உலக சித்தர்கள் தினம்

Vinkmag ad

ஏப்ரல் – 14 உலக சித்தர்கள் தினம் பற்றிய கவிதை

எட்டுவகை யோகங்கள் எட்டும்நிலை கண்டவன்
எட்டுவான் சித்தனாய் இவ்வுலக மண்ணிலே!
அட்டாங்க யோகமது அடைந்திட முழுமையாய்
அவனியே போற்றிட அறிந்திடுவான் தன்னிலே!
பட்டாங்கி பொதுவாழ்வில் படியாமல் தனக்கென
பாதையினை வகுத்திட பறந்திடுவான் விண்ணிலே!
மட்டான வாழ்விலே மறையாத சித்தனே
மாபெரும் நெறியினை மலர்த்துவான் கண்ணிலே!

அணுவாக மலையாக ஆற்றல்மிகு காற்றாக
ஆண்டிடும் சித்தனால் அனைத்துமே வசமாகும்
மானுட தேகத்தை மாற்றிவைக்கும் கூடாக்கி
மாபெரும் தேவரை மயக்குவதும் நெசமாகும்
காணுகிற மெய்யறிவை கருத்தாக சொல்லியது
காலத்தால் நிஜவாழ்வு கண்டிட உரமாகும்!
பேணுகிற உடலிலே பேரின்ப இறையுணர்வு
பெற்றிட சித்தன்கூற்று பேரின்ப வரமாகும்!

இலக்கியம் இரசவாதம் இயற்கையின் வைத்தியம்
இணையில்லா சாத்திரம் எல்லாமே செய்தவன்!
நலவாழ்வு சோதிடம் நாடியின் வாழ்வியல்
நயமுடன் சித்தனே நமக்கென உரைத்தவன்!
உலவிடும் மனதினை ஒருமுகப் படுத்தியே
உயரிய பரவசம் ஒளிரவே வாழ்பவன்!
மூலத்தின் ஆதாரம் மூலிகை மருந்தென
மூச்சினை தொடரவே முறையாக வைத்தவன்!

-ப.கண்ணன்சேகர், திமிரி
செல் – 9894976159.


P.Kannansekar,
13,Varada reddi street,
TIMIRI-632512,
Vellore dt, Tamil nadu, INDIA
cell:9698890108.

News

Read Previous

சித்திரை பிறப்பு சிறப்பு கவிதை

Read Next

‘துன்முகியே’ மலர்க!

Leave a Reply

Your email address will not be published.