காதல்

Vinkmag ad

காதல்

புரியாத
மொழிகளை
புரிய வைக்கும்

தெரிந்த
மொழிகளை
குழப்ப வைக்கும்

சகாராவில்
இருந்தால் கூட
நயாகாராவாய்
நினைப்பை கூட்டும்

நயாகாராவில்
குளித்தால் கூட
சகாராவாய்
மனதை வாட்டும்

சாக்கடலில்
இருந்து கொண்டு
எவரெட்டில்
ஏற வைக்கும்

புர்ஜ் கலீபா
மனதை கூட
பைசா கோபுரமாய்
சாய்த்தே தீரும்

தாஜ்மஹால்
மனங்களிலே
பாபிலோன் தோட்டங்களாய்
தொங்க வைக்கும்

சீனத்து
பெருஞ்சுவராய்
காலத்தால்
ஜெயித்து நிற்கும்

புரியாத
மொழிகளை
புரிய வைக்கும்

தெரிந்த
மொழிகளை
குழப்ப வைக்கும்

தாஹிர் உசேன்
தாயகம் : லால்பேட்டை
அமீரகம் : துபை

News

Read Previous

வளரி – மாத இதழ்

Read Next

காதலர் தினம் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *