1. Home
  2. இலக்கியம்

Category: இலக்கியம்

பண்டிதர் அயோத்திதாசரின் வாழ்வும் பணிகளும்

பண்டிதர் அயோத்திதாசரின் வாழ்வும் பணிகளும்–முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி தமிழ், திராவிடம் ஆகிய இரண்டு சொற்களும் தமிழ்நாட்டு அரசியலின் அடிப்படையாக அமைந்ததற்குத் தொடக்கக் கால வித்தாய் அமைந்தவர் பண்டிதர் அயோத்திதாசர். அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வேளையில்…

பார்ப்பனர் அல்லாதார் இயக்கமும், நீதிக் கட்சியும்

பார்ப்பனர் அல்லாதார் இயக்கமும், நீதிக் கட்சியும்.— முனைவர் சிவ இளங்கோ புதுச்சேரி. சென்னை மாகாணத்தில் பார்ப்பனரல்லாதார் சங்கத்தைத் துவக்கியவர்கள் நாயக்கர்கள் மட்டுமல்ல, அதில் எல்லாப் பிரிவினரும் இருந்தனர். குறிப்பாகப் பெரியார் அந்த அமைப்பிலேயே இல்லை. இதற்குச் சற்று நீண்ட விளக்கம் தேவை.1900 – 1920 ஆம் ஆண்டுகளின் இடையில்…

வாசிப்புக்கு திசை இல்லை

வாசிப்புக்கு திசை இல்லை எஸ் வி வேணுகோபாலன் சுவாரசியமான ஒரு கோப்பை தேநீர், கடலை மிட்டாய் இருந்தால் போதும்,  தொழிற்சங்க வாழ்க்கையில் மணிக்கணக்கில், மாநாட்டு அறிக்கை விஷயங்கள் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருப்பேன். மூன்றாவது விஷயம் ஒன்று உண்டு எனில், அது நல்ல கவிதை புத்தகம். கல்லூரிக் காலத்திலேயே கவிதைகள் மீதான காதல் வலுத்திருந்தது. பழந்தமிழ்ச் செய்யுள்கள், திரைப்பாடல்கள், புதுக்கவிதைகள்…

