1. Home
  2. அதிரை கவியன்பன் கலாம்

Category: அதிரை கவியன்பன் கலாம்

பர்தாப் போடுதல் சரிதான்!

வைரமதைப் பெட்டகத்தில் பாது காத்து ..வைக்கவேண்டும் என்றுணர்ந்து கொண்ட நீதான் வைரமணிப் பெண்மணிகள் ஊரைச் சுற்ற …வைப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்  மெய்ரணமா கும்வரைக்கும் காமு கர்கள் …மேய்ந்திட்ட மேனிமீதுக் காமப் பார்வைப் பெய்தவிடம் தாக்காமல் பாது காக்கப் …பெருங்கேட யம்போலாம் பர்தாப் போர்வை!       …

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினம்

அமீரகம்.. அன்பின் அகம் பண்பின் சுகம் நட்பிகளில் பேரிடம் நானிலத்தின் ஓரிடம் எண்ணெய்ச் சுரங்கம் என்னை வார்தெடுத்த எழில்மிகு அரங்கம் அதிரைப்பட்டினம் அடியேனின் பாடசாலை அபுதபிப் பட்டணம் அடியேனின் தொழிறசாலை பாலைவனத்தையும் பசுஞ்சோலையாக்கிய வேலையாட்களை வேகமாய் உயர்த்திய வேகம் குறையாததால் மோகம் கொண்டு மொய்க்கின்றோம்! “யாதும் ஊரே யாவரும்…

பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை !!!!!

பற்றி எரிகிறது …பாலஸ்தீன் காசாவில் வெற்றிக் கிடைத்திடவே …வேண்டும்தீன் நேசர்காள்! காலமும் காணாக் …காட்சித்தான் பின்ன பாலகர் செய்த … பாவம்தான் என்ன? கொடுமையிலும் கொடுமை …கொலைசெயுமிவ் வன்மை கடுமையுடன் தடுத்தால் …களைந்துவிடும் தீமை இறைவனின் கோபம் ….இஸ்ரவேலர் அடைவர் விரைவுடன் தீர்ப்பு …வந்திடவும்; மடிவர் இறுதிநாள் வருகைக்கு…

பசிக்க வைத்த நோன்பு ருசிக்க வைத்த மாண்பு

ஆன்மாவின் உணவாக ……ஆகிவிட்ட ரமலானே நோன்பும்தான் மருந்தாகி …..நோய்முறிக்கும் ரமலானே! பாரினிலே குர்ஆனைப் ….பாடமிட்ட ஹாபிழ்கள், காரிகளின் கிர்ஆத்கள் …..காதுகளில் சொட்டுந்தேன்! பகைவனான ஷைத்தானைப் ……பசியினாலே முறியடித்தாய்த் தொகையுடனே வானோரைத் …தொடரவும்தான் நெறியளித்தாய்! இருளான ஆன்மாவை …….இறைமறையின் ஒளியாலே அருளான பாதைக்கு ….அழைத்திடுமுன் வழியாமே! நண்பனாக மாற்றினாயே …….நாங்களோதும்…

அன்பு

மனக்கேணியின் வற்றாத ஊற்று உயிர்க் கயிற்றால் உணர்வு வாளியைக் கட்டி கண்களாம் குடங்களில் ஊற்று கண்ணீராகும் அன்பு ஊற்று அள்ளிக் கொடுத்தால் அளவின்றித் திருப்பிக் கிடைக்கும் சூட்சமம் பக்தி, பாசம், நட்பு, காதல் பற்பல கிளைகள் கொண்ட அற்புத மரத்தின் ஆணிவேர் பூமிச் சுற்றவும் பூமியைச் சுற்றியும் பூர்வீக…

