காத்திருக்கும் வரை

Vinkmag ad

* காத்திருக்கும் வரை
நம் பெயர்
காற்றென்றே
இருக்கட்டும்..

புறப்பட்டு விட்டால்
புயலென்று
புரிய வைப்போம்…!

* வெற்றி உன்னை
அடுத்தவர்களுக்கெல்லாம்
அறிமுகப்படுத்தும்..

தோல்வியோ
உன்னையே உனக்குள்
ஒரு முகப்படுத்தும்…!

* நிரந்தரமான வெற்றிக்காக
உன்னை தழுவிக் கொள்ளும்
தற்காலிகத் தோல்விகளை
நீ தாங்கிக் கொள்..!

* கடந்த கால செருப்புகளைக்
கழற்றி எறிவோம்..

எதிர்காலத்திற்கான
சிறகுகளைச் சேகரிப்போம்..!

மு மேத்தா

News

Read Previous

வஃபாத்து செய்தி

Read Next

தேர்தல்

Leave a Reply

Your email address will not be published.