காத்திருக்கிறது ஆதரவு போர்க்களம்

Vinkmag ad
பிப்ரவரி 14

 
காத்திருக்கிறது ஆதரவு போர்க்களம் 
 
எஸ் வி வேணுகோபாலன் 
 
ஆதி உணர்வின் அமுதநதி 
கரைகளைக் கடந்து பாய்கிறது –
எதிர்ப்படும் பாறைகளில் 
முட்டி மோதி சதிராட்டம் போட்டுத் 
தொடர்கிறது வேகத்தை –
சில போது  
பாறைகளை இன்ப வெள்ளத்தில் 
மூழ்கடிக்கவும் செய்கிறது காட்டாறு.
நீர்க்கோடுகள் பளிச்சென்று
கோலங்களாக வெளிப்படுவதுபோலும்
தொலையாத இருளில்
வெடுக்கென்று கண்சிமிட்டும் விண்மீன் போலும்
திடுக்கிட வைத்தும் திணறடித்தும் கூடப்
பூக்கிறது காதல் பூ.
காதல்
காவல்காரர்களை விஞ்சும்
கலகக்காரர்களை உருவாக்குகிறது –
வெளிச்சத்தைக் கை கொண்டு மூடத் துடிப்போரின்
புறங்கையில் சிவப்பாகக் கசிகிறது
காதலின் இரத்தம்.
உள்ளத்து நீர்ப்பரப்பில்
பிரதிபலிக்கும் ஆசைமுகம்
சாதியம் உலுக்கி எடுக்கையில் 
ததும்புகிறது விழி நீரின் வழியெங்கும்.
கம்பியில்லாத் தந்திக்கும் பல்லாயிரம் ஆண்டு 
மூத்த தொடர்பு மொழிக்குத்  
தப்பிக்கவும் தடை மீறவும் 
நெஞ்சுரம் ஊட்டி 
வழியனுப்பி வைக்கிறது இலக்கியம் 
குறுக்கிட்டுக் கூறுபோட அலையும் 
வெறித்தனங்களுக்கு எதிராகக் காத்திருக்கிறது 
காதல் ஆதரவு போர்க்களம்.
 
***********
நன்றி: தீக்கதிர்: பிப் 14, 2016 

News

Read Previous

துப்பாக்கி

Read Next

இரத்த அழுத்தத்தை சீரகமே சரி பண்ணிடுமாம்! கை மருந்துகள்!!

Leave a Reply

Your email address will not be published.