1. Home
  2. அதிரை கவியன்பன் கலாம்

Category: அதிரை கவியன்பன் கலாம்

பூப் பூவாய்ப் பூத்திருக்கு பூவுலகில்….!!

படைத்தவன் படைத்த  பாமாலை  பாரெங்கும் பூத்திருக்கும்   பூஞ்சோலை கருப்பையின் கதகதப்பு  அன்னையின் அரவணைப்பு  அத்தனையும் வாடாத பூ மனைவியின் இதழ்  மலரும் சிரிப்பு  மாதுளையின் பூ  கன்னச் சிவப்பு கவரும் ரோசாப் பூ மழலையின் மாசிலாப் புன்சிரிப்பு மல்லிகைப் பூ நண்பனின் நட்பு  நாளும் பாதுகாப்பு அரிதாய்ப்…

படிப்பில் வேண்டும் பிடிப்பு

மூச்சு விடுதல் மட்டு மன்று முயற்சி கூட மனிதமே பேச்சில் கூறு மனைத்தும் விடாமல் பேணிக் காத்தல் மனிதமே பாய்ச்சும் நீரா லுயிரும் பெற்று பயிரும் வளர்தல் போலவும் காய்ச்சும் தங்கம் ஒளிர்தல் போன்றும் கடின வுழைப்பு வெல்லுமே ஊதும் சங்கின் அறிவிப் பால்நம் உறக்கம் களையச் செய்யுமே…

காலம்

காலம் நிகழ்வுகளை நினைவுகளாய்ப் பதிந்து வைக்கும் ஒலிநாடா   இன்றைய செய்திகளை நாளைய வரலாறுகளாய்ப் பாதுகாத்து வைக்கும் பேரேடு   துக்கங்கள் யாவும் மறந்து போக வைக்கும் மாமருந்து   வாய்ப்புகளாய் வாசற்கதவினைத் தட்டும் உருவமில்லா ஓர் உற்ற நண்பன்   காத்திருத்தல் தவப் பயனாய் பொறுமை தரும்…

நெஞ்சுப் பொறுக்குதில்லையே..!!!!

கொஞ்சும் அழகுத் தமிழ்மொழி                 குதறி விடத்தான் கொலைவெறி நஞ்சு கலந்து வருவதை              நன்க றிந்த நிலையினால் நெஞ்சுப் பொறுக்கு    தில்லையே             நேரமைத் திறனு  மின்றியே வஞ்சிக் குமிவர் பிழையினை             வளர விட்டக் கொடுமையே அஞ்சி அஞ்சி வாழ்வதால்           அன்னைத் தமிழும் சாகுமே…

குடியரசு தினம்

குடியரசு தினம்; கோபத்தில் மனம் குடியரசுக் கொண்டாட்டம் வருடந்  தோறும் *****குறைவின்றி விமர்சையுடன் நடந்த போதும் விடியாத இரவினிலே பிறந்த நாட்டில் *****விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப் பாட்டில் முடியாத நிலைமைக்கு வந்த தாலே *****முதலில்லா வியாபாரம் ஊழல் தானே படியாத அரசியலார் போடும் வேசம் ***** பகற்கொள்ளை நடக்குமெங்கள்…

கவிதை பாடுவோம்

மலரை வருடிச் செல்லும் மாலை நேரத் தென்றல்; நிலவை கடந்து செல்லும் நீல வானின் மேகம்; புலவர் யாப்பில் மனமும் புரளும் தன்மை காண்பீர்! உலகில் மொழிகள் வேறாம்; உணர்வு என்றும் ஒன்றாம் ! திசைகள் வேறு வேறு; தெரியும் இலக்கு ஒன்றே அசைக்கும் நிலையில் பாடும் அனைத்து…

அன்றும் இன்றும்

அன்று: கன்னத்தில் முத்தமிட்டு கட்டியணைத்து உச்சிதனை முகர்ந்து உச்சந்தலையில் ஓதி சென்றுவா மகனே ”வென்றுவா மகனே” என்றுதான் புகழந்த தாய் அன்றுதான் கண்டோம் இன்று: “ஏழு மணியாச்சுடா எழுந்து வா சனியனே” கோபத்தில் வாயைக் கொப்பளித்து சாபத்தில் காலைச் சாப்பாட்டை அளித்து விரட்டியடிக்கும் வீரத்தாய்(?) இன்று அன்று: தாய்பாடும்…

அனைத்துக் கட்சிகளும் அரவணைத்து “அணையுங்கள்”

பாட்டன்மார் கெட்டியாய்த் தானே அணைகட்டிப் போட்டனரே சேட்டன்மார் மாத்திரம் எப்படித்தான் கற்றனர்ச் சேட்டைகளை நாட்டாமை தீர்ப்பு வழங்கவே கூட்டம் நடுவணாட்சிக் கூட்டாமல் தள்ளிவைத்தால் நாடோறும் பாடிடும் கூக்குரலே “கவியன்பன்”, கலாம்

அணைக்கட்டு அன்பை அணைக்கட்டும்

’முல்லைப் பெரியாறு’ சொல்லிப் பாரு நற்றமிழ்ப் பேரு நம்மை ஏய்ப்பது யாரு? உடைக்க நினைப்பது ஒற்றுமை உணர்வுகளை தண்ணீரை வைத்து தானியம், காய்கறி அரிசியும் பயிரிட்டாயா அரசியலைப் பயிரிடுகின்றாய் அண்டை மாநிலமே அரிசியும் பருப்பும் தந்தும் சண்டைப்  போட்டே சகோதர்களின் மண்டை ஓட்டை வைத்து மல்லுக்கு நிற்கின்றாய் உடைப்பதில்…

கவிதை என்பது

கவிதைகள் என்பது: உயிரின் மீது பதியும் உயிரெழுத்து மெய்யின் புலன்களை மெய்யாகவே புலன்விசாரணை செய்யும் மெய்யெழுத்து நிராயுதபாணிகளான நியாயவான்கட்கு ஆயுதமாய்க் காக்கும் ஆயுத எழுத்து கேள்விக்குறியாய் கூனிவிட்ட சமுதாயத்தை ஆச்சர்யக் குறியாய் ஆகாயமாய்ப் பார்த்திட ஆன்மபலம் ஊட்டும் கவிதைகள் யாவும் பொய்மைகள் அல்ல; ஈற்றெதுகையில் மிளிரும் இறைமறையும் இலக்கிய…