சதகாவின் பலன்கள்

Vinkmag ad

பிஸ்மில்லாஹ்
> சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை:
> (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது)
> இந்த சம்பவம் ஒரு சவூதி இளைஞனுடையது. வாழ்க்கையில் அவனுக்கு நிம்மதி இல்லை. அவனது சம்பளம் வெறும் நான்காயிரம் ரியால் மட்டுமே! கல்யாணமானவனாக இருந்ததால் வீட்டுச் செலவு சம்பளத்தை விட அதிகமாகவே இருந்தது.
> மாத முடியும் முன்பே சம்பளம் முழுவதும் செலவாகி கடன் வாங்கும் நிலையில் இருப்பான்.
> இப்படியே கடன் வாங்கி, வாங்கி கடன் என்னும் புதைமணலில் சிக்கித் தவித்தான். அவன் தனது வாழ்க்கை இப்படியாகத் தான் செல்லும் என முடிவுச் செய்து விட்டான்.
> அவனது மனைவியும் தங்களது பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டிருந்தும் கடன் சுமையால் மூச்சு திணறிக் கொண்டிருந்தனர்.
> ஒரு நாள் அவன் தனது நண்பர்களிடத்தில் இருக்கும் போது ஆலோசனை கூறத்தக்க நண்பரும் இருந்தார். இந்த நண்பரின் ஆலோசனைகளுக்கு மரியாதை கொடுப்பான்.
> பேச்சுவாக்கில் தனது பொருளாதாரக் கஷ்டத்தை தெரிவித்தான். கதையைக் கேட்டு சம்பளப் பணத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையினை சதகாவாக கொடுக்கும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ளும்படி ஆலோசனை வழங்கினார்.
> சவூதி இளைஞன் வியப்பும் திகைப்பும் மேலிட “ஐயா, வீட்டுச் செலவிற்கே சம்பளப் பணம் பற்றாமல் கடன் வாங்க வேண்டிய நிலையில் இருக்க சதாகா கொடுப்பதற்கு யோசனை கூறுகிறீர்களே?” என வினவினான்.
> பிறகு வீட்டிற்கு வந்து மனைவியிடம் அவரது ஆலோசனையைப் பற்றி கூற, அவளோ இதனையும் பரீட்ச்சித்து பார்க்கலாமே? இறைவன் ரிஜ்க்கின் கதவினை திறந்துவிட வாய்ப்பு ஏற்படும் என்றாள்.
> மாதா மாதம் 4 ஆயிரம் ரியாலிலிருந்து 30 ரியால் சதகாவக வழங்க உறுதிபூண்டு மாதக் கடைசியில் சதகா வழங்க ஆரம்பித்தான்.
> சுப்ஹானல்லாஹ்!
> அவனது நிலைமையே மாறிவிட்டது என்பதனை சத்தியமிட்டு கூறுகிறேன்.
> எப்போதும் பொருளாதார நெருக்கடியும் கவலையும் எங்கே? தற்போதைய நிம்மதியான நிலைமை எங்கே? சின்னஞ்சிறு பொறுத்துக் கொள்ளக்கூடிய கடன் சுமையைத் தவிர. விடுதலை கிடைத்த நிம்மதியோடு வாழ்க்கையும் பூங்காவனமாக உணர்ந்தான்.
> சில மாதங்களுக்குப் பின் தனது குடும்ப வாழ்க்கையை முறைபடுத்தி, சம்பளப் பணத்தினை வகைப்படுத்தி முறையாக செலவு செய்ய, இதில் முன் எப்போதும் கிடைக்காத பரக்கத் கிடைக்கத் தொடங்கியது!ا
