பூவிரவாதி!

Vinkmag ad

பூவிரவாதி!

பலகனிகள் விளைந்து நிற்கும்

அதிசய மரமாய் தினமும் நீ

பால்கணியில் தோன்றுகிறாய்!

 

மார்க்கட்டில் தங்கம் உயர்வதும் சரிவதும்..

உன் வீட்டு மொட்டை மாடிக்கு

நீ துணி உலர்த்த வருவதையும்

போவதையும் பொருத்திருக்கிறது!

 

அடியே ஆப்பிள் பெண்ணே!

நித்தம் உன்னை நினைதுக்கிடப்பதால்…

நாடுவதில்லை மருத்துவரை நான்!

 

உன் உதடு

என் முத்தங்களை வரவேற்க

நீ விரித்து வைத்திருக்கும்

சிகப்பு கம்பளம்!

 

உன் பருக்கள் !

ஒரு பருவத்தின் விருந்துக்காக

படைக்கப்பட்ட பருக்கைகள்!

எனக்கும் உனக்கும்

இடையில் ‘பறக்கும் முத்தங்கள் ‘!

பட்டாம் பூச்சிகள்!!!

 

நீர் அமிலம்

வேதியலில்

நீ அமுதம்

காதலியலில்!

 

நீ பளிங்கில் செய்த

ஒளிச்சிற்பம்!

பிரம்மனின் மிக நல்ல

தொழில்நுட்பம்!

 

விழியால் உருட்டி வீசுகின்றாய் காதலை

ஆயுதங்கள் வைத்திருக்கும்

பூவிரவாதி நீ !

         – அப்துல் வதூத், துபாய் 

News

Read Previous

எனக்கான நிலவா நீ?

Read Next

வளரி – மாத இதழ்

Leave a Reply

Your email address will not be published.