உலக நடன தினக் கவிதை

Vinkmag ad

ஏப்ரல்-29. உலக நடன தினக் கவிதை

இசைக்கு அசையும் இனிய கலையென
இறைவன் காட்டிய எழில்மிகு நடனம்!
அசைவில் சொல்லும் அபிநய காட்சி
ஆடிடும் போது அழகிய வதனம்!
திசைகள் தோறும் நாட்டிய கலைகள்
தமிழர் கூத்தை தந்திடும் புவனம்!
தசைகள் முதலாய் தருவது பயிற்சி
தனக்குத் தானே தியானிக்கும் மனமும்!

கண்ணில் அசைவை காட்டிடும் ஜாலம்
காண்போர் மனதை கவர்ந்திடும் வென்று!
விண்ணில் வில்லென வளைந்திட நடனம்
வியக்க செய்யும் விருந்தென ஒன்று!
மண்ணில் உயிர்களும் மகிழ்ந்தே ஆடிட
மலரும் நாட்டியம் மயக்கிடும் நின்று!
பண்ணிசை மீட்டிட பாதங்கள் ஆடிட
பண்பாட்டுக் கோலம் பார்த்திட நன்று!

மணிப்பூரி கதகளி மோகினி ஆட்டம்
மரபினை காட்டும் குச்சுப்பிடி நடனம்!
தனிதன்மை கொண்ட தமிழர் பரதம்
தன்னிக ரில்லா இந்தியக் கலைகள்!
புனிதம் நிறைந்த புண்ணிய நடனம்
பூத்திட செய்தாள் பூமகள் தாசி!
கனியின் சுவையென கருத்தில் வைத்து
கலைமிகு நடனம் காத்திட நேசி!

-ப.கண்ணன்சேகர், திமிரி.
பேச 9894976159.

News

Read Previous

தமிழ் ஆய்விதழ்கள் பட்டியல்

Read Next

இயக்குனர் ராமுடன் கலந்துரையாடல்

Leave a Reply

Your email address will not be published.