மாபெரும் சகாப்தம் முகமது அலி

Vinkmag ad
மாபெரும் சகாப்தம் முகமது அலி 
இரா சத்திகண்ணன்
——————————————
அடர்ந்த காட்டின் 
விண்ணைப் பிளக்கும் 
உறுமல் சத்தம்
மௌனமாயிற்று 
 
காண்போரையும்
குதித்து 
கிளர்ச்சி செய்யும் 
ஆட்டம் 
அஸ்தமனமானது 
 
தைரியத்தின் 
மொத்த உருவமான 
தீவட்டி வெளிச்சம்
மங்கியது 
 
கைகள் 
நடுங்கினும் 
‘ஒலிம்பிக்’ சுடர் 
கையில் ஏந்திய
கவிதை
காற்றானது 
 
குத்துச் சண்டை 
ஆகாயத்தில்
பறக்கும்
வண்ணத்துப்பூச்சி 
வானவில்லானது 
 
சாதனையாளர்கள் 
வந்துபோவதுண்டு 
இங்கு
மாபெரும் சகாப்தம்
வீரத்தை
விதைத்துச் சென்றது!

News

Read Previous

கை கழுவும் தினம்

Read Next

உலக இரத்த தான தினக் கவிதை

Leave a Reply

Your email address will not be published.