முட்டாள்கள் தினக் கவிதை

Vinkmag ad

ஏப்ரல்-01,  முட்டாள்கள் தினக் கவிதை

எல்லோரும் ஒருநாளில் எங்கேயோ ஏமாற்றம்
ஏறும்வட்டி கட்டியே ஏழைகளும் ஏமாற்றம்
கொல்லும்நோய் வந்ததாலே கோடீஸ்வரன் ஏமாற்றம்
கூடினாலும் குறைசொல்லும் கூட்டணியும் ஏமாற்றம்
வெல்லுகிற வீரனுக்கும் வயோதிகம் ஏமாற்றம்
வந்தபின்னே தவிக்கின்ற வறுமையும் ஏமாற்றம்
சொல்லுகிற வார்த்தைகள் சுட்டெரிக்க ஏமாற்றம்
சுதந்திரத்தை தனதெனவே சொந்தமாக்க ஏமாற்றம்

அதிகப்படி இலவசமோ அரசியலில் ஏமாற்றம்
ஆட்சியாளர் வாக்குறுதி அன்றாட ஏமாற்றம்
துதிப்பாடும் கூட்டங்கள் தொடர்வதும் ஏமாற்றம்
துளிர்த்திடும் லஞ்சஊழல் துறைதோறும் ஏமாற்றம்
முதியோரை காக்காமல் முடக்குவதும் ஏமாற்றம்
முதலிலா தரகுத்தொழில் மொத்தமாய் ஏமாற்றம்
விதியெனவே நினைப்பது வாழ்க்கையே ஏமாற்றம்
விதைக்காமல் உழுவதால் விளைவதோ ஏமாற்றம்

நதியிணைப்பு செய்யாமை நாட்டிற்கே ஏமாற்றம்
நாட்டுக்குள் பிரிவினையால் நல்லிணக்க ஏமாற்றம்
கதியற்ற தமிழருக்கு கண்ணீரே ஏமாற்றம்
காத்திட மனமில்லா கட்சிகளின் ஏமாற்றம்
நிதிக்கேட்டு தொண்டர்களை நெருக்குவதும் ஏமாற்றம்
நாளுமொரு கட்சியென நடைமுறையும் ஏமாற்றம்
மிதித்திடும் வார்த்தையால் மனங்களும் ஏமாற்றம்
மகிழ்ந்திடும் முட்டாள்தினம் மடமையின் ஏமாற்றம்.

-கவிஞர் ப.கண்ணன்சேகர் 9894976159.

News

Read Previous

பாஸ்போர்ட் வாங்கலாம் வாங்க!

Read Next

துளசி

Leave a Reply

Your email address will not be published.