> இந்த வருமானத்தில் நான் எனது கடன் சுமையிலிருந்து வெகு விரைவில் மீண்டுவிடுவேன் என தெரிந்துக் கொண்டேன்.
> அல்லாஹுத்தாலா எனது வருமானத்திற்கான மற்றொரு கதவை திறக்கச் செய்தான்.
> எனது நண்பர் ஒருவரின் தனது சொத்து பரிவர்த்தனை ரியல் எஸ்டேட் தொழிலில் நானும் பங்கேற்றேன்.
> அவருக்கு வாடிக்கையாளர்களை ஏற்படுத்தி தருவேன். அதனால் அவருக்குக் கிடைக்கும் லாபத்தில் கணிசமான ஒரு தொகை என் பங்காக கிடைக்கும்.
> அல்ஹம்துலில்லாஹ்! எனக்கு கிடைக்கும் வாடிக்கையாளர் மூலமாக வேறு வாடிக்கையாளர்கள் களும் கிடைத்தனர்.
> இங்கும் அதேபோல் கிடைக்கும் வருமானத்தில் சதகாவிற்காக ஒரு குறிப்பிட்ட தொகையினை ஒதுக்குவேன்.
> இறைவன் மீது சத்தியமாக சதகாவின் பலன் என்னவென்பதை யாரும் அறியமாட்டார்கள், அதனை செயல்படுத்தி பார்த்தவர்களைத் தவிர!
> சதகா செய்யுங்கள், ஸபர் என்னும் பொறுமையை கடைபிடியுங்கள், அல்லாஹ்வின் கிருபையும் அருளும் மழையாக பொழிவதை கண்கூடாக பார்ப்பீர்கள்!
> குறிப்பு:
> 1. நீங்கள் முஸ்லீம் ஒருவருக்கு சதகா செய்ய ஆலோசனை கொடுத்து அதனை அவர் செயற்படுத்தினால் சதகா செய்வதால் அவருக்கு கிடைக்கும் புண்ணியமே ஆலோசனை கூறியவருக்கும் கிடைக்கும். அதனால் சதகா செய்தவரின் புண்ணியம் குறையாது.
> யோசியுங்கள்!!!
> நீங்கள் இவ்வுலகை விட்டு சென்றுவிட்டாலும் உங்கள் ஆலோசனையை செயல்படுத்தி சதகா கொடுப்பவர்கள் இருந்துக் கொண்டிருப்பார்கள். இதனால் உங்களுக்கு புண்ணியம் கிடைத்துக் கொண்டேயிருக்கும்!
> 2. இதே போல் நீங்களும் இச்செய்தியினை பரப்பச் செய்து அதனால் யாரேனும் சதகா செய்வதை பழக்கமாக்கிக் கொண்டால் உங்களுக்கும் சதகா செய்பவருக்கு கிடைக்கும் அளவு புண்ணியம் கிடைக்கும்.
> (இந்த செய்தி அறிந்து நான் சதகா கொடுப்பதை பழக்கமாக்கிக் கொண்டதால், சத்தியமாக கூறுகிறேன்: எனக்கு மன நிம்மதியும் ஆத்ம திருப்தியும் கிடைத்தை உணருகிறேன். – மொழி பெயர்ப்பாளர்)
> நண்பரே!
> நீங்கள் மாணவராக இருப்பின் உங்களுக்கு கிடைக்கும் அரசு ஊக்கத்தொகையாகவோ கைச்செலவுத்தொகையாகவோ இருந்தாலும் அதிலும் சிறு தொகையினை சதகா கொடுக்கச் செய்யுங்கள்.ر
> சதகா பெறுபவரின் கையை அடைவதற்கு முன் அல்லாவின் கையை அடைந்தால் நிச்சயமாக பெறுபவருக்கு கிடைக்கும் சந்தோஷத்தைவிட கொடுப்பவருக்கு கிடைக்கும் சந்தோஷம் அதிகமாக இருக்கும்.
> என்ன தாங்கள் சதகாவின் பலன்களை அறிவீர்களா?
> முக்கியமாக 17,18,19 எண் விஷயங்களை கவனமாக படியுங்கள்.
> சதகா கொடுப்பவர்களும், அதற்கு காரணமாக இருப்பவர்களும் கேளுங்கள்:
