1. Home
  2. அதிரை கவியன்பன் கலாம்

Category: அதிரை கவியன்பன் கலாம்

இறையருளும் மனித முயற்சியும்

1) ஆற்றல் மிக்கோ னாற்றற் றானே ஆற்று நீரும்; அள்ளி நீயும் போற்றி நன்றாய்ப் பேண்.   2) கட்வுளி னருளினால் கடலிலே உயிரினம்; படகிலே வலையுடன் பயணமாம் முயற்சியால் நடக்குமே வணிகமும் நலம்   3) கிணற்றுநீரும் பெருகுவதும் கருணையா ளனருட்டானே உணர்ந்துநீயும் முயல்கின்றா யுனதுவாளி கயிற்றினாலே…

தெருக்களின் பாகுபாடு உருக்குலைக்கும் ஒற்றுமைக் கூடு

ஊரை இணைக்கும் கோடுகளே ஊரைப் பிரிக்கும் கேடுகளானது   வேற்றுமைத் தீயால் வெந்து மடிகின்றோம் வாஞ்சை வாளியால் அன்பு நீரெடுத்து வாரி அணைப்போம் சிரட்டை அளவேனும் சிரத்தை நினைப்போம்   கூட்டமைப்பு என்னும் கூடாரம் அமைத்தோம் ஓட்டுக்காகப் பிளக்கும் வேட்டமைப்புகளை வெளியில் நிறுத்துவோம்   உளத்தூய்மைப் பற்றினால் உருவாகும்…

துளிப்பாக்​கள் (ஹைக்கூ)

சுமந்த போழ்தும் சும்ந்த பின்னும் சுமப்பது – தாயின் தியாகம்   ஊருக்கு விருந்து வைக்கவும் ஊரையே விருந்தாக்கவும்- ஒற்றைத் தீக்குச்சி   மானம் காப்பதும் மானமிழந்தால் கோர்ப்பதும் – ஒன்றே முடிச்சு   மணந்தால் மறப்பதும் மணக்காவிடில் மறக்காததும்- அதே காதல்   உணவின் முடிவு மறுவுலகின்…

எட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்

அன்பைப் பெருக்கு அனைத்தும் செழித்திடும்              வம்பு வளர்த்தால் வளமே அழிக்கும்   நம்பி இறங்கு நலமே கிடைத்திடும் வெம்பி கிடந்தால் வளங்கள் உடையும்   நோக்கம் இருந்தால் நெருங்குமே சக்திதான் ஊக்கம் குறைந்தால் உடையுமே யுக்திகள்   நல்ல மனத்தில் நலமே தங்கிடும் பொல்லாப் பகையால் பிளவுகள் பொங்கிடும்…

ஈரம்

ஈரமுள்ள நிலத்திற்றா னெழுந்துவரும் நல்விதைகள் ஈரமுள்ள மனதிற்றா னெழுதவரும் கவிதைகள் ஈரமுள்ள கர்ப்பத்தி லியங்கிவரும் குழந்தைகள் ஈரமுள்ள வுதடுகளி லெழும்காதற் போதைகள்   ஈரமுள்ள வுறவுகளி லெப்பொழுதும் நன்மைகள் ஈரமுள்ள வுணர்வுகளி லிரக்கத்தின் தன்மைகள் ஈரமுள்ள இதயந்தா னிரத்தத்தி னோட்டமாகும் ஈரமுள்ள ஈகையினா லேழ்மையுமே யோட்டமிடும்    ஈரப்பசையு…

யான் படித்தப் பள்ளி; உயர்கின்றது மதிப்பை அள்ளி

யான்படித்தப் பள்ளித்தரம் உயர்வானச் செய்தியினால் தேன்குடித்த  வின்பம்போல் தித்திப்பை எய்தினேனே யான்வடிக்கும் பாக்கட்கு யாப்புத்தந்      தபள்ளி யான்குடித்தத் தமிழ்ப்பால் இன்னுமூறு மேயள்ளி   காதிர்மு கைதீனென்(னும்) கல்விச்சாலை கண்டேனே சாதிமத பேதமற்ற சமத்துவமேக் கொண்டேனே ஆதியிறை ஞானமுள்ள ஆசானைப் பெற்றேனே நீதிக்கதைகள் மூலம்தான் நெறிமுறைகள் கற்றேனே   தமிழ்வழியிற்…

ஈமானிலே ………

அல்லாஹ்வின் அடியார்கள் முஃமீன்களே – அவனை            ஐவேளை தொழுவதற்கு வாருங்களே இல்லாத ஏழைக்கு ஸக்காத்தையே – ஏழைவரியாக          இரண்டரை சதவீதம் வழங்குங்களே பொல்லாத பாவங்கள் கரைந்தோடவே- இந்தப்         புனிதரமலானில் நோன்பை நோற்பீர்களே கல்லான உள்ளங்கள் கசிந்திடுமே – அந்தக்         கஃபாவில் ஹஜ்ஜை செய்வீர்களே…

சென்றுவா ரமலானே

புடம்போட்டத் தங்கமாய்ப் புத்துணர்வை யூட்டி தடம்புரளா வாழ்வுக்குத் தக்கவ்ழி காட்டி கடந்து பயணிக்கும் கண்ணிய மாதம் நடந்து முடிந்த ரமலானின் தேர்வில் கடமை முடித்தோம் கருணை வரவால் உடனிருந்தாய் எங்களுடன் உண்மைத் தோழா விடைபெறு முன்னை விழிநீர் சுரந்து மடைதிறக்கச் சொல்வேன் மகிழ்வுடன் சென்றுவா      …

பாலைவனத் தொழிலாளியி​ன் வேலை கூறும்

1) சுயமாகத் தொழிலைத்தான் செயல்படுத்த வழியின்றி அயல்நாட்டில் பணியாற்றி அடிமையாய் வளர்ந்துகொண்டு துயரத்தைக் குடும்பத்தில் துடைத்திட்டப் பணமெல்லாம் வியர்வையின் விதைகளிலே விளைந்திட்ட விருட்சமன்றோ?   2) இரைதேடும் பறவையாய் இழந்திட்டார் உறவையே கரைதேடும் படகாகக் கலக்கத்தி லுழைக்கின்றார் விரைவாகக் கடனெல்லாம் விடுதலையா குமென்றெண்ணி தரைமீது தவிக்கின்றார் தகிக்கும்வெய் யிலிலன்றோ?…

பொறுமை பெறும் பெருமை

கருவின் பொறுமை கவிதைக் குழந்தைத் தருவின் வளர்ச்சித் தளிர்விதை மூலம் முகிலின் பொறுமை முழங்கும் மழையாய்த் துகிலின் பிறப்புத் தறியின் பொறுமையாம் வானிலாத் தோற்றம் வளர்பிறை மாற்றமே தேனீப் பொறுமையேத் தேனின் சுவையாய் பொறுத்தா லரிசியும் பொங்கிடும் சோறாய்ப் பொறுத்தால் கிடைக்கும் புகழ்       யாப்பிலக்கணம்:…