தீரன் சின்னமலை நினைவு தினம்

Vinkmag ad

சூலை – 31. தீரன் சின்னமலை நினைவு தினம்

கொங்குநாட்டு சீமையில் கொடிக்கட்டிப் பறந்திட்ட
கோட்டையில் அரசனாம் கொள்கையின் தீர்த்தகிரி!
பொங்கிடும் கடலென போர்களத்தில் சுழன்றிட
புறமுதுகை காட்டியே புரண்டது வெள்ளைநரி!
தங்கிட வந்தவன் தாய்நாட்டை தனதாக்க
தரங்கெட்ட வெள்ளையனுக்கு தடவினான் முகக்கரி!
சிங்கத்தின் குகைக்குள்ளே செருக்கோடு சென்றிடும்
சிறுமதி வெள்ளையர்க்கு சிதைந்தது முகவரி!

இந்திய விடுதலை எண்ணத்தில் கொண்டிட
இரவுபகல் பாராது எழுச்சியினை வென்றது!
சிந்திய குருதியும் சிதைந்திட்ட உயிர்களும்
சிறைக்கதவு முழுமையாய் சரித்திரம் சொல்லுது!
வந்திட்ட சுதந்திரம் வரம்பெற்று வரவில்லை
வடித்திட்ட கண்ணீரால் வலியினைக் கொண்டது!
சிந்தனை செய்திடு சிறந்திடும் தாய்நாடு
சிறாரின் மனதிலும் சிறப்புற பதிவிடு!

ஓடாநிலை தீர்த்தகிரி ஓடவைக்க வெள்ளையரை
உரிமையோடு குரலினை உரக்கவே எழுப்பினான்!
வாடாத தமிழகத்தின் வரிவசூல் செல்வதை
வீரமிகு சின்னமலை வெகுண்டு எதிர்த்திட்டான்!
நாடாளும் வெள்ளையர் நாள்தோறும் தீரனிடம்
நைந்திட போரினிலே நடுங்கியே தோல்வியுற்றான்!
கூடாத எண்ணத்தால் கொலைவெறி வெள்ளையன்
சங்ககிரி கோட்டையில் சத்தியத்தை தூக்கிலிட்டான்!

-ப.கண்ணன்சேகர். திமிரி. பேச : 9894976159.

News

Read Previous

“போதும் புல்லாங்குழலே…”

Read Next

மரம் நடுவோம் பாதுகாப்போம்

Leave a Reply

Your email address will not be published.