1. Home
  2. இலக்கியம்

Category: சிறுகதைகள்

மேன்மக்கள்…

 மேன்மக்கள்…  (இஸ்லாமியச் சிறுகதை)   மௌலவி அல் ஹாஃபிழ் முனைவர்  A.M. அலி இப்ராஹீம் ஜமாலி M.A., M.B.A., M.Phil, Ph.D. (உதவிப் பேராசிரியர், அரபி முதுகலை மற்றும் ஆய்வுத் துறை, ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சிராப்பள்ளி)   பறவைகள் தங்களின் அன்றாடப் பணியை முடித்து தத்தம் கூடுகளுக்கு…

உழைக்கும் கைகளே

#குறுங்கதை உழைக்கும் கைகளே ரியாத் அவென்யூ மாலில் தரைத்தளத்தில் வங்கியில் எனது எண்ணிற்கான அழைப்பு திரையில் வந்தது. எழுந்து சென்றேன். நான் அலுவலரின் மேசையை அடைந்த பின்னும் எனக்கு முன்னால் இருந்த வாடிக்கையாளர் நகரவில்லை. அலுவலர் அவரைக் கடிந்துகொண்டார். ‘எத்தனை முறை சொல்வது? இப்பொழுது இந்திய வங்கி எண்ணைச்…

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்…..!

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்…..! காலை ஆறு மணி. ஒரு கையில் டீ குடித்துக் கொண்டே மறுகையில் செய்தித்தாளைப்படித்து முடித்தார் சேதுராமன். காலியான டீ கிளாசை மனைவியிடம் கொடுத்துவிட்டு செல்போனைக் கையிலெடுத்து தோட்டத்து வாட்ச்மேனுக்கு போன் செய்தார். “சிங்காரம், தோட்டத்திலேயே இரு. எங்கேயும் போய்ராதே, பத்துமணிக்கு மரங்களையெல்லாம் வெட்றதுக்கு ஆளுங்க…

நல்ல மனம் வாழும்!

நல்ல மனம் வாழும்! மனதை உறுத்திக் கொண்டே இருந்தது.  இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை சலீம்பாய்க்கு. விடிந்ததும் அலமாரியைத் திறந்தார்.பணக்கட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து தனது தோள்பையில் அடுக்கினார். காஃபி எடுத்துக் கொண்டுவந்த மனைவி சபீரா,”மகள் கல்யாணத்துக்காக வச்சிருந்த பணம். கொரோனா வைரஸ் பிரச்சினையால் ஆறு மாசம் கழிச்சு கல்யாணத்தை…

