பிப்-14 உலக வானொலி தின சிறப்புக் கவிதை

Vinkmag ad

பிப்-14 உலக வானொலி தின சிறப்புக் கவிதை

காற்றில் மிதக்கும்  ஒலியாக
கருத்தாய் மலர்ந்து பெட்டியிலே
களிக்க விருந்தென வந்திடும்!

வந்திடும் நிகழ்ச்சி சுவையாக
வையம் முழுக்க உலவிடவே
வண்ண சித்திரம் ஒலித்திடும் !

ஒலித்திடும் வானொலி செய்தியினில்
உலக நிலவரம் உள்ளடக்கி
ஊரும் பேரும் தந்திடும்!

தந்திடும் தகவல் நலமென்றே
தவறாது மக்கள் கேட்டிடும்
தன்னிக ரில்லா ஊடகம்!

ஊடக வரிசையில் வானொலிதான்
உயர்தே நிற்கும் எப்போதும்
உயர்வான் கற்று பாமரன்ய்ம்!

பாமரனும் பயிலும் பள்ளியென
பாதைப் போட்ட வானொலியே
படிக்க சொல்லும் வீடுதோறும்!

வீடுதோறும் ஒலி வீசும்
வீணே நேரம் கழிக்காது
வேலை செய்தே கேட்டிடு !

கேட்டிடு என்றும் வானொலியை
கேளிக்கை ஆபாசம் ஒளியினிலே
ஒழித்திட கேட்டிடு வானொலியை !

-ப.கண்ணன்சேகர்,

News

Read Previous

வாழ்வின் மகத்துவம்

Read Next

நம் உடலில் கேன்சர் வர காரணமாக நாம் உண்ணும் தினசரி உணவுகள்.

Leave a Reply

Your email address will not be published.