1. Home
  2. அதிரை கவியன்பன் கலாம்

Category: அதிரை கவியன்பன் கலாம்

உறவுகள்

ஆதாம் ஏவாள் ஆரம்பித்த உறவுகள் சாத்தான் புகுந்து சாய்த்தான்; அதனால் – பிரிவுகள் அண்டை வீட்டோடும் அண்டை நாட்டோடும் சண்டை போட்டே மண்டை ஓட்டை மலிவாக்கினோம்…. உறவு ஓர் அதிசய மரம்: உள்ளன்பே அதன் உரம்; உதவும் கரம் தான் உண்டு அதனைத் தாங்கும் தண்டு; அன்பு ஊற்று…

புன்னகை

”புன்னகை” இதயக் கண்களைக் கூச வைக்கும் மின்னல் உள்ளத்தின் வார்த்தைகள் உள்ளடக்கிய உதட்டின் மொழி உணர்வின் சூரியக் கதிர்கள் உதடுச் சந்திரனில் பிம்பம் இதழ்களின் ஓரம் இளம்பிறையின் வடிவம் சீறும் பாம்பு மனிதர்களை ஆறும்படி ஆட்டுவிக்கும் மகுடி காந்தமாய் ஈர்க்கும் சாந்த சக்தி அரசனையும் அடக்கும் அறிஞர்களின் ஆயுதம்…

போலிகள்

விளக்கினை ஏற்றிவிட்டு .. விசிறியால் வீசுவாரோ அழுக்கினை நீக்கிவிட்டு .. அசுத்தமும் பூசுவாரோ? தேசியம் பேசுகிறார் .. திருடுகள் பண்ணுகிறார் ஆசியும் கூறுகிறார் .. அழிவையே எண்ணுகிறார் வேலியே பயிரைத்தான் .. வேகமாய் மேய்தற்போல் போலிகள் இவர்கள்தாம் .. போதனைச் சாயத்தில் என்ன மனிதரிவர்? .. எளியவர்க்கு நல்லவராம்…

பனிப் பரல்கள்

பனிப் பரல்கள்   புள்ளியாய் இறைத்த .. பூம்பனிக் கூளங்கள் வெள்ளியாய் நிறைத்த .. வெண்மணிச் சோளங்கள்     கண்மூடித் தெளித்த .. கண்ணாடித் தூவல்கள் விண்மூடித் துளிர்த்த .. வேடிக்கைச் சீவல்கள்   பால்நிலாச் சிட்டின் .. பருவமென் முட்டைகள் வேனிலாத் திட்டின் .. விடியல்…

பெண்ணிவள்

காற்றாய் மென்மையும் கனியாய் இனிமையும் கொண்டு ……கனவிலும் நினைவிலுமே ஊற்றாய்ப் பெருகிடும் மேனி உணர்வுகள் எல்லாம் ..ஒடுங்கிடத் துணையாக ஆற்றல் மிக்கவன் படைத்து வழங்கினான் நாமும் ….ஆறுதல் பெற்றிடத்தான் போற்றும் வாழ்வினில் இன்பம் எய்திட இவளைப் ….புரிந்தவர் வென்றனரே! — -அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

கைபேசியின் வல்லமை

மருதாணி இட்டது போல கையை விரித்து அதனுள் திணிக்க வைத்தும்; எதிரில் வருவோரைக் கண்டு கொள்ளாமல் ஒருவகை உலாவை உருவாக்கிய வல்லமை கைபேசி!   — அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

முதுமை

மறுமை முகவரிகள் காண்பதற்குப் போடப்படும் முகவரிகள் முதுமை -அதிரை   கவியன்பன் கலாம், அபுதாபி  

கடல்

நீரலைகள் நிலமகளை ..நொடிதோறும் முத்தமிடும் பேரலையாய்ச் சுழலுகின்றப் …பொழுதானால் சத்தமிடும் கவலை கரைசேரக் காணா வழிகள் அவளை மறக்கவே அன்றாடம் பாக்களில் மூழ்கிநான் பார்த்தும் முடியாமல் போனதால் ஆழ்கடல் போல்மனம் ஆச்சு. ஆர்த்துக் கரையைத் தொடத்தொடத்தான் ……..ஆழி அலைகள் தவழ்ந்திடுதே சேர்க்கும் உடலின் குருதியெலாம் . ..சேர்ந்த ஓட்டம்…

வானம்

அழுது  வழியும் வானம் அதனால் சிரிக்கும் பூமியும் செழிப்பால் பொழுதில்  ஒழியும் ஈனம் -அதிரை கவியருவி கவியன்பன் கலாம்,

கடல்

நீரலைகள் நிலமகளை ..நொடிதோறும் முத்தமிடும் பேரலையாய்ச் சுழலுகின்றப் …பொழுதானால் சத்தமிடும்   கவலை கரைசேரக் காணா வழிகள் அவளை மறக்கவே அன்றாடம் பாக்களில் மூழ்கிநான் பார்த்தும் முடியாமல் போனதால் ஆழ்கடல் போல்மனம் ஆச்சு.   ஆர்த்துக் கரையைத் தொடத்தொடத்தான் ……..ஆழி அலைகள் தவழ்ந்திடுதே சேர்க்கும் உடலின் குருதியெலாம் .…