காத்தாகுளம் சாலையை சீரமைக்க கோரிக்கை

Vinkmag ad

முதுகுளத்தூர் அருகே காத்தாகுளம் வழியாக ஓரிவயல் செல்லக்கூடிய தார் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், அச்சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  முதுகுளத்தூரில் இருந்து காத்தாகுளம் வழியாக எம்.சாலை, சடையனேரி, எம்.சவேரியார்பட்டணம், சமுத்திரம், மாரந்தை, ஓரிவயல், கடலாடி ஆகிய ஊர்களுக்குச் செல்வதற்கு அரசு பேருந்து இயங்கி வருகிறது. இந்நிலையில், முதுகுளத்தூரில் இருந்து காத்தாகுளம் வழியாக ஓரிவயல் செல்லும் தார் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, தார் சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News

Read Previous

தட்பவெப்பம்

Read Next

ரமலான் மாதத்தின் சிறப்பு

Leave a Reply

Your email address will not be published.