List/Grid

நூல் அறிமுகங்கள் Subscribe to நூல் அறிமுகங்கள்

பேசாமொழி 19வது இதழ்

பேசாமொழி 19வது இதழ்

பேசாமொழி 19வது இதழ் வெளிவந்துவிட்டது… இதழை படிக்க: http://pesaamoli.com/index_content_19.html நண்பர்களே, மாற்று சினிமாவிற்காக தமிழில் வெளியாகும் இணைய மாதமிருமுறை இதழான பேசாமொழியின் 19வது இதழ் இன்று (02-08-2014) வெளியாகிவிட்டது. காட்சியியல் சார்ந்தும், ஒன்றை பார்க்கும் முறை சார்ந்தும், மிக நுட்பமான பார்வையைக் கொண்டிருக்கும்… Read more »

கிளிப்பேச்சு

கிளிப்பேச்சு

கிளிப்பேச்சு கிளிமூக்கு அரக்கன் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com   ஆசிரியர் – கிளிமூக்கு அரக்கன் https://www.facebook.com/kilimookku பெயர் வெளியிட விரும்பாமல் திராவிடவியல் கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைப்பவர்.   அட்டைப்படம், மின்னூலாக்கம் – கிளிமூக்கு அரக்கன் கிளிமூக்கு அரக்கனின் சில குறிப்பிடத்தக்க கிளிப்பேச்சுக்கள் அடங்கிய மின்னூல். முதல் நூல்… Read more »

கணினியில் தமிழ் தட்டச்சு

கணினியில் தமிழ் தட்டச்சு

கணினியில் ஆய்வுப்பெருக்கம் உருவாக யூனிகோட் குறியேற்றமும், அதனைத் துணைக்கொண்டு செய்யும் இயற்கை மொழி ஆய்வுகளும் வழிவகுக்கின்றன. சென்ற வாரம் வல்லமையாளராக இண்பிட் தலைவர் வாசு தெரிவுசெய்யப்பட்டார். அவர் வழியில் இன்னும் ஏராளமான NLP (Natural Language Processing) ஒருங்குகுறியில் செய்ய கணிமுனைவர்கள்… Read more »

உலக டிஜிட்டல் நூலகம்

உலக டிஜிட்டல் நூலகம்

உலக டிஜிட்டல் நூலகம் by Vayal March 3, 2010 1 min read original   இணையத்தில் இயங்கும் நூலகங்களில் இது ஒரு வியக்கத்தக்க பயனுள்ள டிஜிட்டல்மீடியா நூலகம். அது என்ன டிஜிட்டல் மீடியா நூலகம் என்று வியப்பாக இருக்கிறதா? ஆம்,இதில் உலக சரித்திரத்தின் பதிவுகளை டிஜிட்டல் மீடியாவில் பதிந்து தருகிறது. நம்வீட்டில் நம் தாத்தா அல்லது  அவருடைய தாத்தாவின் அந்தக் காலத்து சிதிலமடைந்தபோட்டோக்களைப் பார்க்கும் போது, அப்போதே டிஜிட்டல் மீடியாவாக இருந்தால் சேதம்இல்லாமல் இருந்திருக்குமே என்ற எண்ணம்  எழுகிறது. பின் எப்படியாவது அதனைச் சரிசெய்து, ஸ்கேன் செய்து நம் கம்ப்யூட்டரில் போட்டு வைக்கிறோம். அதே போலஉலகெங்கும் நம் நினைவிற்குச் சிக்காத நாட்களிலிருந்து கிடைத்த காட்சிகள், படங்கள்,ஓசைகள், சரித்திர, கலாச்சாரக் குறிப்புகள் ஆகிய அனைத்தையும் டிஜிட்டல்மீடியாக்களாக இந்த  ஆன்லைன் நூலகத்தில் பதிவுகளாகக் கிடைக்கின்றன. இந்தநூலகத்திற்கு உங்கள் கம்ப்யூட்டர்  வழியே சென்று, உலகின் அனைத்து நாடுகள்,கலாச்சாரம், சரித்திரம் குறித்தவற்றைத் தேடிப்  பெற்று அறிந்து கொள்ளலாம். மொழிகள்குறித்தும் அறிந்து கொள்ளலாம். இந்த தளத்தில் உலா வருவதற்கும் பல வழிகள், பிரிவுகள் உள்ளன. இடம், காலம்,பொருள்,பொருள் வகை, அமைப்பு நிறுவனங்கள் என உலா வரலாம். ஆங்கிலம்மட்டுமின்றி வேறு பல மொழிகள்  மூலமும் தேடலாம். சிறிய திரைப்பட வீடியோக்கள்,ஒலிப் பதிவுகள், புகைப்படங்கள் வாரியாகவும் தேடித் தகவல்களைப் பெறலாம். ஒருமுறை தேடிப் பார்க்கத் தொடங்கினால் நம் முன்னோருக்கு முன்னோரான ஒருதாத்தாவைச்  சந்தித்த சந்தோஷம் கிடைக்கிறது. மதுரை என்று போட்டு தேடியதில்,இரண்டு போட்டோக்கள்  கிடைத்தன. அதிலும் சாதி குறித்த தகவல்கள்கிடைக்கின்றன.தமிழ் என்று போட்டு தேடிய போது, வெகு காலத்திற்கு முன் எப்படியெல்லாம் தமிழ் எழுதப்பட்டிருக்கிறது என்று தெரியவருகிறது.  போட்டோக்களின் கீழே,நூல்களின் முன் அட்டையில் தமிழில் பெயர், குறிப்புகளை அந்தக்  காலத்தில் நமக்காகஎழுதி வைத்த அந்த பெரியவர் எப்படி இருந்திருப்பார் என்ற சுகமான கற்பனை ஓடுகிறது.அவசியம் அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு தளம் இந்த உலக டிஜிட்டல் மீடியாஇணைய தளம். இதன் முகவரி: http://www.wdl.org/en/

