1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

மாமனிதர் ஜவஹர்லால் நேரு

மாமனிதர் ஜவஹர்லால் நேரு. பெற்றோர் தங்கள் குழந்தைகளை சீர்படுத்தும் போது சில நேரங்களில் கோபத்துடன், ஏன் சோம்பேறியாக இருக்கிறாய்? இன்னும் கடுமையாக நீ வேலை செய்ய வேண்டும். இல்லையெனில் நீ உருப்பட மாட்டாய்… என்றெல்லாம் சர்வ சாதாரணமாக சொல்வதுண்டு. பின்நாட்களில் வளர்ந்த குழந்தைகள் பெற்றோர்களை அந்த வார்த்தைகள் பேசினார்கள்…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா நிறைவு மாநாடு

2023, நவம்பர் 16 புதுடெல்லி தல்கோத்ரா ஸ்டேடியத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா நிறைவு மாநாடு தலைநகர் புதுடெல்லி தல்கோத்ரா ஸ்டேடியத்தில் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து டெல்லி மாநாட்டிற்கு ரயில் மூலம்…

இந்திய சுதந்திர போராட்டத்தில் மறைக்கப்பட்ட சில உண்மைகள்

இந்திய சுதந்திர போராட்டத்தில் மறைக்கப்பட்ட சில உண்மைகள் 🇮🇳. டெல்லியிலுள்ள இந்தியா கேட் மீது நாடு விடுதலைக்காக தனது இன்னுயிரை நீத்த சுமார் 95,300 சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் 61,945 பேர் முஸ்லிம்கள். 🇮🇳. சுதந்திரம் கிடைத்த நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் கணீரென ஒலித்த தேசிய…

நிலக்கரி ஊழல் வழக்கு: பெண் ஐஏஎஸ் அதிகாரி கைது – அமலாக்கத்துறை அதிரடி

நிலக்கரி ஊழல் வழக்கு: பெண் ஐஏஎஸ் அதிகாரி கைது – அமலாக்கத்துறை அதிரடி நிலக்கரி ஊழல் வழக்கில் பெண் ஐஏஎஸ் அதிகாரியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.ராய்ப்பூர், சத்தீஸ்கர் மாநில ஐஏஎஸ் அதிகாரி ரனு சஹு. இவர் அம்மாநில வேளாண்துறை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இதனிடையே, வேளாண்துறை இயக்குனராக பணியாற்றுவதற்கு…

சென்னை நோக்கி வந்த கோரமெண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றொரு ரயிலுடன் மோதியதில் கோர விபத்து!

சென்னை நோக்கி வந்த கோரமெண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றொரு ரயிலுடன் மோதியதில் கோர விபத்து! மேலும் ஒரு ரயில் உடன் மோதி இருக்கும் என தகவல் மொத்தம் மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கி உள்ளன என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.. கோரமெண்டல் ரயிலில் 800 பேர் வரை முன்…

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பாராட்டு விழா

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 11.03.2023 மாலை “காலா பாணி” என்ற வரலாற்று நாவலுக்கு,  சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர், டாக்டர் மு.7.)ராஜேந்திரன், இஆப அவர்களுக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்துணைத்தலைவர் இராகவன் நாயுடு தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. தில்லித் தமிழ்ச் சங்கப் பொதுச் செயலாளர் இரா.முகுந்தன் அனைவரையும் வரவேற்றுப் பேசியதுடன், “மத்திய அரசின்…

சென்னையில் வரும் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற இருந்த இந்தியா மற்றும் இலங்கை மாற்றுத்திறனாளி அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடக்குமா ?

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அப்பாஸ் அலி கவலை சென்னையில் வரும் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற இருந்த இந்தியா மற்றும் இலங்கை மாற்றுத்திறனாளி அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடக்குமா ? இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அப்பாஸ் அலி…

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் அப்பாஸ் அலிக்கு ராமநாதபுரம் சரக டிஐஜி மயில் வாகனன் பாராட்டு

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் அப்பாஸ் அலிக்கு ராமநாதபுரம் சரக டிஐஜி மயில் வாகனன் பாராட்டு இராமநாதபுரம் : இந்திய நாட்டிற்கு சுற்றுப்பயணம் வர இருக்கும்  பங்களாதேஷ் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி,  இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியுடன் வருகின்ற 20, 21  மற்றும்  22 ஆகிய…

டெல்லி நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் துறை 

டெல்லி நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் துறை  – ரூ.5 கோடி நிதி வழங்கியது தமிழக அரசு வடஇந்தியாவில் தொடங்கப்பெறும் முதல் தமிழ்த் துறையாக இது இருக்கும். ஆண்டுக்கு இருமுறை ஜே என் யூ தமிழியல் எனும் ஆய்வு இதழ் வெளியிடப்படும். டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்…

கட்டிடக்கழிவுகளை மீண்டும் பயன்படுத்துவோம்

கட்டிடக்கழிவுகளை மீண்டும் பயன்படுத்துவோம் தமிழகத்தின் ஏதோ ஒரு ஆற்றில் இருந்து அள்ளப்பட்ட மணலே மாலத்தீவில் கட்டிடங்களாக உருமாறிக் கொண்டிருக்கின்றன. பாலைவன நாடுகள் என்று அழைக்கப்படும் வளைகுடா நாடுகளில் ஆற்று மணல் இல்லாததால் ஏதோ ஒரு நாட்டில் இருந்தே மணல் இறக்குமதி செய்யப்படுகின்றது.  நாம் வியந்து பார்க்கும் கட்டிடங்கள் அனைத்திலும் மணல் ஒளிந்து கொண்டு உள்ளது. ஒருவர் வீடு கட்டக்கூடாதா என்றால் கட்டலாம். வீடு என்பது வசிப்பவரின் தேவைக்கு போதுமானதாக இருக்க வேண்டும். ஆனால் மாளிகை என்பது செல்வ நிலையின் அடையாளம். இரண்டு பேர் வசிப்பதற்கும் 10 ஆயிரம் சதுர அடி மாளிகை கட்டப்படுவதை பார்க்கிறோம். முகேஷ் அம்பானி மும்பையில் கட்டி உள்ள 27 அடுக்கு மாளிகை ஏறக்குறைய ஐந்து லட்சம் சதுர அடி பரப்புடையது. ஆனால் அங்கிருந்த அவருடைய குடும்ப உறுப்பினர்களோ மொத்தம் ஐந்து பேர்தான்.  அதே மும்பையில்தான் வீடற்றுச் சேரிப் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் குவிந்துள்ளனர். 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் இந்தியாவின் ஒன்பது கோடி நகர்ப்புற வீடுகளில் ஒரு கோடியே 10 லட்சம் வீடுகள் காலியாக இருந்தன என்கிற தகவலை இத்துடன் இணைத்துப் பார்க்கலாம். ஆனாலும் வளர்ச்சித் திட்டங்கள் குறையவில்லை. யாருக்காக அந்த வளர்ச்சி என்பதுதான் கேள்வி.  இந்தியாவில் மட்டும் ஓராண்டில் ஏறத்தாழ 3 கோடி டன் வரை கட்டிடக்கழிவு உருவாகிறது. இவற்றில் ஐந்து விழுக்காடு மட்டுமே மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. சிங்கப்பூரில் இது 98% ஆக உள்ளது. நாம் எப்போது அந்த இடத்திற்கு முன்னேறப் போகிறோம்? (எழுத்தாளர் நக்கீரன் தமிழ் இந்துவில் எழுதிய கட்டுரையிலிருந்து)