1. Home
  2. இலக்கியம்

Category: கவிதைகள் (All)

மௌனத்தின் சாவிகள்

அவசரமாய் வளர்ந்து. அவசரமாய் காதலித்து.. அவசரமாய் மணமுடித்து அவசரமாய் பிரியும் இன்றைய தலைமுறைக்கு புரிய வாய்ப்பில்லை தான்.. எப்போதும் மூன்று தோசை சாப்பிடும் அப்பா.. அடுப்படியிலிருந்த அளவு குறைந்த மாவு கண்டு, அம்மாவுக்கும் வேண்டுமென இரண்டு போதும், என்றெழுந்த அதிகம் பேசிக்கொள்ளாத அவர்களின் அழகிய தாம்பத்யம்..    …

மயிலிறகு மனசு

இன்னும் நீ என்னை பார்ப்பதாக இன்னும் நீ என்னை தொடர்வதாக இன்னும் நீ என் எழுத்துக்களை வாசிப்பதாக இன்னும் நீ என்னை நேசிப்பதாக இன்னும் உன் இதழ்களில் என் உள்ளங்கை குளிர்மை ஒட்டியிருப்பதாக நம்பிக்கொண்டுதானிருக்கிறேன் எல்லா நம்பிக்கைகளையும் ஒரு அழைப்பில் ஒரு செய்தியில் நிரூபித்துக்கொள்ளலாம்தான் ஆனாலும் தேவையில்லை எந்தன்…

மூச்சிலும் பேச்சிலும் முதுமொழித் தமிழே!

மூச்சிலும் பேச்சிலும் முதுமொழித் தமிழே! கவிஞர் இரா.இரவி ! உலகின் முத ன்மொழி நம்மொழி தமிழ் உலகின் முதல்மனிதன் உச்சரித்தது தமிழ் கீழடி உரக்கச் சொல்லும் உண்மை தமிழ் கீறிய எழுத்துக்கள் உணர்த்தும் உண்மை தமிழ் அமெரிக்காவின் ஆய்வாளர்கள் முடிவு தமிழ் அனைத்துலக ஆய்வின் அறிக்கை தமிழ் ஆறாயிரம்…

இனிய நண்பனே!

இனிய நண்பனே! ______________________________ உனக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உலகத்தின் எந்த புள்ளியிலும் கர்ப்பம் திறக்காத‌ தருணங்களே இல்லை. அந்த ஒரு பொன்னான தருணத்தில் உதித்தவனே! நீ வாழ்க! நீடூழி வாழ்க! வாழ்க்கை எனும் ஒரு மயிற்பீலி உனக்கு கிடைத்திருக்கும். அதை விரலில் சுழட்டி சுழட்டிப்பார்.…

உலக பெற்றோர் தினம்

உலக பெற்றோர் தினம். ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ பிறந்த உயிர்க்கெல்லாம் பெற்றோர் உண்டு, பெற்றோர் இன்றிப் பிறந்தவரில்லை. பெற்றோர், பெற்றோர் மட்டுமல்ல , பெயரைக் கொடுத்தோர், உயிராய் வளர்த்தோர், உரிய வயதினிலே உரியன செய்தோர் , உற்ற வகையில் உயர்ந்திடச் செய்தோர், சுமையாய் நினையாது, சுமந்து மகிழ்ந்தோர்,  தம் பசி பாராது…

உலக பட்டினி தினம்

உலக பட்டினி தினம் _________________________ருத்ரா செவ்வாய் கிரகத்தில் தேடி தேடி பார்த்தது “பெர்சிவியரன்ஸ்” தண்ணீர் அல்ல. தாதுக்கள் அல்ல. இன்றைக்காவது கிடைக்குமா ஒரு பருக்கைச்சோறு அந்த “உலகதுக்கு”

பூங்கா பெஞ்சு

பூங்கா பெஞ்சு ============================ருத்ரா என் சட்டைப்பையில் ஒரு நூறு ரூபாய் நோட்டு பார்க்க‌ நான் என்ன செய்யலாம்? ஏதாவது ஒரு விளம்பரக்கம்பெனியின் முதுகு சொறிந்து முச்சந்திகளிலும் வீட்டு வாசல்களிலும் இன்னும் கோவில் திருவிழாக்களிலும் நசுங்கிய குவளைகளில் ஏற்கனவே போட்ட சில சில்லரைகளை வைத்து சத்தம் கிளப்பி அனுதாப ஈக்கள்…

அம்மா இல்லாத நானும் இந்த வானும் உலகும்…

அம்மா இல்லாத நானும் இந்த வானும் உலகும்…    எனக்குள் ஒரு தொடர் அழை இருக்கிறது மனது அடிக்கடி தேம்பி தேம்பி அழும் அழை அது, யாருக்கும் தெரியாமல் பெய்யும் மழையையப்போல உள்ளே உயிர் சொட்டுசொட்டாக கண்ணீர் பெருகி வழிவதை யாருக்கும் காட்டாத அழை, உன்மயில், இந்த வாழ்க்கை ஒரு வதை…

உலக சகோதரர்கள் தினம்

உலக சகோதரர்கள் தினம் பூமித்தாயின் உதரத்தில் பிள்ளைகளாக அவதரித்த நாமெல்லோரும் சகோதரரே நாளும் மனதில் வைத்திடுவோம் . சுயலாபத்திற்காக சிலர் சுயமாய் சிந்திக்க விடாமல் சாதி, இனம் ,மொழி,மதமென்று , சதியால் நம்மைப் பிரித்திடுவார். சதிவலைதன்னை அறுத்திடுவோம், பிரிவினை வாதம் வெறுத்திடுவோம். எழுநூறு கோடி மக்களிடம் எவ்வித பிரிவும்…

ஆண் பெண்

ஆண் பெண் ————— நாங்கள் எல்லாம் ஆ…ண் பிள்ளைங்கள். இந்த நெடிலுக்குள் அடங்கியிர்ப்பது அதிகாரமா? அடாவடித்தனமா? ஆதிக்கமா? ஆணவமா? ஆணாக பிறந்துவிட்டோம் எனும் திமிரா? என்ன இருந்தாலும் நாங்கள் எல்லாம் பெண் பிள்ளைகள். இந்த குறிலுக்குள்  அடங்கியிருப்பது அடிமைத்தனமா? பேடித்தனமா? இயலாமையா? பெண்ணாக பிறந்து விட்டோம் எனும் பேதமையா?…