரசரை  சகுனி என்றோ சர்வாதிகாரி என்றோ தவறாக பேசினாயா?” “இல்லை” “நாடகக்காரர் என்றோ பெருமை பீற்றிக் கொள்பவர் என்றோ உண்மையைப் பேசித்தொலைத்தாயா?”  “இல்லை”  “நாச சக்தி என்றோ, ரத்தம் குடிப்பவர் என்றோ குற்றம்சாட்டினாயா!” “இல்லை… எனது வாழ்க்கை கஷ்டத்தை நினைத்து கண்ணீர் வடித்தபடி நடந்து கொண்டிருந்தேன். நான் வேறெதுவும் செய்யவில்லை” என்றது கழுதை. “அரசுக்கு எதிராக எதையும் செய்யாத எனது கட்சிக்காரரைப் பார்த்து எப்படி தேசத்துரோகி என்கிறீர்கள்?” எனக் கேட்டார் வழக்கறிஞர். “நமது அரசர் ஆட்சியில் கண்ணீர் வடிப்பதென்பது அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல் என்று உங்களுக்குத் தெரியாதா?” எனக் கேட்டார் அரசு வழக்கறிஞர். அப்படியொரு சட்டம் இருப்பது அப்பொழுதுதான் கழுதைக்கு நினைவுக்கு வந்தது.   அதை மறந்து பொதுவெளியில் கண்ணீர் வடித்து விட்டோமே என யோசித்த கழுதை, சட்டென சுதாரித்து “நான் உண்மையாக கண்ணீர் வடிக்கவில்லை, போலியாக முதலைக் கண்ணீர்தான் வடித்தேன்” என நீதிபதியைப் பார்த்துச் சொன்னது. “கண்ணீர் வடிப்பதைவிட பெரிய குற்றம் முதலைக்கண்ணீர் வடிப்பது” என்று கூறி சட்டப்பிரிவை எடுத்துக் காட்டினார் அரசு வழக்கறிஞர். கழுதையின் வழக்கறிஞர் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார். கண் கலங்கி ஆனால் கண்ணீர் சிந்த முடியாமல் பாவமாய் நின்ற கழுதையின் முகத்தைப் பார்த்தார் நீதிபதி. சட்டத்தை மீறி கண்ணீர் வடித்த பிரிவில் வழக்குப்போட்டால் சில மாதங்கள் தான் தண்டனை. ஆனால் தேசத்துரோக வழக்கில் காலம் முழுவதும் சிறையில் இருக்க வேண்டியிருக்குமே என இரக்கப்பட்ட நீதிபதி அரசு வழக்கறிஞரை பார்த்து,  “இந்தக் குற்றத்துக்கு ஏன் தேசத் துரோக வழக்கு போட்டீர்கள்?” எனக்கேட்டார். அதற்கு அரசு வழக்கறிஞர். கூண்டில் நின்று கொண்டிருந்த கழுதையை பார்த்து “நீ யார்?” எனக் கேட்டார். கண்ணீரையும் துக்கத்தையும் அடக்கிக்கொண்டு சொன்னது “நான் ஒரு கழுதை” என்று.  “கழுதை என்பது இந்த நாட்டில் தடைசெய்யப்பட்ட சொல். அதனை நாடாளுமன்றத்திலேயே பயன்படுத்தக் கூடாது. இவரோ அதனை நீதிமன்றத்தில் பயன்படுத்துகிறார். அதனையே தனது பெயர் எனச்சொல்லும் ஒருவர் மீது தேசத்துரோக வழக்கு போடாமல் வேறு என்ன வழக்கு போடுவது மை லாட்?” எனக் கேட்டார் அரசு வழக்கறிஞர்.…

பாபாசாகேப் அம்பேத்கரின் கால் தூசிக்கு மோடி சமமாக மாட்டார் – பேரா. ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பேட்டி

துபாயில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா பேட்டி  துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும்  இந் தியர் நல்வாழ்வு பேரவையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு சமுதாய நிகழ்ச்சிகளில்…

துபாயில் மரணமடைந்த சகோதர சமுதாயத்தை சேர்ந்தவரின் உடலை இறுதிச் சடங்கு செய்து தகனம் இஸ்லாமிய சகோதரர்கள்

