List/Grid

கவிதைகள் (All) Subscribe to கவிதைகள் (All)

ஏழு வண்ணங்கள்

ஏழு வண்ணங்கள்

ஏழு வண்ணங்கள் – சந்தர் சுப்பிரமணியன் ஏழு வண்ணங்கள் அத்தைநேற்று வீட்டில் ஆக்கிவைத்த சாம்பார்! கத்திரிக்காய்! ஊதா! கண்சிமிட்டு தாம்பார்! மொட்டைமாடி மேலே முட்டிநிற்கும் வானம்! கொட்டுதங்கே நீலம்! குளிக்கவேண்டும் நானும்!  – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள் :… Read more »

மாட்டுக்கறி அரசியல்

மாட்டுக்கறி அரசியல்

#மாட்டுக்கறி #அரசியல் மநுதர்ம தந்திரத்தால் வேஷம் போடுறான்-இவன் மனிதநேய கோஷம் போட்டு மகுடி ஊதுறான்! பசுவுக்காக பாரதத்தை பங்கு போடுறான்-அதில் பார்ப்பனியத்தை எரியவிட தூபம் போடுறான்? இவன் குடிக்கும் நெய் முழுக்க தெய்வ பக்தியாம்-ஏழை ஜனங்க உன்னும் இறைச்சி மட்டும் பாவ… Read more »

உழவனும் ஆசானும்

உழவனும் ஆசானும்

சுந்தரச் சிலேடைகள் 13 – உழவனும் ஆசானும்   சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 13 உழவனும் ஆசானும் சீர்திருத்தித் தாள்வணங்குஞ் சிற்பியெனப் பாரதனிற் கார்போல் மகிழ்வுதருங் கன்னலவர் – பார்போற்றும் மெல்லியராய் மேலாகி மேதினியை மேம்படுத்தும் நல்லுழவர் ஆசானுக் கொப்பு… Read more »

உன்னிதழில் என் சொற்கள்!

உன்னிதழில் என் சொற்கள்!

உன்னிதழில் என் சொற்கள்! உன்காட்டு முட்களினால் பாதந் தோறும் உண்டாகும் பரவசத்தை என்ன வென்பேன்! உன்னம்பு  துளைக்கின்ற இதயத் திற்குள் உயிர்க்கின்ற காதலினை என்ன  வென்பேன்! உன்மூலம் வருகின்ற மரணம் என்றால் உயிர்கசிய வரவேற்றுப் பாட்டி சைப்பேன்! இன்னும்நீ வெறுமையினைக் கொடுப்பா… Read more »

ஹைக்கூ

ஹைக்கூ

ஊருக்கு விருந்து வைத்தபின் வைக்கிறது உலை தீக்குச்சி!   மானம் காப்பதற்கும் மானமிழந்தால் கோர்ப்பதற்கும் ஒற்றை முடிச்சு   மணந்தால் மறப்பதுவும் மணக்காவிடில் மறக்காததும் தான் மனிதக் காதல்     உணவின் முடிவாக்கி மறுவுலகின் துவக்கமாகும் விதிக்கப்பட்ட மரணம்  … Read more »

சிட்டுக்குருவி

சிட்டுக்குருவி

சிட்டுக்குருவி – சந்தர் சுப்பிரமணியன்     சிட்டுக்குருவி பட்டுச் சிறகைப் பலமாய் ஆட்டிப் பறந்து வருகின்ற சிட்டுக் குருவி! சினமேன் உனக்கு? சீக்கிரம் நீசொல்லு! குட்டி அலகும் குறுகுறு கண்ணும் கொண்டோர் கிளையமரும் சிட்டுக் குருவி! சினமேன் உனக்கு? சீக்கிரம்… Read more »

சுமைகளும் சுகங்களும் !

சுமைகளும் சுகங்களும் !

சுமைகளும் சுகங்களும் ! கவிஞர் இரா .இரவி ! பத்து மாதம் குழந்தையைச் சுமக்கிறாள் அன்னை பத்தியமாக உணவருந்தி காக்கிறாள் சேயை ! சுமையை அவள் சுகமாகவே கருதுகின்றாள் சுகப்பிரசவம் வேண்டுமென்று நாளும் நடக்கிறாள் ! தவவாழ்க்கை வாழ்கிறாள் என்றால் மிகையன்று… Read more »

காதல்

காதல்

உடலியங்க சுவாசமென்னும் உயிரென்றால் உயிரியங்க காதலென்னும் சுவாசம்! அஃதுன்றன் அன்பென்னும் நேசம். உயிர்போகும் உடல்வேதனையிலும் உன்றன் காதல் சுவாசம் ஓரிடத்தில் அமர்நது காற்றலைகளூடே பேரிடர் நீக்கும் பேருபகரணமாய்க் கண்டு உயிரை மீட்டுத் தந்ததே! நீயின்றி நானில்லை; நானின்றி நீயில்லை! காதல் சுவாசக்… Read more »

ஆகாயம் ஓர் ஆல்பம்!

ஆகாயம் ஓர் ஆல்பம்!

”ஆகாயம் ஓர் ஆல்பம்!” ====================     மண்ணிலிருந்து ஆகாயத்தைப் பார்…நம் எண்ணமும் விண்ணைத் தொடுமப்பா..!   வான வெளியை வியந்து நோக்கின்.. மனதுக்குள் சிந்தனைபல கிளர்த்தெழும்..!   விண்ணும் முகிலும் காதல்கொண்டு விளையாட.. மண்ணும்மலையும் மறைந்திருந்து பார்க்கும்..!   மேகம்… Read more »

மே நாள் – கோவைக்கோதை

மே நாள் – கோவைக்கோதை

மே நாள் – கோவைக்கோதை உழைப்பின் ஊதியம் இளைத்தது. உழைப்பாளர் உரிமைகள் இழந்தனர். களைப்பில் மனிதர் வளைந்தனர். சளைக்கவில்லை பலர் விழித்தனர். நுழைந்தது கேள்விகள் – கொதித்தனர். விளைந்தது போராட்டம் – குதித்தனர். சிக்காகோ நியூயோர்க்கு  பாசுடனீறாக அக்கிரமம் அழிக்கத் திரண்டனர்…. Read more »