1. Home
  2. இலக்கியம்

Category: இஸ்லாமியக் கட்டுரைகள்

வீண் விவாதங்களை விட்டும்,பொய்யை விட்டும் இறைவன் நம்மை பாதுகாப்பானாக!

வீண் விவாதங்களை விட்டும்,பொய்யை விட்டும் இறைவன் நம்மை பாதுகாப்பானாக! எந்தவொரு விசயம் குறித்த விமர்சனங்கள் இறக்கை கட்டி பறக்கிறதோ?அது குறித்த உண்மையை நிலை நாட்டிட முபாஹலா என்னும் சத்தியம் அவசியமானதே! நபி ஈஸா(அலை)அவர்களும்,மரியம்(அலை)அவர்களும் அல்லாஹ்வின் அடியார்களே தவிர கடவுள்கள் அல்ல என்ற உண்மையை தெரிந்தும் அதை மறுத்து நபி(ஸல்)அவர்களுடன்…

இறையச்சம் மேலோங்கிட இதயத்தை குர்பானி கொடுப்போம்!

இறையச்சம் மேலோங்கிட இதயத்தை குர்பானி கொடுப்போம்! ஈதுல் அள்ஹா என்னும் தியாக திருநாளாம் பெருநாள் கொண்டாடும் எனது அன்பு மக்களே,நமது இஸ்லாமிய வரலாற்றின் மகத்தான நிகழ்வினை நினைவு கூறும் இந்நாளில் நபி இப்றாகீம்(அலை)அவர்களின் இறையச்ச தியாக உணர்வினை நம் இதயத்தில் ஏந்தி கொள்வோமாக. இவ்வுலக வாழ்வென்பது முற்றிலும் நம்மை…

பாகியாத் நிறுவனர் – நினைவலைகள் அரங்கம்

– மௌலவி, அ. முஹம்மது கான் பாகவி வே லூர் அல்பாகியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி 150 ஆண்டுகால வரலாற்றுக்குச் சொந்தமான பாரம்பரியமிக்க கல்வி நிலையம். இங்கு இஸ்லாமிய சமயக் கல்வி போதிக்கப்படுகிறது. வேலூர் மாநகரின் சின்னங்களில் ஒன்றாக விளங்கும் இக்கல்லூரியில் பயின்று வெளியேறிய ஆலிம்கள் (மார்க்க அறிஞர்கள்)…

