அபாயசங்கு!

Vinkmag ad

அபாயசங்கு!

இந்தியா!

பல வளங்களால் நலங்களால்

வைத்து உருவாக்கிய எழிற்கூடம்! – அதை

நூற்றாண்டுகளாக தன் இயந்திரக்களுக்கு

எருவாக்கியது தொழிற்கூடம்!

இன்னும் பழுதுபடாமல் இயங்கிகொண்டேயிருக்கும்…

கார்,அனு,மின் போன்ற தொழிற்சாலைகள்

அதுவரை அழுதுபுலம்பிக் கொண்டேயிருக்கும்…

நீர்,வளி, மண் போன்ற இயற்கை வளங்கள்!

ஆலைகள் நாட்டின் வளர்ச்சிக்கு

பாதைகள் போட்டுத் தரலாம்…

காடுகளை தன் கடவாய் பற்களால்

கடித்து கூழாக்கி வாழும் உயிர்களுக்கு

சவப்பெட்டி செய்யாலாமா ?

நெல்விளைந்த வயல்வெளி

கல்வளர்ந்த சிலிகான்வெளியாகிபோனது!

நீர்சாலைகள் போட்டு நடந்த நதிகள்

குளிர்பான ஆலைகளின் வரவால்

தார்சாலைகளாய் தன்னுறு சிதைந்தது!

ஆலைகளின் புகையால்

சுற்றுச்சூழளுக்கு புற்றுநோய் வந்தது!

நாட்டின் தலை முதல் கால் வரை

நொப்பும் நுரையுமாக ஓடி வந்த நதிகளின்

தாகம் தீர்க்கக்கூட ஒரு சொட்டு நீர் இல்லை!

அனைத்துக்கும் கேடு!

விளைத்தது கட்டுப்பாடற்ற

அந்நிய முதலீடு!

ஒவ்வொரு தொழிற்சாலையிலும்

ஊதாப்படும் சங்கு!

மனிதகுலத்தை மாய்க்கப்போகும்

அபாய அறிவிப்பு அல்லவா!

-கவிஞர்.அப்துல் வதூத்

துபாய்

News

Read Previous

நீரழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டவணை

Read Next

வில்வப்பழம்

Leave a Reply

Your email address will not be published.