குழந்தை எனும் கவிதை

உயிரும் மெய்யும் கலந்திருக்கும் உன் புன்னகை மொழி …! இசைக்கருவிகள் மழலை ஒலி முன்னே மண்டியிடுகின்றன! மலர்கள் இதழ்களை விரிக்கின்றன உன் சுவாசத்தை அவைகளின் வாசமாக்கி வசப்படுத்திக் கொள்ள..! அல்லும் பகலும் அழகூட்டும் உன் விழிகளால் விண்மீன்கள் வெட்கித்துத் தோல்வியை ஒப்புக்கொள்கின்றன..! கருவறையின் கதகதப்பை உன்னிடம் காற்றும் கடன்…

பயணங்கள்

தந்தையின் விந்தும் கருவறை நோக்கித் தனிமையில் முதன்முதற் பயணம் முந்தவும் பின்னே இறையருள் கொண்டு முயற்சியால் வென்றதும் பயணம் பந்தென உருண்டு பக்குவத் திங்கள் பத்தினில் கருவறைப் பயணம் வந்திடும் தருணம் வந்ததும் நலமாய் வையகம் கண்டதும் பயணம் கருவறைப் பயண மிருந்ததை மறந்து கனவினில் மிதந்திடும் நீயும் ஒருமுறை எழும்பித்…

சுற்றுப்புறக் காட்சி கற்றுத்தரும் மாட்சி

ஆழ்கடலில் குளித்தாலும் அழுக்கெல்லாம் போகா வாழ்வினிலே மலிந்துள்ள அழுக்கெல்லாம் போக தாழ்மையுள வழிபாடாம் தொழுகைஎனும் யோகா பாழ்படுத்தும் இறப்பைஎண்ணிப் பக்குவமாய் வாழ்க! கூரைகளும்நனி சிறக்கும்படி   கூறுதல்நெடு  நோக்கம் கூரையிலுள    விசிறிச்சுழற்  குளிர்ப்பேச்சினைக் கூறும் கூறிடும்மணிக் கடிகாரமும்    கழியும்பொழு தாலே மாறிடும்மணி  களின்நேரமும் மதித்தாருயர் வாரே செய்யும்தொழில்  எல்லாம்நலம்     சேரும்நலம்  ஆக பொய்யும்கள    வும்போக்கிடு     பேசும்புகழ்   சேர மெய்யும்மன    மும்கூடிய      மெய்யாம்பணி யாlலே பெய்யும்மழை   காணும்நிலம்    பூக்கும்வளம் போல நாட்காட்டியும்  சொல்லும்விதம்     நாளும்புதுச்  செய்தி ஆட்கொள்ளவே வேண்டும்மனம் ஆர்வம்பெறச் செய்யும் வேட்கைதரும் வேகம்தினம்  வேண்டும்செயல் நோக்கம் தாக்கம்தரும்  ஆற்றல்பெறத்   தள்ளும்கத  வைப்போல் சன்னலும் நம்மிடம் சொல்லிடுமே -நாம் செகத்தினை நோக்குதல்…

வறுமைக் கோடு

வலியோ ரெளியோர் மீதினிலே வகுத்து வைத்தக் கோடாகும் பலியாய்ப் போகு மெளியோரும் பயமாய்ப் பார்க்கும் கேடாகும் வேலி தாண்டி வரவியலா விரக்தித் தருமே இக்கோடும் நீலிக் கண்ணீர் வடிக்கின்ற நீசர் செய்த பெருங்கேடாம் கானல் நீராய் வாழ்நாளும் கனவாய்ப் போய்தா னழிந்தது வானம் பார்க்கும் பூமிதானே வறுமைக் கோடு…

தேர்வில் வெல்ல தேவையானவைகள்

திரும்பத் திரும்பப் படியுங்கள் தெளிவு வரும்வரை படித்தவை உள்ளத்தில் பதியும் தேர்வுக்கு முதல்நாளும் தேர்வின் அன்றும் ஆர்வமுடன் மீள்பார்வை அவசியம் வேண்டும் சாய்ந்தும் பக்கமாய்ச் சரிந்தும் படித்தால் மாய்ந்து படித்தும் மூளையில் படியாது ; உண்ண வேண்டிய உணவு காய்கனி திண்ணமாய்க் கிட்டும் தேர்வில் வெற்றிக்கனி குளிக்கு முன்பு…