காத்திருக்கிறேன்…

காத்திருக்கிறேன்… நிதானமாக எழுந்தார் ராகவன். பொறுமையாக மனைவி கொடுத்த காஃபியை ருசித்துப் பருகினார். பிள்ளைகளின் அறைக்குள் நுழைந்தார். அவர்களுக்கு நடுவே படுத்துக் கொண்டார். அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டான் மூத்தவன். வயிற்றில் கை போட்டுக் கொண்டு அவர் பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டான் இளையவன். இருவரும் ஒரே நேரத்தில் கண்விழித்துப் பார்த்தார்கள். யாரின் கழுத்தைப் பிடித்திருக்கிறோம்? யாரின் வயிற்றில் கை போட்டிருக்கிறோம்? “அப்ப்ப்ப்பா…” இந்த உணர்வு, அது தந்த சுகங்கள், இதுக்காக காத்திருந்த ஏக்கங்கள் இன்னும் எத்தனையோ… இந்த மகன்களின் நெஞ்சுக்குள். பத்து நாட்களுக்கு முன் பணம், பணம் எனப் பறந்தவர்.  எப்போதும் பிசி, பிசி என ஓடிய பிசினஸ் மேன். கடமைக்கு காஃபி பருகிவிட்டு, அவசரத்தில் குளித்துவிட்டு, அரைகுறையாக சாப்பிட்டு, அலுவலகம் நோக்கி விரைந்து, நடுநிசியில் வீடுவந்து… இப்படியே சுழன்று கொண்டிருந்த ராகவனின் உலகத்தில் மனைவி, குழந்தைகள் என்ற  எண்ணங்களெல்லாம் தூரமாகவே இருந்தது. இப்போது இந்த தனிமை, குடும்பத்தினரோடு தனித்திருந்தே ஆகவேண்டிய சூழ்நிலை… முன்னோக்கி முழுவேகத்தில் பறந்த அவரது வாழ்க்கை   பறவை தன்சிறகுகளை இறுகக் கட்டி  ஊரடங்கு உத்தரவு வேடனால் குடும்ப வலைக்குள் நுழைந்து கொண்டது. “என்னங்க அடுத்தவாரம் ஸ்கூலில் ஆண்டுவிழா.பிள்ளைகள் டான்ஸ், ட்ராமாவில் சேர்ந்திருக்காங்க. எல்லோருடைய பேரன்ட்ஸும் வராங்களாம். நாமளும் போய்ட்டு வரணும்.” “இல்லை சுதா, அடுத்தவாரம் ஃபாரின் கஸ்டமர்ஸ் வராங்க அதனால் வரமுடியாது. நீயே பார்த்துக்க” உறவுக்காரர்கள் வீட்டுத் திருமணம், நண்பர்களின் பிறந்தநாள் அழைப்புகள், வீடு குடிபுகும் விசேஷங்கள், மட்டுமல்லாது தன்மனைவி, குழந்தைகளின் பிறந்தநாள்கள், தனது திருமணநாள் எதிலுமே கலந்து கொள்ளாமல் பணம் மட்டுமே குறிக்கோளாக வாழ்ந்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? மறுகிய மனதுடன் தன் மனைவி குழந்தைகளுடன் உருகிய தங்கமாய் ஒட்டிக் கொண்டு நாள்களை நகர்த்தத் தொடங்கினார் ராகவன். இழந்த ஆண்டுவிழாக்களை, கல்யாணங்களை, விசேஷங்களை, பிறந்த தினங்களை தேடுகிறது மனம்.வருடம் முழுவதும் பணம் தராத நிம்மதி, திருப்தி, மகிழ்ச்சியை இந்தத் தனிமை நாட்கள் எனக்கு உணர்த்திவிட்டதே! கொரோனா அழிந்தவுடன் குடும்பத்தோடு எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வேண்டும். கொரோனா விரைவில் ஒழிந்து போக குடும்பத்துடன் தனியாக பிரார்த்தனையோடு காத்திருக்கிறார். ஃபாத்திமா, ஷார்ஜா.

காத்திருக்கிறேன்…

காத்திருக்கிறேன்… நிதானமாக எழுந்தார் ராகவன். பொறுமையாக மனைவி கொடுத்த காஃபியை ருசித்துப் பருகினார். பிள்ளைகளின் அறைக்குள் நுழைந்தார். அவர்களுக்கு நடுவே படுத்துக் கொண்டார். அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டான் மூத்தவன். வயிற்றில் கை போட்டுக் கொண்டு அவர் பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டான் இளையவன். இருவரும் ஒரே நேரத்தில்…

