1. Home
  2. இலக்கியம்

Category: நூல் அறிமுகங்கள்

கல்வி என்பது தேசத்தின் பிரச்சனை

கல்வி என்பது தேசத்தின் பிரச்சனை பேரா.கே.ராஜூ ஆசிரியர், புதிய ஆசிரியன் நாடு தழுவிய கல்விப் பாதுகாப்புக் கூட்டியக்கம் சார்பாக வரும் 2019 பிப்ரவரி 19 அன்று தில்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி “கல்விக்கானமக்கள் பேரணி” நடைபெற உள்ளது.கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும், அருகமைப் பள்ளிகள் அவசியம் தேவை, அரசுப்பள்ளிகளை படிப்படியாக மூடுவது என்ற கொள்கையைக் கைவிட்டு அவற்றைப் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும், தேசிய மருத்துவ மசோதா 2017-ஐ திரும்பப் பெற வேண்டும், கல்வியைக் காவிமயமாக்காமல் மதச்சார்பின்மைக் கல்வியை அளிக்கவேண்டும், அனைவருக்கும் கல்வி கிடைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பேரணிநடைபெற உள்ளது. இத்தருணத்தில் இப்பேரணி பற்றியும் கோரிக்கைகள் பற்றியும் எடுத்துரைத்து, இன்றையக் கல்வி எதிர்நோக்கும்சவால்கள் குறித்த விழிப்புணர்வை அனைவருக்கும் – குறிப்பாக ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் – ஏற்படுத்த நூலாசிரியர்ஜி.ராமகிருஷ்ணன் இச்சிறு பிரசுரத்தைத் தயாரித்துள்ளார். முத்தாய்ப்பாக “கல்வி என்பது மாணவர்-ஆசிரியர் பிரச்சனை அல்ல அதுதேசத்தின் பிரச்சனை” எனக்கூறி முடிக்கிறார் தோழர் ஜி.ராமகிருஷ்ணன். ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைகிராமத்தைச் சேர்ந்த சிறுவன் சின்னக்கண்ணன் பல்வேறு தடைகளைத் தாண்டி தேசியக் குழந்தைகள்அறிவியல் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து விருது பெற்ற நிகழ்வுடன் தொடங்குகிறது பிரசுரம். அப்படியே பழங்குடி, தலித்மாணவர்கள் தொடக்கக்கல்வியைப் பெறவே அன்றாடம் பெறும் இன்னல்கள், குடும்ப வறுமையின் காரணமாக குழந்தைத்தொழிலாளர்களாகப் பணி புரியும் சிறார்களை பள்ளிகளுக்குக் கொணர்ந்து படிக்க வைக்கும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வு, அரசுப் பள்ளிகளையும் ஆதிதிராவிடநலப் பள்ளிகளையும் பாதுகாக்க அரசு நடவடிக்கைகள் எடுக்காததால் அப்பள்ளிகள் மூடப்படுவது, அதன் காரணமாக அப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவது, அதையே காரணமாகக் காட்டி மேலும் பல பள்ளிகளை மூட மத்தியஅரசின் நிதி ஆயோக் பரிந்துரைப்பது, அரசுப் பள்ளிகளுக்கு மாற்றாக தனியார் பள்ளிகளை ஊக்குவித்து தனியார் நிர்வாகங்கள் ஆசிரியர்,மாணவர்களைச் சுரண்டுவதற்கு அரசே துணை நிற்பது, தமிழகத்தில் நடப்பதற்கு மாறாக, கேரளத்தில் இடது முன்னணி அரசு எடுக்கும்முயற்சிகளின் காரணமாக அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வருவது, கல்விப் பிரச்சனைகளில் மத்திய அரசும் மாநிலஅரசும் கலந்து பேசி முடிவெடுப்பதற்குப் பதிலாக மத்திய அரசே தன்னிச்சையாக முடிவெடுப்பது, நவீன தாராளமயக் கொள்கையின்விளைவாக அனைவருக்கும் கல்வி அளிக்கும் பொறுப்பிலிருந்து மத்திய மாநில அரசுகள் கழன்று கொள்வது எனப் பல்வேறு தளங்களில்பயணிக்கும் ஆசிரியர் அவற்றுக்கான ஆதாரமாக தக்க புள்ளிவிவரங்களையும் தருகிறார். இந்த விவரங்கள் மக்களைச் சென்றடைய ஆசிரிய இயக்கங்கள் முன்முயற்சி எடுக்க வேண்டியது மிகமிக அவசியம் என்பதைச் சொல்லத்தேவையில்லை.சமூக, பொருளாதார, பண்பாட்டுத்தளங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு கல்வியே அடிப்படை என்பதால் ஆரம்பக் கல்விமுதல் ஆராய்ச்சிக் கல்வி வரை அனைவருக்கும் கல்வி வழங்கிடும் பொறுப்பை அரசே ஏற்க வேண்டும் என்பது விடுதலைப் போராட்டக்கனவாக இருந்ததைப் பொருத்தமாக நினைவூட்டுகிறார் தோழர் ஜி.ராமகிருஷ்ணன். பள்ளிக் கல்வி முடித்த மாணவர்களில் 75 சதவீதம் பேர்உயர்கல்வி பெற முடியாத அவல நிலையில் இன்று இருப்பது, கல்வித்துறையில் கொடி கட்டிப் பறக்கும் ‘கல்வித் தந்தை’களின் அதிகாரம்,பாஜக அரசு வந்தபிறகு தனியார்மயம் மேலும் தீவிரமாகியிருப்பது, கல்வி வளாக ஜனநாயகத்திற்கு பாஜக அரசு ஏற்படுத்தி வரும் ஆபத்து, அதற்குச் சான்றாக நிற்கும் ரோகித் வெமுலா முதல் கன்னையா குமார் வரை உள்ள பல்வேறு நிகழ்வுகள், தேசத் துரோகச் சட்டத்தைப்பயன்படுத்தி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வாய்ப்பூட்டு போடும் மத்திய அரசு, கல்வியைக் காவிமயமாக்குவதோடு தேசியஅறிவியல் மாநாடுகளில் போலி அறிவியலை முன்மொழிய பிரதமரே முன்நிற்பது போன்ற அபாயங்களைச் சுட்டிக் காட்டவும் நூலாசிரியர்தவறவில்லை. இன்றைய ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் படித்து உள்வாங்க வேண்டிய பொக்கிஷமாக இப்பிரசுரத்தைத் தயாரித்துள்ளஆசிரியரையும் பதிப்பித்த பாரதி புத்தகாலயத்தையும் உளமாறப் பாராட்டுவோம். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில்இதுபோன்ற முயற்சிகள் மேலும் பரவலாக நடைபெற வேண்டிய தேவை இருக்கிறது என்பதை உணர்ந்தால் தேசம் தப்பிக்கும். கல்வியைக் காக்கும் தேச பக்திப்போராட்டம் ஆசிரியர் : ஜி.ராமகிருஷ்ணன் வெளியீடு : புதிய ஆசிரியன் இணைந்து பாரதி புத்தகாலயம் 7 இளங்கோ தெரு, தேனாம்பேட்டை, சென்னை – 600 018