சொர்க்கம் நோக்கிய பயணம்

க ல்வியைத் தேடிச் செல்வதன் மகிமை குறித்து நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடும்போது ஒரு நீண்டஹதீஸில் இப்படிச் சொன்னார்கள்: ومن سلك طريقا يلتمس فيه علما سهّل الله له به طريقا إلى الجيّة. கல்வியைத் தேடி ஒருவர் ஒரு பாதையில் நடந்தால், அதன்மூலம்அவருக்குச் சொர்க்கம் செல்லும் பாதையை அல்லாஹ்எளிதாக்குகின்றான். (முஸ்லிம் – 5231) இதிலிருந்து, கல்வி நோக்கிய பயணம், சொர்க்கம் நோக்கியபயணமாகும் என்று அறியமுடிகிறது. இதற்குக் காரணம் என்ன? இறைவேதத்தையும் இறைத்தூதரின்வழிமுறையையும் கற்றறிந்து, இறைவன் படைத்துள்ள இயற்கைச்செல்வங்களை நுணுகி ஆராயும்போது, அது மனிதனுக்குஇறையச்சத்தை ஊட்டும்; நற்பண்புகளை வளர்க்கும்; ஒழுக்கமிக்கஉயர் வாழ்க்கைக்கு வழிகாட்டும். அந்த வழியில் நடப்பவர் சொர்க்கத்தை அடைவார் என்பதில் என்னசந்தேகம் இருக்க முடியும்? சொல்லுங்கள்! என்ன நடக்கிறது? ஆனால், இன்று என்ன நடக்கிறது? உலக நடப்பைச் சற்று ஆழமாகநோக்கினால் ஒரு உண்மை வெளிச்சத்திற்கு வரும். ஆம்! இன்று உலகநாடுகளை ஆள்வது மன்னர்களோ பிரதமர்களோ அல்லர். அவர்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் மூன்று பிரதான சக்திகளேஅவர்களை இயக்கிவருகின்றன. 1. அறிவியல் (العلوم); 2. தொழில் நுட்பம்(تِقْنِيّة); 3. கார்ப்பரேட் கம்பெனிகள் (شركات متّحدة). இவை ஒவ்வொன்றிலும்நன்மைகள் இருந்தாலும் தீமைகளே அதிகம். பயன்படுத்தும் நோக்கம்,பயன்பாட்டு முறை ஆகியவற்றைப் பொறுத்தே பலனைத் தீர்மானிக்கமுடியும். அறிவியலை எடுத்துக்கொள்வோம். அறிவியல் என்றால் என்ன?நிரூபணத்தின் அடிப்படையிலும் பரிசோதனை முறைகளைக்கொண்டும் இயற்கை உட்பட உலகத்திலுள்ள அனைத்தின் அமைப்பு,இயக்கம் ஆகியவற்றை விளக்கும் அறிவுத் துறையே அறிவியல்.அல்லது விஞ்ஞானம் எனப்படுகிறது. அதாவது இறைவனின் படைப்புகளை, அவை படைக்கப்பட்டமுறையை, அதன் இயக்கத்தை இயக்க விதியை ஆராய்ந்துஅறிவதுதான் அறிவியல். படைப்புகளின் நுணுக்கங்களைஅறியும்போது படைப்பாளனின் பேராற்றல் மனிதனைவியக்கவைக்கும். அவனுடைய ஆணைகளுக்கு மாற்றமாக நடந்தால்,கடுமையாகத் தண்டித்துவிடுவான் என்ற அச்சம் பிறக்கும். அதுமனிதனைப் பக்குவப்படுத்தும்; புனிதனாக்கும். திருக்குர்ஆன் கூறும் அழகைப் பாருங்கள்: வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதிலும் இரவு, பகல்மாறிமாறி வருவதிலும் அறிவுடையோருக்குச் சான்றுகள் பல உள்ளன.அவர்கள் நின்ற நிலையிலும் அமர்ந்த நிலையிலும் ஒருக்களித்துப்படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைவுகூருவார்கள். -அதாவதுநின்று தொழுவார்கள்; முடியாவிட்டால் அமர்ந்து தொழுவார்கள்;அதற்கும் முடியாதபோது படுத்துக்கொண்டு தொழுவார்கள்- வானங்களும் பூமியும் படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். (இறுதியில் இவ்வாறு கூறுவார்கள்:) எங்கள் இறைவா! இவற்றை நீவீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; நரக வேதனையிலிருந்துஎங்களைக் காப்பாயாக!…

இளம் ஆலிம்களே! உங்களைத்தான்!

