List/Grid

கட்டுரைகள் Subscribe to கட்டுரைகள்

இயற்கை சாகுபடிக்கு வழிகாட்டும் கிருஷ்ணகிரி தோட்டக்கலை விவசாயிகள்

இயற்கை சாகுபடிக்கு வழிகாட்டும் கிருஷ்ணகிரி தோட்டக்கலை விவசாயிகள்

இயற்கை சாகுபடிக்கு வழிகாட்டும் கிருஷ்ணகிரி தோட்டக்கலை விவசாயிகள் வேளாண் நிலம் முனைவர்.தி.ராஜ்பிரவின் தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் தோட்டக்கலை பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகிறது. ஐந்து முக்கிய நெடுஞ்சாலைகளை கொண்டுள்ள காரணத்தால் இங்கு சாகுபடி செய்யப்படும் பழங்கள், காய், கனிகள் தொலை… Read more »

பாகியாத் நிறுவனர் – நினைவலைகள் அரங்கம்

பாகியாத் நிறுவனர் – நினைவலைகள் அரங்கம்

– மௌலவி, அ. முஹம்மது கான் பாகவி வே லூர் அல்பாகியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி 150 ஆண்டுகால வரலாற்றுக்குச் சொந்தமான பாரம்பரியமிக்க கல்வி நிலையம். இங்கு இஸ்லாமிய சமயக் கல்வி போதிக்கப்படுகிறது. வேலூர் மாநகரின் சின்னங்களில் ஒன்றாக விளங்கும் இக்கல்லூரியில்… Read more »

ஒரு புத்தகக் கடையை நடத்துவதென்பது ………….!

ஒரு புத்தகக் கடையை நடத்துவதென்பது ………….!

ஒரு புத்தகக் கடையை நடத்துவதென்பது ………….! எஸ் வி வேணுகோபாலன்  இரவு பதினொன்றரை மணிக்கு – கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் இருக்கும் – தமது புத்தகக் கடையை வெங்கடேசன்  மூடிக் கொண்டிருந்தார். வழக்கத்தைவிடக் கூடுதல் நேரம் ஆகிவிட்டது அன்று. முன்பக்கம் ஷட்டரை இழுத்துப்… Read more »

சொர்க்கம் நோக்கிய பயணம்

சொர்க்கம் நோக்கிய பயணம்

க ல்வியைத் தேடிச் செல்வதன் மகிமை குறித்து நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடும்போது ஒரு நீண்டஹதீஸில் இப்படிச் சொன்னார்கள்: ومن سلك طريقا يلتمس فيه علما سهّل الله له به طريقا إلى الجيّة. கல்வியைத் தேடி ஒருவர் ஒரு பாதையில் நடந்தால், அதன்மூலம்அவருக்குச் சொர்க்கம் செல்லும் பாதையை அல்லாஹ்எளிதாக்குகின்றான். (முஸ்லிம் – 5231) இதிலிருந்து, கல்வி நோக்கிய பயணம், சொர்க்கம் நோக்கியபயணமாகும் என்று அறியமுடிகிறது. இதற்குக் காரணம் என்ன? இறைவேதத்தையும் இறைத்தூதரின்வழிமுறையையும் கற்றறிந்து, இறைவன் படைத்துள்ள இயற்கைச்செல்வங்களை நுணுகி ஆராயும்போது, அது மனிதனுக்குஇறையச்சத்தை ஊட்டும்; நற்பண்புகளை வளர்க்கும்; ஒழுக்கமிக்கஉயர் வாழ்க்கைக்கு வழிகாட்டும். அந்த வழியில் நடப்பவர் சொர்க்கத்தை அடைவார் என்பதில் என்னசந்தேகம் இருக்க முடியும்? சொல்லுங்கள்! என்ன நடக்கிறது? ஆனால், இன்று என்ன நடக்கிறது? உலக நடப்பைச் சற்று ஆழமாகநோக்கினால் ஒரு உண்மை வெளிச்சத்திற்கு வரும். ஆம்! இன்று உலகநாடுகளை ஆள்வது மன்னர்களோ பிரதமர்களோ அல்லர். அவர்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் மூன்று பிரதான சக்திகளேஅவர்களை இயக்கிவருகின்றன. 1. அறிவியல் (العلوم); 2. தொழில் நுட்பம்(تِقْنِيّة); 3. கார்ப்பரேட் கம்பெனிகள் (شركات متّحدة). இவை ஒவ்வொன்றிலும்நன்மைகள் இருந்தாலும் தீமைகளே அதிகம். பயன்படுத்தும் நோக்கம்,பயன்பாட்டு முறை ஆகியவற்றைப் பொறுத்தே பலனைத் தீர்மானிக்கமுடியும். அறிவியலை எடுத்துக்கொள்வோம். அறிவியல் என்றால் என்ன?நிரூபணத்தின் அடிப்படையிலும் பரிசோதனை முறைகளைக்கொண்டும் இயற்கை உட்பட உலகத்திலுள்ள அனைத்தின் அமைப்பு,இயக்கம் ஆகியவற்றை விளக்கும் அறிவுத் துறையே அறிவியல்.அல்லது விஞ்ஞானம் எனப்படுகிறது. அதாவது இறைவனின் படைப்புகளை, அவை படைக்கப்பட்டமுறையை, அதன் இயக்கத்தை இயக்க விதியை ஆராய்ந்துஅறிவதுதான் அறிவியல். படைப்புகளின் நுணுக்கங்களைஅறியும்போது படைப்பாளனின் பேராற்றல் மனிதனைவியக்கவைக்கும். அவனுடைய ஆணைகளுக்கு மாற்றமாக நடந்தால்,கடுமையாகத் தண்டித்துவிடுவான் என்ற அச்சம் பிறக்கும். அதுமனிதனைப் பக்குவப்படுத்தும்; புனிதனாக்கும்…. Read more »