ராமநாதபுரம் தமிழ்ச்சங்க நிறுவனர் எஸ்.எம்.கமாலின் நூல்கள் அரசுடைமையாக்கப்படுமா?

ராமநாதபுரம் தமிழ்ச்சங்க நிறுவனர் எஸ்.எம்.கமாலின் நூல்கள் அரசுடைமையாக்கப்படுமா?

பார்வை இழந்த பிறகும் 6 வரலாற்று நூல்கள் எழுதியது உள்பட மொத்தம் 17 நூல்கள் எழுதியும்,12 விருதுகளும் பெற்ற ராமநாதபுரம் தமிழ்ச் சங்க நிறுவனர் எஸ்.எம்.கமாலின் நூல்கள் அரசுடைமையாக்கப்பட வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் பலரும் விரும்புகின்றனர். ராமநாதபுரம் ஈசா பள்ளிவாசல்… Read more »

எளிய தமிழில் MySQL

எளிய தமிழில் MySQL

  MySQL பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு கட்டற்ற மென்பொருள் ( Free Open Source Software ) வகையிலான Database System. இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது. தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012முதல் வெளியிட்டு  வருகிறது.இதில் வெளியான MySQL பற்றிய கட்டுரைகளுடன்,மேலும் புதிய பகுதிகளை இணைத்து ஒரு முழு… Read more »

கவியரசு கண்ணதாசன் பாடல்கள் – காலத்தை வென்றவை

கவியரசு கண்ணதாசன் பாடல்கள் – காலத்தை வென்றவை

காவிரிமைந்தன் எழுதிய நூல் – வானதி வெளியீடு ‘கண்ணதாசனின் மறைவுக்குப் பிறகு தமிழுலகம் அவனுடைய பாடல்களில் புதிய புதிய அர்த்தங்களைக் கண்டு மகிழும்’ என்றார் ஜெயகாந்தன். நண்பர் காவிரிமைந்தன் ஜெயகாந்தன் சொன்னதைத்தான் சிறப்பாக இத்தொகுப்பில் செய்திருக்கிறார். கண்ணதாசனை ஒரு காதலியின் பரிசுத்த உணர்வுகளோடு நேசித்து,அவருடைய ஒவ்வொரு… Read more »

ட்விட்டர் கையேடு

ட்விட்டர் கையேடு

http://freetamilebooks.com/ebooks/twitter-guide/ ட்விட்டர் 2006ல் துவங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் இணைந்த மக்கள் தமது நண்பர்களுடன் தங்களின் குறுஞ்செய்திகளை, மன ஓட்டங்களை பகிர்ந்திடும் ஓடையாக இருந்தது, அவ்வளவு பெரிதாக யாரும் கண்டு கொள்ளவில்லை. செய்தி நிறுவனங்கள் உடனுக்குடன் செய்திச் சுருக்கங்களை வெளியிட ட்விட்டரை பயன்படுத்த… Read more »

புத்தக மதிப்புரைப் போட்டி

புத்தக மதிப்புரைப் போட்டி

வல்லமையில் புத்தக மதிப்புரைப் போட்டி – மறு அறிவிப்பு   பவள சங்கரி வாசிப்பினை நேசிப்போம்!  வாசிப்பினை சுவாசிப்போம்! நல்ல புத்தகம், நல்ல நண்பனைப் போன்றது . நேரம் பொன்னானது. அப்படிப்பட்ட நேரத்தை பயனுள்ள வகையில் செலவு செய்யும் முக்கியமான விசயங்களில்… Read more »

ப்ளாக் தொடங்குவது எப்படி?

ப்ளாக் தொடங்குவது எப்படி?

FreeTamilEbooks.com தளம் தனது 5 – ஆவது கட்டற்ற மின்னூலை வெளியிடுகிறது. நூல் பெயர் : ப்ளாக் தொடங்குவது எப்படி? ஆசிரியர் : அப்துல் பாசித் வகை: கணிணி நுட்பம் பதிவிறக்கம் செய்ய : http://freetamilebooks.com/ebooks/how-to-create-blog/ தமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி? http://freetamilebooks.com/how-to-read-tamil-ebooks/… Read more »