– அ. முஹம்மது கான் பாகவி   அ ரபி மத்ரஸாக்களின் மாணவக் கண்மணிகளே! குர்ஆனியகலைகள் நம் பார்வையில் ஐந்து என முந்தைய தொடரில்குறிப்பிட்டிருந்தோம். அதில் முதலாவது, திருக்குர்ஆனைத்திருத்தமாகவும், இராகமாகவும் ஓதக் கற்பிக்கின்ற ‘தஜ்வீத்’ எனும்கலையாகும் என்றும் விவரித்திருந்தோம். திருக்குர்ஆன் மனனப் பிரிவு அடுத்து இரண்டாவது, திருக்குர்ஆனைத் தவறோ தடுமாற்றமோ இல்லமால்மனனம் செய்கின்ற அற்புதமான கலை. பொதுவாக எல்லா முஸ்லிம்களும்குர்ஆனின் சில பகுதிகளையேனும் மனனம் செய்திருக்க வேண்டும்.அப்போதுதான், தொழுகைகளில் குர்ஆன் அத்தியாயங்களை (சூரா) ஓதி,முறையாகத் தொழுகையை நிறைவேற்ற இயலும். “குர்ஆனின் தோற்றுவாயான ‘அல்ஃபாத்திஹா’ எனும் முதல்அத்தியாயத்தை ஓதாதவருக்குத் தொழுகையே இல்லை” என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (புகாரீ – 756) அது மட்டுமன்றி, நபித்தோழர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள்கூறினார்கள்: இறைமறையில் ஒன்றுமே இல்லாத உள்ளம், குடியிருப்பவர் இல்லாதஇல்லம் போன்றது. அந்த இல்லம் சிதிலமடையும்; அந்த உள்ளமும்சிதிலமடையும். (தாரிமீ) இதன்றி, முழு குர்ஆனையும் முறையாக மனனம் செய்து, தொடர்ந்துஓதிவருபவர்களுக்குத் தனிச்சிறப்பு உண்டு. நபித்தோழர் அபூஉமாமா (ரலி)அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை (மனனமாக) ஓதிவாருங்கள்! இந்தப் பிரதிகள்தான்இருக் கின்றனவே! (பார்த்து ஓதிக்கொள்வோம்) என ஏமாந்துவிடவேண்டாம்! ஏனெனில், குர்ஆனை மனனம் செய்த இருதயத்தைஅல்லாஹ் நிச்சயமாக ஒருபோதும் வேதனை செய்யமாட்டான். (தாரிமீ) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை நன்கு மனனமிட்டுத் தங்குதடையின்றி ஓதுகின்றவர்,கண்ணியம் நிறைந்த தூதர்(களான வானவர்)களுடன் இருப்பார்.குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதை) சிரமத்துடன் திக்கித்திணறி ஓதிவருகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டு. (முஸ்லிம் – 1462) ஆக, திருக்குர்ஆனை மனனமிட்ட ஹாஃபிள்கள் வானவர்களுடன் இருக்கும்மரியாதையைப் பெறுகிறார்கள். மறுமையில் ஹாஃபிள்களுக்குக் கிடைக்கும்மாபெரும் தகுதியைப் பாருங்கள்; நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: குர்ஆனை மனனமிட்டவர் சொர்க்கத்தினுள் நுழையும்போது, “ஓதுங்கள்! (படித்தரங்களில்) ஏறிக்கொண்டே இருங்கள்” என்று கூறப்படும்.அவ்வாறே, அவரும் ஓதுவார். ஒவ்வொரு வசனத்திற்கும் ஒருபடித்தரத்தில் ஏறிக்கொண்டிருப்பார்; அவருக்கு மனனமாக உள்ள கடைசிவசனத்தை ஓதுகின்றவரை. (இப்னுமாஜா) மனனப் பிரிவில் இருக்கும் மாணவர்களே! அல்லாஹ்விடம் உங்களுக்குள்ளமரியாதையைப் பார்த்தீர்களா? நன்கு தஜ்வீதுடன் தடுமாற்றமின்றி,பிழையின்றி, மனனம் செய்யுங்கள். வசனங்களின் வரிசைக் கிரமம்மாறிவிடாமல், ஒரே சொல் மறுபடி வரும் இடத்தில் குழப்பமடைந்துவிடாமல்,உச்சரிப்பில் குளுறுபடி நேராமல், உருப்போடும்போதே மிகச் சரியாகவும்தரமாகவும் உள்ளத்தில் பதியச் செய்துவிடுங்கள். புனித ரமளானில் மட்டும் பயிற்சி எடுப்பது, மற்ற நாட்களில் தளர்ச்சிஅடைவது என்று இருந்துவிடாதீர்கள். ஏனெனில், மறப்பதில் குர்ஆனுக்கேமுதலிடம் என்றுதான் சொல்ல வேண்டும். நபி (ஸல்) அவர்கள்எச்சரிக்கிறார்கள்: குர்ஆனை (ஓதி அதை) கவனித்துவாருங்கள். ஏனெனில், என் உயிர்எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன் மீதாணையாக! கயிற்றில்கட்டி வைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தைவிட மிக வேகமாக குர்ஆன்(நினைவிலிருந்து) தப்பக்கூடியதாகும். (புகாரீ-5033) குர்ஆன் மொழிபெயர்ப்பு: திருக்குர்ஆன் கலைகளில் நாம் கற்க வேண்டிய மூன்றாவது கலை,திருக்குர்ஆனின் வசனங்களுக்கான பொருளை அறிவதாகும். குர்ஆனைப்பார்த்து ஓதவும் மனனம் செய்யவும் முடிந்த ஒருவருக்கு அதன் அர்த்தம்தெரியாது என்பது எவ்வளவு பெரிய இழப்பு! கையில் கருவூலத்தைவைத்துக்கொண்டு, அதை அனுபவிக்காமல் சுவைக்காமல் எடுத்தெடுத்துப்பார்த்துவிட்டுத் திரும்ப அதே இடத்தில் வைத்துப் பூட்டுகின்ற மனிதனுக்கும்உங்களுக்கும் என்ன வித்தியாசம்? இன்றெல்லாம், பொருள் அறிந்து குர்ஆனை ஓத வேண்டும் என்ற ஆர்வம்சாதாரண பொது மக்களுக்கே உருவாகியிருப்பதைப் பார்க்கிறோம். இதற்காகநடக்கும் சிறப்பு வகுப்புகளுக்கு வயதானவர்களும் இளைஞர்களும்படையெடுக்கிறார்கள். வாய்ப்பு இல்லாதவர்கள் மொழிபெயர்ப்புகளைவாசித்துத் தங்கள் அறியாமையை அகற்றிக்கொள்கிறார்கள். இன்னும் சிலர்,தொழுகைக்குப்பின் வாசிக்கப்படும் மொழிபெயர்ப்பைக் கேட்டுப்பயனடைந்துவருகிறார்கள். அப்படியிருக்க, மத்ரஸா மாணவர்கள் இதில் எவ்வளவு கவனம் செலுத்தவேண்டும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? பொருள் தெரியாமல் பொதிசுமப்பதற்கு நாமென்ன இஸ்ரவேலர்களா? திருக்குர்ஆனில், அதை அருளியவன் அறைகூவல் விடுக்கின்றான்:…