பத்திரிகைப் பணி…

தஞ்சையில் இருந்து, சென்னைக்கு பத்திரிகைப் பணிக்கு வந்தபோது நல்ல சம்பளம்தான். ஆனாலும் ஊதாரி. வீட்டுக்கு போன் போட்டு, ஏதாவது பொய் சொல்லி, “ ரெண்டாயிரம் மணியார்டரில் அனுப்புங்கப்பா” என்பேன். (அப்போது நெட் பேங்க்கிங் கிடையாது)..அப்பாவும் உடனடியாக அனுப்பிவிடுவார். (சம்பளத்தைவிட அதிகமாக அப்பாவிடம் வாங்கியிருக்கிறேன்.) மணியார்டரில் பணம் அனுப்பும்போது, அந்த ஃபாரத்தில் சில வரிகள் ஆங்கிலத்தில் எழுதி அனுப்புவார் அப்பா. (ஆங்கிலத்திலும் மிகப் புலமை பெற்றவர்) அதைக் கையால் எழுதாமல், யாரிடமாவது தட்டச்சி அனுப்புவார். அது அவரது வழக்கம். ஒவ்வொரு முறையும், “மை டியர் சன்.. (my dear son)” என்று ஆரம்பிக்கும் அந்த குறுங்கடிதம். ஒருமுறை மணிஆர்டர் வந்தபோது அதில் தட்டச்சியிருந்த வார்த்தையைப் பார்த்து அதிர்ந்தேன். மை டியர் சன் (my dear son) என்பதற்கு பதிலாக மை டியர் சின் ( my dear sin) என்று தட்டச்சியிருந்தது. அப்பா வேண்டுமென்றே அப்படி தட்டச்சு செய்ய சொல்லியிருக்க மாட்டார். ஆனாலும் “சின்” என்ற வார்த்தை மனதை ஏதோ செய்தது. அந்த மணியார்டர் பணத்தை வாங்காமல் திருப்பி அனுப்பிவிட்டேன். அப்பாவுக்கு போய்ச் சேர்ந்தது பணம். அவருக்கு அதிர்ச்சி. உடனடியாக என் அலுவலகத்துக்கு தொலைபேசினார். “ஏம்பா பணம் திரும்பி வந்துருச்சு” என்றார் பதட்டமாக. அப்பாவிடம் எப்போதுமே வெளிப்படையாகவே பேசுவேன்: “மைடியர் சின் அப்படின்னு இருந்துச்சுப்பா… அது சரிதானேன்னு தோணுச்சு… அதான் “ என்றேன். அப்பா சிரித்தார். நான் அவரை மிக கவனித்திருக்கிறேன். பெருந்துன்ப நேரங்களி்ல் அவர் சிரிக்கவே செய்திருக்கிறார். அப்படியானதொரு துயரத்தை வெளிப்படுத்திய அந்த சிரிப்பை இனம் கண்டுகொண்டேன். அப்படியே போனை வைத்துவிட்டார் அப்பா. அப்போது நான் பணியாற்றியது, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வந்துகொண்டிருந்த தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில். மறுநாள் காலை.. அலுவலக்ததில் இருந்த எனக்கு செக்யூரிட்டியிடமிருந்து (இன்டர்காம்) அழைப்பு. என்னைப் பார்ப்பதற்கு அப்பா வந்திருப்பதாக தகவல் சொன்னார். இரண்டாவது மாடியிலிருந்து ஓடி வந்தேன். செக்யூரிட்டி அலுவலகத்தில் அப்பா அமர்ந்திருந்தார். உள்ளுக்குள் ஏதோ செய்தாலும், சாதாரணமாக முகத்தை வைத்தபடி, “என்னப்பா திடீர்னு..” என்றேன். அப்பா என் தலைவருடி, “தம்பி.. அப்பா உன்னை சின்.. அதான் பாவம்னு நினைப்பேனா..? உனக்கென்ன ராஜா… நீதான என் சொத்து… அந்த டைப்ரட்டிங்காரர் ஏதோ அவசரத்துல தப்பா டைப் அடிச்சுட்டார். இதுக்கெல்லாமா வருத்தப்படுறது? பணத்தை திருப்பி அனுப்பிட்டியே.. சிரமப்படுவேல்ல.. . அதான் கொடுக்க வந்தேன்” என்றார் அப்பா. முட்டிக்கொண்டு வந்த அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு ஏதேதோ பேசினேன். *தாயிடம் நிரூபியுங்கள்*-* கடைசி வரை அன்பாக இருப்பேன் என்று. *தந்தையிடம் நிரூபியுங்கள்* – கடைசி வரை உங்கள் பெயரைக் காப்பாற்றுவேன் என்று. *மனைவியிடம் நிரூபியுங்கள்*…

காமன்வெல்த் சிறுகதை பரிசு

காமன்வெல்த் சிறுகதை பரிசு கதைகள் எழுதுவோர் இந்த வாய்ப்பினை பயன்படுத்துங்கள்.தமிழ் மொழியிலும் கதைகளை அனுப்பலாம். காமன்வெல்த் சிறுகதை பரிசு, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட, இதுவரை வேறெங்கும் வெளிவந்திராத புனைவு சிறுகதைகளுக்கு (2000-5000 வார்த்தைகள்) வழங்கப்படுகிறது. வேறு மொழிகளிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட கதைகளும் போட்டிக்கு தகுதிபெறும். ஒவ்வொரு வருடமும் வெற்றி பெறும்…