இன்று ஒரு கதை…

இன்று  ஒரு கதை…   தன் அப்பாவுடன் கன்னியாகுமரி கடற்கரையோர கடைத் தெருக்களில் உற்சாகமாய் நடை போட்டுக் கொண்டிருந்தான் அந்தச் சிறுவன். ‘‘அப்பா… பாருங்கப்பா! சிப்பிகள்ல செய்திருக்கிற மயில், கிளி எல்லாமே அழகாயிருக்குப்பா!’’ ‘‘ஆமாம்பா!’’ ‘‘இந்தக் கடற்கரை காற்று, கன்னியாகுமரி எல்லாமே பிடிச்சிருக்குப்பா எனக்கு!’’ ‘‘அப்பா, ஏதாவது கதை சொல்லுங்க!’’ அப்பா ஆரம்பித்தார். ‘‘அது ஒரு சின்ன கதைதான். அப்ப நாங்க பள்ளிக்கூடம் படிச்சிட்டு இருந்தோம். அப்பாவுக்கு முன் பல்லு விழுந்து முளைச்சி வளர்ந்திருந்தது.’’ ‘‘அப்புறம்?’’ ‘‘அப்போ நாங்க எல்லாம் பள்ளிக்கூடம் முடிஞ்ச பிறகு கபடி விளையாடிட்டு இருந்தோம். நல்லா இருட்டிப் போச்சு. வீட்டுக்குப் போகவே இல்ல. போய் சர்பத் குடிக்கலாம்னு ஒரு பையன் சொன்னான். அப்பல்லாம் சர்பத் ஒரு டம்ளர் ஒரு ரூபாய்தான்.’’ ‘‘அப்புறம்?’’ ‘‘சர்பத் வாங்க நாங்க நாலு பேரு நிற்கும்போது கடைக்காரர் திரும்பி ஐஸ்கட்டி எடுத்தார். அப்போ ஒரு பையன் ரெண்டு கோல்டு ஸ்பாட் பாட்டிலை எடுத்து சாப்பாட்டு கூடைக்குள்ள போட்டு மேல துணி போட்டு மூடிட்டான்!’’ ‘‘கோல்டு ஸ்பாட்னா என்னப்பா?’’ ‘‘இப்ப சுர்ருன்னு ஆரஞ்ச் ட்ரிங்க் குடிக்கிறீங்க இல்ல… அது மாதிரி அப்ப கோல்டு ஸ்பாட்!’’ ‘‘சரி, சொல்லுங்க!’’ ‘‘திருடின உடனே எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். தூக்கிட்டு ஒரே ஓட்டமா ஒடினோம். எங்க பள்ளிக்கூடத்துல பெரிய வாகை மரம் இருக்கும். அதுக்குப் பின்னாடி போனா யாரும் கண்டுபிடிக்க முடியாது. அங்க போய் ஒளிஞ்சி நின்னுக்கிட்டோம். நாலு பேரு, ரெண்டு கோல்டு ஸ்பாட். சீக்கிரம் குடிக்க அவசரப் படுறோம்!’’ ‘‘அப்புறம்?’’ ‘‘கோல்ட் ஸ்பாட் திருடினோம். ஆனா அதை திறக்கிற ஓப்பனர் திருடலையே! இப்ப எப்படி அதைத் திறக்கிறதுங்கிற பிரச்னை வந்துச்சு. ஒருத்தன் கல்லை வைத்து தட்டப் போனான். தடுத்து விட்டோம். இன்னொருவன் பாட்டில் மூடியை பல்லால் கடித்து எடுக்க முயற்சி செய்தான். ஆவேசமான முயற்சி அது. அவன் கால் வாசி பல் உடைந்து விட்டது. அதுவும் முன் பல். பயத்துல அவன் கத்தினான்.’’ ‘‘அச்சச்சோ!’’ ‘‘உடனே எனக்குக் கோபம் வந்தது. இந்த பாட்டில் மூடியைத் திறக்க இவ்வளவு கஷ்டமான்னு, ஒரு உடைந்த மரக்கிளையில் மூடியின் ஓரத்தை வைத்து பாட்டிலை வேகமா இழுத்தேன். பாட்டில் படீரென உடைந்தது. உடைந்து என் கையில் குத்தியது. கை கிழிந்து சதை தொங்கியது. ரத்தம் பெருக்கெடுத்து தரையில் சொட்டிக் கொண்டே இருந்தது.’’ ‘‘ரொம்ப வலிச்சுதா அப்பா?’’ ‘‘சரியான வலி. நண்பர்கள் எல்லாரும் பதறிட்டாங்க. உடனே என்னை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனாங்க. அவரு ‘இது எப்படி பட்டது’ன்னு விசாரிச்சாரு. நாங்க உண்மையை மறைச்சோம். எப்படியோ மறைச்சி கையில கட்டு போட்டுட்டு வீட்டுக்குப் போகலாம்னு கிளம்பும்போது, அங்க வாகை மரம் பக்கத்துல உடைஞ்சிருக்கிற கோல்டு ஸ்பாட் பாட்டில்களை மறைக்கலையேன்னு ஞாபகம் வந்துச்சு. உடனே நாலு பேரும் பள்ளிக்கூடத்துக்குப் போனோம். ரொம்ப இருட்டா இருந்தது. எங்க பள்ளிக்கூட மைதானம் பெரிசுங்கிறதால, இருட்டானா சில சமூக விரோதிகள் மது அருந்திட்டு இருப்பாங்க. நாங்க பாட்டில தேடிக் கண்டுபிடிச்சி மறைச்சிட்டு பார்த்ததும், அவங்க எங்களை நெருங்கிட்டாங்க. பிடிச்சி பணம் இருக்கான்னு கேட்டு மிரட்டினாங்க. நாங்க அழுதுக்கிட்டே எங்கள விட்டுருங்கன்னு கெஞ்சினோம்.’’ ‘‘ம்ம்ம்…’’ ‘‘எப்படியோ சமாளிச்சு வீடு வந்தா அங்க என் அப்பா, அம்மா கவலையோட காத்திருந்தாங்க. என் கையில பெரிய கட்டு இருக்கிறதை பார்த்து என் அப்பா, அதான் உன் தாத்தா அப்படியே மயங்கி விழுந்துட்டாரு. அப்புறம் தாத்தாவை மருத்துவமனைக்கு கூட்டிட்டு போய் இரவு அங்க தங்க வச்சி, இரவெல்லாம் தூங்காம மறுநாள் பள்ளிக்கூடம் போகும்போது எனக்கு தோணுச்சு.’’ ‘‘என்ன தோணுச்சு?’’ ‘‘கூல் ட்ரிங்ஸ் குடிக்கணும்னு கேட்டிருந்தா, என் அப்பா நிச்சயமா காசு தந்திருப்பாரு. பிறகு ஏன் இந்த திருட்டுப் புத்தி வந்தது? இப்படி திருடுறதுனால எவ்வளவு துன்பம் எனக்கும் நண்பர்களுக்கும் வந்ததுன்னு நினைச்சேன்.’’ ‘‘கையில இருக்கிற இந்தத் தழும்பு அந்த பாட்டில் குத்தினதாப்பா?’’ ‘‘ஆமா!’’ மகன் அப்பாவின் கைகளை தடவிப் பார்த்தான். நின்றவன், திடீரென்று வந்த பாதையிலேயே ஓடினான். அப்பா கத்தினார். ‘‘எங்க போறப்பா?’’…