இளம் ஆலிம்களே! உங்களைத்தான்!

இளம் ஆலிம்களே! உங்களைத்தான்!

– அ. முஹம்மது கான் பாகவி   அ ரபி மத்ரஸாக்களின் மாணவக் கண்மணிகளே! குர்ஆனியகலைகள் நம் பார்வையில் ஐந்து என முந்தைய தொடரில்குறிப்பிட்டிருந்தோம். அதில் முதலாவது, திருக்குர்ஆனைத்திருத்தமாகவும், இராகமாகவும் ஓதக் கற்பிக்கின்ற ‘தஜ்வீத்’ எனும்கலையாகும் என்றும் விவரித்திருந்தோம். திருக்குர்ஆன் மனனப் பிரிவு அடுத்து இரண்டாவது, திருக்குர்ஆனைத் தவறோ தடுமாற்றமோ இல்லமால்மனனம் செய்கின்ற அற்புதமான கலை. பொதுவாக எல்லா முஸ்லிம்களும்குர்ஆனின் சில பகுதிகளையேனும் மனனம் செய்திருக்க வேண்டும்.அப்போதுதான், தொழுகைகளில் குர்ஆன் அத்தியாயங்களை (சூரா) ஓதி,முறையாகத் தொழுகையை நிறைவேற்ற இயலும். “குர்ஆனின் தோற்றுவாயான ‘அல்ஃபாத்திஹா’ எனும் முதல்அத்தியாயத்தை ஓதாதவருக்குத் தொழுகையே இல்லை” என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (புகாரீ – 756) அது மட்டுமன்றி, நபித்தோழர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள்கூறினார்கள்: இறைமறையில் ஒன்றுமே இல்லாத உள்ளம், குடியிருப்பவர் இல்லாதஇல்லம் போன்றது. அந்த இல்லம் சிதிலமடையும்; அந்த உள்ளமும்சிதிலமடையும். (தாரிமீ) இதன்றி, முழு குர்ஆனையும் முறையாக மனனம் செய்து, தொடர்ந்துஓதிவருபவர்களுக்குத் தனிச்சிறப்பு உண்டு. நபித்தோழர் அபூஉமாமா (ரலி)அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை (மனனமாக) ஓதிவாருங்கள்! இந்தப் பிரதிகள்தான்இருக் கின்றனவே! (பார்த்து ஓதிக்கொள்வோம்) என ஏமாந்துவிடவேண்டாம்! ஏனெனில், குர்ஆனை மனனம் செய்த இருதயத்தைஅல்லாஹ் நிச்சயமாக ஒருபோதும் வேதனை செய்யமாட்டான். (தாரிமீ) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை நன்கு மனனமிட்டுத் தங்குதடையின்றி ஓதுகின்றவர்,கண்ணியம் நிறைந்த தூதர்(களான வானவர்)களுடன் இருப்பார்.குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதை) சிரமத்துடன் திக்கித்திணறி ஓதிவருகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டு. (முஸ்லிம் – 1462) ஆக, திருக்குர்ஆனை மனனமிட்ட ஹாஃபிள்கள் வானவர்களுடன் இருக்கும்மரியாதையைப் பெறுகிறார்கள். மறுமையில் ஹாஃபிள்களுக்குக் கிடைக்கும்மாபெரும் தகுதியைப் பாருங்கள்; நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: குர்ஆனை மனனமிட்டவர் சொர்க்கத்தினுள் நுழையும்போது, “ஓதுங்கள்! (படித்தரங்களில்) ஏறிக்கொண்டே இருங்கள்” என்று கூறப்படும்.அவ்வாறே, அவரும் ஓதுவார். ஒவ்வொரு வசனத்திற்கும் ஒருபடித்தரத்தில் ஏறிக்கொண்டிருப்பார்; அவருக்கு மனனமாக உள்ள கடைசிவசனத்தை ஓதுகின்றவரை. (இப்னுமாஜா) மனனப் பிரிவில் இருக்கும் மாணவர்களே! அல்லாஹ்விடம் உங்களுக்குள்ளமரியாதையைப் பார்த்தீர்களா? நன்கு தஜ்வீதுடன் தடுமாற்றமின்றி,பிழையின்றி, மனனம் செய்யுங்கள். வசனங்களின் வரிசைக் கிரமம்மாறிவிடாமல், ஒரே சொல் மறுபடி வரும் இடத்தில் குழப்பமடைந்துவிடாமல்,உச்சரிப்பில் குளுறுபடி நேராமல், உருப்போடும்போதே மிகச் சரியாகவும்தரமாகவும் உள்ளத்தில் பதியச் செய்துவிடுங்கள். புனித ரமளானில் மட்டும் பயிற்சி எடுப்பது, மற்ற நாட்களில் தளர்ச்சிஅடைவது என்று இருந்துவிடாதீர்கள். ஏனெனில், மறப்பதில் குர்ஆனுக்கேமுதலிடம் என்றுதான் சொல்ல வேண்டும். நபி (ஸல்) அவர்கள்எச்சரிக்கிறார்கள்: குர்ஆனை (ஓதி அதை) கவனித்துவாருங்கள். ஏனெனில், என் உயிர்எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன் மீதாணையாக! கயிற்றில்கட்டி வைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தைவிட மிக வேகமாக குர்ஆன்(நினைவிலிருந்து) தப்பக்கூடியதாகும். (புகாரீ-5033)… Read more »

