இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி நடத்தும் “சங்கமிப்போம்” மாபெரும் சங்கம விழா!

Vinkmag ad
துபையில் பிப். 12ல் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி நடத்தும் “சங்கமிப்போம்” மாபெரும் சங்கம விழா!
அமீரகத்தில் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் சார்பாக “சங்கமிப்போம்”  என்ற மாபெரும் சங்கம விழா வருகின்ற 12/02/2016 வெள்ளிக்கிழமை அன்று துபை அல் கிஸைஸ் கிரசண்ட் பள்ளியில் இரவு 7 மணிக்கு நடைபெற இருக்கிறது.
நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள், திறமைசாலிகள், சமூக சேவகர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. அத்தோடு அமீரகத்திற்கு வருகை புரிந்திருக்கும் சோஷியல் டெமோக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் (SDPI) தேசிய நிர்வாகிகளுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அமீரக வாழ் இந்தியர்களின் ஒன்றுகூடல் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளும் இவ்விழாவில் நடைபெற இருக்கிறது.
அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த இந்திய மக்கள் சங்கமிக்கும் இவ்விழாவில் தமிழக மக்களையும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறது இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி.

News

Read Previous

தொழுகையில் மிளிரும் சமத்துவம்

Read Next

சீனாவின் பாரம்பரிய விழா

Leave a Reply

Your email address will not be published.