பாசப் போராட்டம்

சிறுகதை:  பாசப் போராட்டம் – புஷ்பா ராஜ்குமார் என்னங்க மூட்டை? ஒண்ணுமில்ல. ரேசன் கடையில ஆயிரம் ரூபா குடுத்தாங்க அதான் கொஞ்சம் மளிகை சாமான் வாங்கிட்டு வந்தேன் ஓடிவந்து மூட்டையைக் பிரிக்கும் மனைவியை அதட்டினார் ஏய் அத எடுக்காத இது நமக்கு இல்ல. இது நம்ம பொண்ணு வீட்டுக்கு…

பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி

பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி பனிப்பூக்கள் இதழ்,  சில வாரங்களில் எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 2012 ஆம் ஆண்டு, உலகத் தாய்மொழி நாளன்று. அமெரிக்க மாநிலமான மினசோட்டாவில் வாழும் தமிழர்களுக்குத், தனித்துவ முறையில் பண்பாட்டுப் பாலமாகச் செயல்படும் நோக்கத்துடன் தொடங்கிய இதழ் இன்று அகிலமெங்கும் பரவிப் பல்லாயிரக்கணக்கான வாசகர்களைக்…

ஒரு நிமிடக் கதை

ஒரு நிமிடக் கதை: உண(ர்)வு ‘‘கெஸ்ட்டுக்கு ஸ்டார் ஹோட்டல்ல லஞ்ச் வாங்கி வைக்கச் சொல்லிட்டு, இப்ப ஏதோ அவசர வேலை.. வரமுடியலைன்னு மேனேஜர் சொல்லிட்டார்டி. இப்ப என்ன பண்றது சுமி..? ’’ – ரம்யா அங்கலாய்க்க… ‘‘அடடா, வழக்கமா வீட்ல இருந்து அடைச் சுக் கொண்டு வந்ததை நாமளும்…