அறிவியலை சாமானியர்களிடம் கொண்டு சென்ற விஞ்ஞானி

அறிவியலை சாமானியர்களிடம் கொண்டு சென்ற விஞ்ஞானி

அறிவியல் கதிர் அறிவியலை சாமானியர்களிடம் கொண்டு சென்ற விஞ்ஞானி பேராசிரியர் யஷ்பால் பேராசிரியர் கே. ராஜு பஞ்சாபியர்களின் உற்சாகத்தைப் பிரதிபலித்த அறிவியலாளர்-கல்வியாளர் பேராசிரியர் யஷ்பால் 1926-ம் ஆண்டு பிறந்தவர். இயற்பியலாளராகப் பயிற்சி பெற்ற யஷ்பால் உலக அளவில் காஸ்மிக் அலைகளுக்கான துகள்… Read more »

விண்ணை அளந்த விஞ்ஞானி

விண்ணை அளந்த விஞ்ஞானி

அறிவியல் கதிர் விண்ணை அளந்த விஞ்ஞானி யு.ஆர்.ராவ் பேராசிரியர் கே. ராஜு ஜூலை 24 துயரமான நாளாக நம்மைக் கடந்து சென்று விட்டது. இந்தியாவின் இரு தவப்புதல்வர்கள்- தலைசிறந்த அறிவியலாளர்கள்- விண்வெளி விஞ்ஞானி டாக்டர் யு.ஆர்.ராவ், அறிவியலாளரும் கல்வியாளருமான டாக்டர் யஷ்பால்… Read more »

கொடுவரி முதலை குடை தண் துறைய‌.

கொடுவரி முதலை குடை தண் துறைய‌.

கொடுவரி முதலை குடை தண் துறைய‌. ==============================================ருத்ரா இ.பரமசிவன் தன் பார்ப்பு தின்னும் தழல் குமிழ் தோலின் முதலை குடை தண் துறைய‌ குறிஎய்தி நெடுங்கங்குல் மடி தொலைத்து மாய‌ உடல் உயிர் தின்னும் உயிர் உடல் தின்னும் பிணி தந்து… Read more »

மனோன்மணீயம்’ பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை

மனோன்மணீயம்’ பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை

மறக்கமுடியுமா? – ‘மனோன்மணீயம்’ பேராசிரியர் பெ.சுந்தரம்(பிள்ளை) :- எழில்.இளங்கோவன்   மறக்கமுடியுமா?   ‘மனோன்மணீயம்’ பேராசிரியர் பெ.சுந்தரம்(பிள்ளை) கன்னியாகுமரி மாவட்டம் நாஞ்சில் நாடுதான் இவரின் சொந்த ஊர். தொழில்  தொடர்பாக, நாஞ்சில் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து, கேரளம் மாநிலம் ஆலப்புழையில் குடியேறியவர்கள்… Read more »

விசயமங்கலம் புலவர் வீ. சொக்கலிங்கம்

விசயமங்கலம் புலவர் வீ. சொக்கலிங்கம்

விசயமங்கலம் புலவர் வீ. சொக்கலிங்கம்   முனைவர் மு.இளங்கோவன் muelangovan@gmail.com   இந்த முறை திருப்பூர் சென்றிருந்தபொழுது குடந்தை ப. சுந்தரேசனாரின் சமய ஈடுபாட்டை, எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனுக்குத் தெரிவித்து, உரையாடிக்கொண்டிருந்தேன். ப. சு. ஆவணப்படத்திற்காக ஒரு புல்லாங்குழல் செய்யும் கலைஞரைத் தேடி,… Read more »