பிறந்த பயன்

Vinkmag ad
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாபின் 
இறுதி வரிகளைப் படித்ததன் தாக்கம் 

போதாது போதாதென்று

          பொழுதெல்லாம் பாடுபட்டு
ஆதரவு அதுவே என்றெண்ணி
          அனைத்தையும் புறந்தள்ளி
காதலுடன் பணத்தைக்
          கணக்கின்றி சேர்த்து
ஈதலுக்கும் மனமின்றி
          இன்பமாய் செலவுசெய்து
போதலுக்கும் மனமின்றி
         புதையலென  சேர்த்து
பூதமெனக்காத்து  வாழ்ந்தால்   ,
         புண்ணியமென்ன  மானிடரே
சாதலுக்கு நாள் குறித்து
         சத்தம் எதுவுமின்றி -எம
தூதர்கள் வந்து  , தூக்கிச்செல்கையில்
        துணிகூட   உருவிவிட்டே  ,
 பூதவுடல்  எரிக்கின்றார் (அ )
        பூமியில் புதைக்கின்றார் .
காதற்ற ஊசியும்
       கடைவழிக்கு வாராதென்ற
போதனையை  உமது
       புத்தியில் நிறுத்திடுவீர் .
பெற்ற பிள்ளைகட்கும்  பிற
       சுற்றத்தாருக்கும்  உதவி
உற்ற பசியில் வாடும்
       மற்றவர்க்கும் உதவி
சற்றே நாம்  வாழுகின்ற
       சமூகத்திற்கும் உதவி
மற்றவர்கள் போற்ற
       மனிதனாய் வாழ்ந்திடுவீர் .
இறந்த பின்னும்  இருப்போரின்
       இதயத்தில் வாழ்தலொன்றே
பிறந்த பயன் என்னும்
       பேருண்மை உணர்ந்திடுவீர்.
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
23.05.2016

News

Read Previous

பப்பாளி விதைகளைச் சாப்பிட்டால் என்னவாகும் தெரியுமா?

Read Next

10ஆம் வகுப்பு அரசு பொதுதேர்வின் முடிவு

Leave a Reply

Your email address will not be published.