> 1. சதகா சுவர்க்க வாயில்களில் ஒன்றாகும்.
> 2. சதகா நற்செயல்களில் முக்கியமானதாகும். அன்னதானம் அவற்றிலும் முக்கியமானது.
> 3. சதகா கியாமத்து நாள
> ில் நிழல் கொடுக்கும். சதகா கொடுப்பவர்களுக்கு நரக நெருப்பிலிருந்து காக்கும்.
> 4. சதகா இறை கோபத்தை தணிக்கும், கப்ரு வெப்பத்தை தணிக்க உதவிடும்.
> 5. சதகா மய்யத்திற்கு சிறந்த அன்பளிப்பும், லாபகரமானதும் ஆகும். அல்லாஹ் இதற்கான புண்ணியத்தை அதிகரித்துக் கொண்டேயிருப்பான்.
> 6. சதகா அழுக்கு நீக்கியாகும். மனதை சுத்தப்படுத்துவதால் புண்ணியம் அதிகரிக்கும்.
> 7. சதகா, அதை செய்பவர்களின் முகத்திற்கு கியாமத்து நாளில் பிரகாசத்தையும் தேஜஸையும் கொடுக்கும்.
> 8. சதகா கியாமத் நாளின் பயங்கரத்திலிருந்து காப்பாற்றும், நடந்தவைகளைப் பற்றி பச்சாதாபப்படச் செய்யாது.
> 9. சதகா பாவ மன்னிப்பாகவும், தவறுகளுக்கு பரிகாரமாகவும் இருக்கிறது.
> 10. சதகா நல்முடிவிற்கு சுபச்செய்தியாகவும், மலக்குகள் துவாவிற்கு காரணமாக இருக்கிறது.
> 11. சதகா கொடுப்பவர் சிறந்த மனிதர்களில் சேர்ந்தவராவார், இதற்கு காரணமானவர்களுக்கும் புண்ணியம் சேரும்.
> 12. சதகா கொடுப்பவருக்கு பெரிய வெகுமதிக்கு வாக்குறுதியாகும்.
> 13. மற்றவர்களுக்காக செலவழிப்பவர் இறையச்சமுள்ளவர்களின் வரிசையில் சேர்க்கப்படுவார், சதகா கொடுப்பவரை இறைவனின் படைப்புகள் விரும்பும்.
> 14. சதகா கொடுப்பது கருணை உள்ளத்திற்கும் வள்ளல் தன்மைக்கும் அடையாளமாகும்.
> 15. சதகா துவா ஏற்கப்படுவதற்கவும் கஷ்டங்களிலிருந்து விடுபடுவதற்கான வழியாகும்.
> 16. சதகா முஸீபத் மற்றும் கஷ்டங்களை விலக்குகிறது. உலகில் தவறுகளின் 70 கதவுகள் அடைக்கப்படுகின்றன.
> 17. சதகா ஆயுள் மற்றும் சொத்துக்கள் அதிகரிப்பிற்கும் காரணமாகும். ரிஜ்கும் வெற்றியும் கிடைக்கச் செய்யும்.
> 18. சதகா மருத்துவமும், மருந்தும், ஷஃபாவுமாகும்.
> 19. சதகா நெருப்பில் எரிவதிலிருந்தும், நீரில் மூழ்கி விடுவதிலிருந்தும், திருட்டு மற்றும் துர்மரணத்திலிருந்தும் தடுக்கும்.
> 20. சதகா விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு செய்தாலும் கூட புண்ணியம் கிடைக்கும்.
> இதை புரிந்து அதிகமாக share செய்யுங்கள்.
> கடைசி வார்த்தை:
> சதகாவின் நிய்யத்தில் இத்தகவலை பரப்புவது [truncated by நபிகள் நாயகம் (ஸல்)

News

Read Previous

மலரும் நல்லாட்சிக்கு மனமுவந்த வாழ்த்துக்கள்!

Read Next

சிறக்க வாழ்ந்திட !

Leave a Reply

Your email address will not be published.