காதலர் தினம்

Vinkmag ad

காதலர் தினம் – 14.02.2016

காதலிக்கும் எல்லோரும் காதலரே
காதலிக்காதவர்  வாழ்ந்திலரே
கன்னியைக் காதலித்தல் மட்டும்
காதலல்ல மானிடரே – வாழ்வைக்
காதலிப்பவர்க்கு இல்லை ஒரிடரே .
காதலிக்காதவர்க்கு என்றும் பேரிடரே .
பணத்தைக் காதலிப்போர்
பதவியைக் காதலிப்போர்
புகழைக் காதலிப்போர் .
உடலைக் காதலிப்போர்
உள்ளத்தைக் காதலிப்போர்
பொய்மையைக் காதலிப்போர்
உண்மையைக் காதலிப்போர்
உழைப்பைக் காதலிப்போர்
உயிரைக் காதலிப்போர்
உறவுகளைக் காதலிப்போர்
நிலத்தைக் காதலிப்போர்
நிம்மதியைக் காதலிப்போர்
கல்வியைக் காதலிப்போர்
களவைக்  காதலிப்போர்
அமைதியைக் காதலிப்போர்
அஹிம்சையைக் காதலிப்போர்
அறத்தைக் காதலிப்போர்
அறிவைக் காதலிப்போர்
வஞ்சனையைக் காதலிப்போர்
வன்முறையைக்  காதலிப்போர்
கொள்கையைக் காதலிப்போர்
கொலைத் தொழில் காதலிப்போர்
மந்திரம் காதலிப்போர்
தந்திரம் காதலிப்போர்
ஆத்திகம் காதலிப்போர்
நாத்திகம் காதலிப்போர்
தன்  மொழி காதலிப்போர்
பல மொழி காதலிப்போர்
தன மனை காதலிப்போர்
பிறன் மனை காதலிப்போர்.
நல்ல  காதலோ , கள்ளக் காதலோ
ஏதேனும் ஒன்றைக் காதலிக்கும்
எல்லோரும் காதலரே .
காதலில் வென்றால் களிப்போர் –
தோற்றலோ  உள்மனப்போர்
காதலில்லா தினமே இல்லை
தினந்தோறும் காதலர் தினமே
சிலேடை சிதார் சேது சுப்ரமணியம்
9940193912

News

Read Previous

ஊனம்

Read Next

பரமக்குடி, முதுகுளத்தூர் தொகுதிகளில் போட்டியிட த.மா.கா.-வினர் விருப்ப மனு

Leave a Reply

Your email address will not be published.