பகத்சிங் – விடுதலை எழுச்சியின் விடிவெள்ளி

பகத்சிங் – விடுதலை எழுச்சியின் விடிவெள்ளி ஆசிரியர் : எஸ்.ஏ.பெருமாள்             வெளியீடு : வாசல் பதிப்பகம், 40D/ 3 – முதல் தெரு, வசந்த நகர், மதுரை 625 003  செல் : 98421 02133 எஸ்ஏபி என தோழர்களால் அழைக்கப்படும் நூலாசிரியர் விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை…

இந்திய வானம்!

இந்திய வானம்-எஸ்.ராமகிருஷ்ணன் நூல் பெயர்: இந்திய வானம்! நூலாசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன் நூல் குறிப்பு: பயணங்கள் எப்போதும் மனிதனுக்கு நல்ல பாடங்களைக் கற்பிக்கிறது. அந்தப் பாடங்கள் அனுபவங்களின் பதிவாக மாத்திரம் அல்ல… அதன் சாரம் நலிவுற்ற சமுதாயத்தையும், தொலைந்த மனிதநேயத்தையும், புதைந்துபோகும் குண நலன்களையும் மீண்டும் துளிர்த்தெழச் செய்வதாக அமைகிறது.…

வாசிப்போம்.. விவாதிப்போம்…!