ஒரு வகுப்பு நடக்கிறது

ஒரு வகுப்பு நடக்கிறது________________________________ருத்ரா(ஆசிரியர் தினக்கவிதை) அந்த வகுப்புக்குள்ஒன்றன் பின் ஒன்றாக‌ஐந்து சிட்டுக்குருவிகள்பறந்து வந்தன.கிரீச் கிரீச் ஒலிகள்வகுப்பு முழுதும்எதிரொலித்தன.குருவிகள் சிறகடிக்கும் போதுமாணவர்களின்புத்தகங்களின் பக்கங்களும்சிறகுகள் போல் படபடத்தன.எல்லோருடைய கண்களின்கருவிழிகளில் கூட‌குருவிகளின் சிறிய பிம்பங்கள்சிதறி ஓடின!ஒரு குருவி அறை முழுதும்வட்டம் அடித்துக்கொண்டேஇருந்தது.இரண்டு குருவிகள்ஒன்றின் சிறகை மற்றொன்றுகவ்விக்கொண்டேபறந்து பறந்துகிரீச் கிரீச் என்றன.அது என்ன?அது என்ன…

பள்ளிக்கூடம் போவோம்

பள்ளிக்கூடம்போவோம்“”””””””””””””‘”‘””‘””””””‘”””””””””””‘வண்ணத்து பூச்சிகள்வகுப்பறைக்கு போகிறார்கள்.இத்தனை மாதமாய்கூண்டில் அடைபட்டபறவைகள் இன்றுசுதந்திரமாய் பள்ளிக்கூடம் போகிறார்கள் தோழமையுடன் உரையாடி மகிழசீவி சிங்காரிச்சிபள்ளியில் பாடம்படிக்க வந்த மாணாக்கர்கள் எல்லாம் கற்பிக்கும்ஆசிரியரால் வரவேற்கப்பட்டு கிருமிநாசினி யால்கைகளைசுத்தமாக்கிவகுப்பறைக்கு செல்கின்றார்கள்ஆன்லைன் வகுப்புஇனி வேண்டாம்ஆசிரியருடன் மாணாக்கர்கள் பயிலும்நிலையே இனி நிறந்தரமாகட்டும்கொரானா வைரஸின்ஆபத்தை உணர்ந்துவிட்டோம் இனிவிழிப்புடன் இருந்துநலமுடன் வாழ்வோம்பள்ளிக்கூடம் போவோம் பாடம் கற்றுக்…

அன்புள்ள இளைஞனுக்கு

அன்புள்ள இளைஞனுக்கு இளைஞனே!இன்னல் எதுக்கு?இலக்கு செதுக்கு விரைகிறது உலகம்அடுத்த நூற்றாண்டைஅன்றாடம் பார் அவமானப் படுதோல்விகளைக் கொண்டாடுவானம் தொடுவதற்குஞானம் தேடு திறனோடு உறவாடுகனவோடு நடைபோடு முடியாது என்பதும்விடியாது என்பதும்கிடையாது என்று காட்டு உன் ஆலமர நிழலில்வாழட்டும் மனிதர்கள்! முனைவர் மு. அ. காதர்சிங்கப்பூர்

சொற்கள்

சொற்கள் பற்களே!சொற்களை கவனியுங்கள் பேசுவதற்குத்தான் சொற்கள்வீசுவதற்கு அல்ல! காயங்களை கேளுங்கள்கற்களைக் கூட மன்னிக்கும்சொற்களை அல்ல! பற்களே!ஆவி போவதற்குள்சாவியைத் தேடுங்கள்இதயக் கதவுகளைஇன்சொலால் திறக்க! பற்களே!நாவிடம் சொல்லுங்கள்பூவிடம் கற்றுக் கொள்ள! உறவு பிரிந்ததும்நட்பு முறிந்ததும்சொற்களால்தானே! பற்களே!சொற்களை கவனியுங்கள் முனைவர் மு. அ. காதர்சிங்கப்பூர்

கூட்டு முயற்சி

குழுவாகச் செய்யப்படும் வேலை வெற்றியை எளிதில் பெற்றிடும். பல நேரங்களில் மக்கள் தங்கள் இலக்குகளை அடைவதில் மற்றவர்களின் பங்கு இருப்பதை மறந்து விடுகின்றனர். எல்லாம் தங்களால்தான் நடந்ததாக நினைக்கின்றனர். ஆனால்!, மற்றவர்களின் ஒரு பங்களிப்பு இல்லாமல் அவ்வேலை முடிந்திருக்காது… ஒவ்வொருவருமே அவ்வேலைக்கு முக்கியம் என உணருவதில்லை. உண்மையில் தனியாகச்…