நிலத்தடி நீர்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 79. நிலத்தடி  நீர் மனித வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது, தண்ணீர். மனிதன் மட்டுமல்ல, நீர் இல்லாமல் எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது. நாம் பல நாட்கள் உணவு உண்ணாமல் உயிர் வாழ முடியும். ஆனால் ஒரே ஒருநாள் முழுவதும் தண்ணீர் குடிக்காவிட்டால்…

நபிகளார் சொன்ன கண்ணாடிப் பாடம்

நபிகளார் சொன்ன கண்ணாடிப் பாடம் அந்தப் பெரியவரின் கையில் ஒரு கண்ணாடி. அடிக்கடி அதைப் பார்ப்பார். பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவார். பக்கத்து வீட்டு இளைஞனுக்குக் குறுகுறுப்பு…! ‘அந்தக் கண்ணாடியில் அப்படி என்னதான் இருக்கிறது? பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே!. ஒருவேளை மாயா ஜாலக் கண்ணாடியோ?’…

இஸ்லாத்தின் தனிச் சிறப்பு

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 84. இஸ்லாத்தின்  தனிச் சிறப்பு உலகில் உள்ள பல மதங்கள் அதை நிறுவியவரின் பெயரைத் தாங்கி செயல்படுகின்றன. இன்னும் சில மதங்களுக்கு அது எந்தச் சமுதாயத்தில் தோன்றியதோ அந்தச் சமுதாயத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால் இஸ்லாம் மார்க்கம் ஒரு குறிப்பிட்ட மனிதருடனோ அல்லது…

மனிதனும் உணவும்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 81. மனிதனும்  உணவும் உலகில் உள்ள பல்வேறு உயிரினங்கள் மாமிசம் உண்ணும் வகையைச் சார்ந்தது. இவை ‘மாமிச உண்ணிகள்’ என்று அழைக்கப்படுகின்றன. இன்னும் சில உயிரினங்கள் தாவர வகைகளை உண்ணக்கூடியவை. இவை ‘தாவர உண்ணிகள்’ எனப்படும். மாமிச உண்ணிகள் தாவரத்தை உண்பதில்லை. தாவர…

ஒட்டகம்- ஓர் ஒப்பற்ற அதிசயம்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 78. ஒட்டகம்- ஓர் ஒப்பற்ற அதிசயம் ஒட்டகம் என்பது பொதுவாக பாலைவனங்களில் வாழும் தாவரம் உண்ணும் வகையைச் சேர்ந்த, பாலூட்டக்கூடிய, அசைபோடும் பெருவிலங்கு ஆகும். இவை 30 ஆண்டுகள் முதல் 50 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. சராசரியாக 250 கிலோ முதல்…