வாசிப்போம்.. விவாதிப்போம்…! மனித வாழ்வும் அறிவியலும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவை. இத்தகைய அறிவியலில் அனுதினமும் புதிய கண்டுபிடிப்புகள், புதிய தொழில்நுட்பங்கள் என பல மாற்றங்களும் வளர்ச்சிகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அத்தகைய தொழில்நுட்பங்களைப் பற்றிய நமது அறிவை வளர்த்துக் கொள்ளுதல் அவசியம். நிலத்தில் ஏர் பிடித்து உழுவும் விவசாயிக்கு உதவும்…

இஸ்லாமியச் சட்டத்தின் வளமும் விசாலமும்

வண்டலூர் மெளலானா முனைவர் மஸ்ஊத் ஜமாலி அவர்கள் எழுதி ,7.9.2018 அன்று சென்னையில் வெளியிடப்பட்ட இஸ்லாமியச் சட்டத்தின் வளமும் விசாலமும் என்ற நூலுக்கு கான் பாகவி அவர்கள் எழுதியுள்ள மதிப்புரை.   இது, ஒரு சட்டத்துறை கலைக்களஞ்சியம் பேராசிரியர், அ. முஹம்மது கான் பாகவி இஸ்லாமியச் சட்டத்துறை தொடர்பான…

அறிந்த அறிவியலும் அறியாத புதிர்களும்

அறிந்த அறிவியலும் அறியாத புதிர்களும் பேரா.கே.ராஜு மதுரை திருமாறன் வெளியீட்டகம், தி.நகர். – சென்னை- 17 அலைபேசி : 70109 84247 அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கும், பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக் கும் மட்டுமேயானதல்ல. அனைத்து மக்களுக்கும் ஆனது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளவர் பேராசிரியர் ராஜு. இதனை செயல் படுத்தும்…

மருத்துவக் கலைச்சொற்கள்

THF Announcement: E-books update: 29/8/2018 *மருத்துவக் கலைச்சொற்கள்     வணக்கம்.   தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் …   இன்று “மருத்துவக் கலைச்சொற்கள்” என்ற அறிவியல் கலைச்சொற்கள் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.   நூல் குறிப்பு: நூல்: மருத்துவக் கலைச்சொற்கள்    …

விடுதலைக் களத்தில் முஸ்லிம்கள் – கவிஞர் பாரதன்

விடுதலைக் களத்தில் முஸ்லிம்கள் –  கவிஞர் பாரதன்   விடுதலைக் களத்தில் முஸ்லிம்கள் என்ற நூல் சென்னை நேஷனல் பப்ளிஷர்ஸ் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வெளிவர உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் மு. அப்துல் சமது உறுதுணையாக இருந்துள்ளார். இதுபோன்ற நூல்கள் வெளிவருவது சமீப…

அறிந்த அறிவியலும் அறியாத புதிர்களும்

அறிந்த அறிவியலும் அறியாத புதிர்களும் பேரா.கே.ராஜூ விலை: ரூ.120 மதுரை திருமாறன் வெளியீட்டகம், சென்னை – 600017 தொடர்புக்கு: 7010984247 பணி ஓய்வுக்குப் பின்னும் தொடர்ந்து அறிவியல் குறுங்கட்டுரைகளை எழுதிவரும் இயற்பியல் பேராசிரியரின் ஆறாவது கட்டுரை நூல்இது. ‘சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்’ எனும் கூற்றிற்கேற்ப, இதிலுள்ள 52 கட்டுரைகளும் இரண்டு மூன்று பக்கங்களுக்குள்சுருக்கமாக இருக்கின்றன. கட்டுரைகளுக்குப் பொருத்தமான படங்களையும் இணைத்திருப்பது வாசிப்பு வேகத்தை மேலும்கூட்டுகிறது. ‘நானோ தொழில்நுட்பம்’, ‘ஈ-டீசல்’ உள்ளிட்ட பல கட்டுரைகள் நாம் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்பொக்கிஷங்களாக உள்ளன. மு.முருகேஷ்

அறிந்த அறிவியலும் அறியாத புதிர்களும்

அறிந்த அறிவியலும் அறியாத புதிர்களும்(கட்டுரைகள்) ஆசிரியர் : பேரா.கே.ராஜு வெளியீடு: மதுரை திருமாறன் வெளியீட்டகம், பழைய எண் 35, புதிய எண் 21, சாதுல்லா தெரு, தி.நகர், சென்னை – 600 017 அலைபேசி : 7871780923…..பக்கம் – 166 ; விலை – 120 ப.முருகன் அறிந்திட…