1. Home
  2. இலக்கியம்

Category: ஏமபல் தஜம்முல் முகம்மது

சிந்தனை என்னும் சிவப்புக் கம்பளத்தில்…..

காதலின் பிரிவில் காதல் மனையாளை விட்டுக் கடல் தாண்டும் பிரிவில் தெரியும் பாருங்கள் ஒரு வலி…. அதுதான் பிரிவின் வலி. பிரிந்தவர் மீண்டும் சேரும்போது பெருமூச்சுக்கிடையில் அழுகையோடொரு பிரசவம் நடக்கும் பாருங்கள்… அதுதான், நிம்மதி!மகிழ்ச்சி!! பத்ருக் களத்தில் தொடங்கிய எமது வெற்றி ஊர்வலமே, கடந்த ஷவ்வாலில் எமைப் பிரிந்து…

இவர்தாம் முஹம்மது

  (அவர்களுக்கு இன்னமைதியும் இறையருட் பேறுகளும் ஏற்படுவதாக) முஹம்மது(ஸல்) அவர்களின் ஆளுமை!இதன் முழுச்சிறப்பையும் தொகுத்தறிவது செயற்கரிய செயலாகும்.அதன் மின்னொளியை மட்டுமே என்னால் பற்றிப் பிடிக்க முடிகிறது.என்ன ஒரு வியப்பளிக்கும்,அடுத்தடுத்துத் தொடரும் சிறப்புள்ள,கவரக்கூடிய வரலாற்றுக்காட்சிகள்!! முஹம்மது இறைத்திருத்தூதர் முஹம்மது படைப்பெருந்தலைவர் முஹம்மது தனிச்சிறந்த அரசர் முஹம்மது பொருபடைவீரர் முஹம்மது வணிகவிற்பன்னர்…

”தியாகம் என் கலை!”

  நாம் முஸ்லிம்கள் என்று நமது முகவரியைக் காட்டிய இப்றாஹீம் நபியின் தூய மார்க்கத்தின் துலங்கும் பேரொளி தியாகத் திரு நாள்!   அவர் தொடங்கி வைத்த “முதலானவை” பல. அவற்றுள் முக்கியமானது, தியாகம்!   அவர் கண்ட கனவு, வஹீயாய் அமைந்தது; செய்த செயல் வரலாறானது; அதாவது-…

தத்துவத் தேரோட்டம்

                        – ஏம்பல் தஜம்முல் முஹம்மது     ‘ஞானத்தின் மீதான காதல்’ என்று பொருள்படும் phislosophys எனும் கிரேக்கச் சொல்லில் இருந்து லத்தீன், பழங்கால ஃபிரெஞ்ச், இடைக்கால ஆங்கிலம் ஆகிய மொழிகளின் வழியே சென்று சிறுசிறு மாற்றங்கள் பெற்று, இன்று தத்துவத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லாக philosophys எனும்…

முனைப்பூட்டும் மூன்றாம் மாநில மாநாடு

எல்லாம் வல்ல இறைவனின் பேரருளால் கடந்த செப்டம்பர்30,அக்டோபர்1&2 ஆகிய நாட்களில் குற்றாலம்-தென்காசியில் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் 3-ஆம் மாநில மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று நிறைவுற்றது.        கடந்த காலங்களில் உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் நடைபெற்ற ஒவ்வொரு மாநாடும் வெவ்வேறு வகையில் எடுத்துக்கொண்ட கருப் பொருளுக்கு ஏற்ப…

இவர்தாம் முஹம்மது நபிநாதர்!

இவர்தாம் முஹம்மது நபிநாதர்!-அல்லாஹ் இறுதியில் அனுப்பிய திருத்தூதர்!!   அன்பே இவர்களின் அடிப்படையாம்-தூய          அறிவே இவர்களின் ஆயுதமாம்! பண்புகள் இவர்களின் படைவரிசை-இந்தப்          பாருலகே இவர்கள் சீர்வரிசை!                       (இவர்தாம்…)1.   ஆர்வம் இவர்களின் வாகனமாம்-வந்(து)         அடைந்திடும் துக்கமும் துணைவனென்பார்! சீர்இறை வணக்கமே பேரின்பம்-இவர்கள்         செயலுக்கு…

வெளிச்ச வாசல்

திருமறையின் தோற்றுவாய்” என்று தமிழுலகம் போற்றியுரைக்கும் ஃபாத்திஹா சூராவைப் பற்றி அறிவுலகச் சகோதரர்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஆவலில் எழுதப்பட்ட ஓர் ஆக்கத்தைக் கீழே அன்புடன் சமர்ப்பிக்கிறேன்:-   வெளிச்ச வாசல்   அளவே இல்லா அருளாளன் நிகரே இல்லா அன்பாளன் நலமே செய்யும் பண்பாளன் நாயன் அல்லாஹ் திருப்பெயரால்…  …

தெரியாமல் தெரியவரும் கருவூலம் !

திருவுரு வாயிருந்தும் தெரியாமல் தெரியவரும் கருவூல மாகஉள்ளான் ஒருவன்–அவன்தான் கருணையங் கடலான இறைவன்! (திருவுரு…)            1.   அண்டகோ ளங்களெல்லாம் உண்டுபண்ணிக் கொடுத்து,”எனைக் கண்டறிந்து கொள்க”என்பான் ஒருவன்–அவன்தான் அன்புமழை யாய்ப்பொழியும் இறைவன்! (திருவுரு…)  2.   ஆதியின்றி அந்தமின்றி அழியாத பெரும்பொருளாய் நீதிஎன்றும் செலுத்துகிறான் ஒருவன் –அவன்தான் வேதம்”குர் ஆன்”கொடுத்த…

நலமெலாம் தரும் சத்தியம்

இஸ்லாம் தான்உயர் தத்துவம்-இதை ஏற்பது தான்முதல் உத்தமம்! நம்பிச் செயல்படல் பத்தியம்-இது நலமெலாம் தருதல் சத்தியம்!   பொறுமையில் நன்கு கலந்து-வாழ்வு பூராவும் இதனை அருந்து! வெறுமை யில்கூட இருந்து-பல வெற்றிகள் தரும்இம் மருந்து!      (இஸ்லாம்…)   பாவம் அனைத்தையும் நீக்கும்-நேர்ப் பாதையில் கொண்டுனைச் சேர்க்கும்! மேவும் புகழினைக்…

ரமளான் – ஒரு பயிற்சிப் பட்டறை

  நோன்பே, நீ எல்லாத் தீமைகளுக்கும் எதிரான கேடயம். உன்னை அரியாதவர்க்கோ புதிரான பொருள் ! புனிதர்களாக்கி, மானிடருக்குப் புத்துணர்ச்சியும் அளிக்க ஹிரா மலையிலிருந்து கிளம்பிய அருவி நீ இறையருள் மழையின் ஈர்ப்பு விசை நீ தீமையின் தேசங்களில் ஷைத்தான்கள் எழுப்பும் கோட்டைகளை மூழ்கடிக்கும் கடல்கோள் நீ அறத்திற்கு…