துபாயில் மரணமடைந்த இந்து சமுதாயத்தை சேர்ந்தவரின் உடலை இறுதிச் சடங்கு செய்து தகனம் இஸ்லாமிய சகோதரர்கள் துபாய் : துபாயில் வேலூர் பகுதியைச் சேர்ந் த அருணா தங்கப்பா (வயது 58) கடந் த 2021 டிசம்பர் 15 ஆம் தேதி ஹார்ட் அட்டாக் காரணமாக மரணமடைந் தார்.…

பங்களாதேஷில் நடைபெற இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் துணை பயிற்சியாளராக தமிழக இளைஞர் நியமனம்

பங்களாதேஷில் நடைபெற இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் துணை பயிற்சியாளராக தமிழக இளைஞர் நியமனம் புதுடெல்லி : பங்களாதேஷில் நடைபெற இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் துணை பயிற்சியாளராக தமிழக இளைஞர் அப்பாஸ் அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை…

தோண்ட தோண்ட பொக்கிஷங்கள்… தமிழக அகழாய்வுகளில் இதுவரை கிடைத்தது என்ன? 

source – https://tamil.oneindia.com/tamilnadu-archaeological-sites-and-findings-ks-radhakrishnan-cs-432642.html?story=6தோண்ட தோண்ட பொக்கிஷங்கள்… தமிழக அகழாய்வுகளில் இதுவரை கிடைத்தது என்ன? -கே.எஸ். ராதாகிருஷ்ணன்செப்டெம்பர் 12, 202தமிழகத்தில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுகள் மற்றும் அதன் முடிவுகள் தொடர்பாக மூத்த வழக்கறிஞரும் திமுக செய்தித் தொடர்பாளருமான சமூக செயற்பாட்டாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தமது சமூக வலைதளப் பக்கத்தில் விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளார். விருதுநகர்…

ஹைக்கூ வில் உலக சாதனை படைத்த தமிழன்

தலைப்பு : ஹைக்கூ வில் உலக சாதனை படைத்த தமிழன். ஐக்கூ, கைக்கூ அல்லது ஹைக்கூ (Haiku) மூன்று வரிகளில் முறையே ஐந்து, ஏழு, ஐந்து அசைகள் என 17 அசைகளைக் கொண்டு அமைக்கப்பெறும் இயைபற்ற ஜப்பானியக் கவிதை வடிவம் ஆகும். ஐக்கூ மிகக்குறைந்த சொற்களைக்கொண்டு நேரடியாகவும், மறைமுகமாவும்…

உலக தற்கொலை தடுப்பு தினம்

உலக தற்கொலை தடுப்பு தினம் சிறுவயதில் கீழச்சிறுபோதில் திருமதி பேச்சி அம்மாயி ஒரு சிறு தன் மானப் பிரச்சனைக்காக பூச்சி மருந்தை உண்டு இறந்தார். என் மத்திய வயதில்நான்கு மகள்களின்தகப்பன் ஒருவர் பிள்ளைகளின் திருமண செலவுகளுக்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாது குமிழி மடை புளிய மரத்தில்…

கல்விக் கடனுக்காக….

குடும்பச் சொத்துக்களை  குடும்பத்திற்கு சொந்தமான நகைகளை விற்கும் போது கூட அதிலும் ஊழல் செய்வது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் மோடி அரசுதான். இவர்களது ஆட்சியில் வங்கிகளுக்கு  செல்வது என்றாலே, மோடி அரசின் களவாணி நண்பர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான். ஏனென்றால் அவர்களுக்கு பொதுப்பணம் பரிசாகக் கிடைக்கிறது; வங்கிகளே பரிசுப் பொருளாக மாற்றப்படுகின்றன;…

இந்திய தேசியக் கொடி

இந்திய தேசியக் கொடி வரைந்த மாணவர் டி. முஹம்மது ஜாஸிம் முதுகுளத்தூர்

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு 12பி அந்தஸ்து

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு 12பி அந்தஸ்து பல்கலைக்கழக மானியக் குழு வழங்கியது சென்னை : தமிழ்நாடு அரசால் ஆசிரியர் கல்வியை மேம்படுத்தி சிறந்த ஆசிரியர்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு  தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் கடந்த 2008-ஆம் ஆண்டு ஜுலை மாதம்  தமிழக அரசால் தொடங்கப்பட்டது. மத்திய…