1. Home
  2. இலக்கியம்

Category: கவிதைகள் (All)

மயிலிறகு மனசு

என் வயதினையொத்தவர்களின் அம்மாக்கள் அவர்கள் காலத்தில் பதினாறு பதினேழு வயதுகளில் தன் கனவுகளை துறந்தவர்கள் ஆனால் துறவிகளைப்போலில்லை அவர்களின் அம்மாக்களின் அறியாமையினாலும் அப்பாக்களின் பிடிவாதங்களினாலும் தன் ஆசைகளை துறந்தவர்கள் அதனால் துறவிகளைப்போலில்லை வீட்டின் எளிமைகளினாலும் தன் மனதை துறந்தவர்கள் ஆதலால் துறவிகளைப்போலில்லை தனக்குப்பின்னால் பிறந்த தம்பி தங்கைகளுக்கு அக்காக்களும்…

மாற்றங்கள் வேண்டும்

மாற்றங்கள் வேண்டும் மாற்றம்  ஒன்றே மாறாதது என்றது  போல் மாற்றங்கள் நிகழவேண்டும் . – அந்த மாற்றங்களால் மக்கள் வாழ்க்கை முறையினில் ஏற்றங்கள் காண வேண்டும். அவரவர் நம்பிக்கை அவரவர் உரிமையெனும் நிலை இங்கு நிலவ வேண்டும் – பிறர் உரிமையில் தலையிடும்  உலுத்தர்களை மக்கள் ஊரை விட்டொதுக்கவேண்டும். வாக்குறுதிகள் தந்து…

முண்டாசுக் கவிஞர் பாரதி

முண்டாசுக் கவிஞர் பாரதி அன்னிய நாட்டுப் பொருள்களை வெறுத்த அறிஞரே ! மூடநம்பிக்கைகளை முடக்க முயன்று முழங்கிய சங்கே ! முறுக்கு மீசை முறுக்கி முண்டாசு கட்டியவரே ! காக்கை குருவி களிடம் இரக்கம் காட்ட சொன்னவரே ! சாதி சாக்கடையை சுத்தம் செய்ய விரும்பியவரே ! மதத்தின்…

அலீ (ரலி) வரலாறு

அலீ (ரலி) வரலாறு ================== நாகூர் ருமி க’அபாவுக்குள்ளே பிறந்தீர்கள் காசிம் நபியின் மடியில் கண் திறந்தீர்கள் பேரீச்சம் பழம் மசித்து பெருமான் கொடுத்ததும் வாஞ்சையுடன் வாயைத் திறந்தீர்கள் முஹமது நபியின் முகத்தைத்தானே முதன் முதலாகப் பார்த்தீர்கள்! தூதர் முஹம்மதின் தூய உமிழ்நீர் கலந்த பேரீச்சம் பழமே உங்கள்…

காதல்

தலைப்பு – காதல் மெய்க் காதல் என்று ஒன்றிருப்பின் … பொய்க் காதல் என்று ஒன்று உண்டோ? உண்மையில் உலகத்துக் காதலில் … காதல் என்று உச்சரித்த அடுத்த கணம் பல்லாயிரம் நினைவுகள் கண்ணினுள் வண்ணக்கோலமாய் வர்ணம் பூசிக் கொண்டு மன வாசலில் நிற்க… எனக்கு மட்டும் ஏதோ…

கருவறை

உருவமற்ற உயிர் காற்றை சுமந்து நிற்கும் கருவறையே ! கவிஞர் சை .சபிதா பானு காரைக்குடி

இளம் காற்றும் !….

இளம் காற்றும் ! இளம்பிள்ளையும் ! கைகோர்க்கும் தருணமோ ! இரண்டும் இயற்கை அழகின் வெளிப்பாடோ ! கவிஞர் சை. சபிதா பானு காரைக்குடி

கடல்

கடல் அன்னையின் மடியில் கவலைகளை மறப்போம் ! அலையோடு மோதி விளையாடி ஆனந்தம் காண்போம் ! கடல் சிப்பிகள் ஓடு சிரித்து கிடப்போம் ! நித்தமும் நீர் உலகில் வாழும் மீன்களோடு நீந்துவோம் ! அந்தி நேரத்தை அலைகடலின் முன் செலவிட்டு ! கற்பனை ததும்பும் கவிஞனாய் மாறுவோம்…

உயிர் எழுத்துக் கோவை!

உயிர் எழுத்துக் கோவை! ‘அ’ண்டம் வெடித்திங்கு ‘ஆ’னது வையமென அறிவியல் மொழி ‘இ’ரவு இருளை உமிழ்ந்தபின்பு ‘ஈ’ரநீரும் குளிர்ந்ததாகி ‘உ’யிரின் முதல் உயரினமே ‘ஊ’ர்ந்த ஒரு “செல்”லாகி ‘ஊ’ழிக்காலம் பிறந்ததாமே! ‘எ’ண்ணவியலா கணக்கெனினும் ‘ஏ’ழுவானம் எழுதித் தீர்க்க ‘ஐ’ம்பூதங்கள் அழகு சேர்க்க ‘ஒ’ப்பாரும் மிக்காருமற்ற ‘ஓ’ரிறை படைத்தான் உலகை..…

விபி.சிங்…

விபி.சிங்… ****** ஒடுக்கப் பட்டவர்களின் உரிமைகளுக்காக உரத்து முழக்கியது இவன் குரல்! தாழ்த்தப் பட்டவர்களின் தகுதிகளையும் தரங்களையும் உயர்த்துவதற்காகவே வாழ்ந்து முடித்தவன் இவன்! சந்தர்ப்ப வாத அரசியலுக்குச் சற்றும் பொருந்தாதவன் சகுனிகளோடு இருந்தும் சதிராடத் தெரியாதவன்! ஆலயத்துக் கடைவாய் அரிசன பக்தர்களுக்கு அனைவரும் சுண்டல் கொடுக்கையில் அரியாசன மண்டல்…