1. Home
  2. அதிரை கவியன்பன் கலாம்

Category: அதிரை கவியன்பன் கலாம்

காதல்

உடலியங்க சுவாசமென்னும் உயிரென்றால் உயிரியங்க காதலென்னும் சுவாசம்! அஃதுன்றன் அன்பென்னும் நேசம். உயிர்போகும் உடல்வேதனையிலும் உன்றன் காதல் சுவாசம் ஓரிடத்தில் அமர்நது காற்றலைகளூடே பேரிடர் நீக்கும் பேருபகரணமாய்க் கண்டு உயிரை மீட்டுத் தந்ததே! நீயின்றி நானில்லை; நானின்றி நீயில்லை! காதல் சுவாசக் காற்றை காதில் ஊதுகின்றாய்; செயலிழக்கும் நரம்பின்…

யார் கவிஞன்?

யார் கவிஞன்? அன்பின் விழிகளில் அனைத்திலும் அழகைக் காண்பவன் உள்மனத்தில் ஊடுருவும் ஊதாகதிர் உள்ளவன் உணர்வுகளை உள்வாங்கி உணர்வுகளைக் கொப்பளிப்பவன் மலரின் வாசத்திலும் மழலையின் பாசத்திலும் மண்டிக் கிடப்பதை மனக்கண்ணாடியில் பிரதிபலிப்பவன் காதலைப் பாடுவான் காமுகனைச் சாடுவான் வீரத்தைப் போற்றுவான் வீண்கொலைகளைத் தூற்றுவான் வண்ணத்துப் பூச்சியின் எண்ணத்தையும் வார்த்தைக்…

கவனம்

கத்தி நுனியில் கவனமாய்க் கால்வைத்துப் பத்தி ரமாகப் பயணித்தல் போலவே புத்தி யுடன்தான் பொறுமை உரையாடல் நித்தி யவெற்றி நிகழ்வு. _அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

காதல்

உடலியங்க சுவாசமென்னும் உயிரென்றால் உயிரியங்க காதலென்னும் சுவாசம்! அஃதுன்றன் அன்பென்னும் நேசம். உயிர்போகும் உடல்வேதனையிலும் உன்றன் காதல் சுவாசம் ஓரிடத்தில் அமர்நது காற்றலைகளூடே பேரிடர் நீக்கும் பேருபகரணமாய்க் கண்டு உயிரை மீட்டுத் தந்ததே! நீயின்றி நானில்லை; நானின்றி நீயில்லை! காதல் சுவாசக் காற்றை காதில் ஊதுகின்றாய்; செயலிழக்கும் நரம்பின்…

புத்தாண்டு வாழ்த்து

பூத்திருக்கும் இந்தநற் புத்தாண்டு வந்ததனால் காத்திருக்கும் நன்மைக் கனவுகளை நம்மிடத்தில் சேர்த்துவிடும் வண்ணமாகத் தித்திக்கும் நல்லாண்டுப் போர்த்திவிடும் இன்பப் பொழுது – அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

தியாகத் திருநாள் சிந்தனைகள்

தியாகத் திருநாள் சிந்தனைகள் மக்கா பயணம் இப்ராஹீம்(அலை) மூலம் விடுத்த அழைப்புக்கு “லப்பைக்” திருச்சொல்லால் லட்சக் கணக்கானோர் ஒப்பிலா னில்லத்தில் ஓதும் மறுமொழி இப்புவி யெங்குமே ஈர்க்கும் கஃபா: சாந்தம் பொழிய சமத்துவம் காணவே காந்தமாய் ஈர்க்கும் கருவான பள்ளி துருவான பாவம் துடைக்கும் பணிகள் இரும்பு மனமே…

உயர்வுக்கு உடைகள் தடையில்லை!

உடைகளில் மாற்றங்கள் இன்றி – நீயும் உயரமே சென்றதற்கு நன்றி-உன் உள்ளமதில் உள்ளதினி கல்வியெனும் உழைப்பினை நம்பு – அதுவே தெம்பு! தடைகளைத் தாண்டிய உச்சி- உன்றன் தயக்கமிலாப் பேராற்றல் மெச்சி- யானும் சத்தமுடன் சொல்லுவதும் இவ்வுலகின் சான்றோர்கள் கூற்று- என்றே போற்று! — அதிரை கவியன்பன் கலாம்,…

காதற்கொலை!!!

கொலவெறி பாடல் கொண்டு வந்தது கொலவெறி காதல்! அறிவார்ந்த காதலை அநியாயமாய்க் காமப் பசிக்கு அரிவாளால் விடை தேடுது! அறம் சார்ந்த காதலை நிறம் சார்ந்து ஏற்கவே திறம் என்று ஊட்டுது திமிர் பிடித்த மேலெண்ணம்! — அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

தட்பவெப்பம்

மழைக் கொட்டியும் குடைக்குள் தீப்பற்றிக் கொண்டது ஒருகுடையில் இருகிளிகள்!   –அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

கடல்

நீரலைகள் நிலமகளை ..நொடிதோறும் முத்தமிடும் பேரலையாய்ச் சுழலுகின்றப் …பொழுதானால் சத்தமிடும் ஆர்த்துக் கரையைத் தொடத்தொடத்தான் ……..ஆழி அலைகள் தவழ்ந்திடுதே சேர்க்கும் உடலின் குருதியெலாம் …சேர்ந்த ஓட்டம் உயிரதுவாம்! கவலை கரைசேரக் காணா வழிகள் அவளை மறக்கவே அன்றாடம் பாக்களில் மூழ்கிநான் பார்த்தும் முடியாமல் போனதால் ஆழ்கடல் போல்மனம் ஆகு…