நீரிழிவை கட்டுக்குள் கொண்டுவர …

Vinkmag ad
நான் – வெஜ் மூலமாக நீரிழிவை கட்டுக்குள் கொண்டு வர
இதற்கு நானே சாட்சி. எனது சுகர் நிலவரங்கள் இதோ கீழே.

15 நாட்களுக்கு முன்: வெறும் வயிற்றில் – 230. உண்டு 1 மணிக்குப் பின் – 410.

தற்போது : வெறும் வயிற்றில் – 130.  உண்டு 1 மணிக்குப் பின்  – 180.

இதற்குக் காரணம், தற்போதைய எனது வெஜ் பேலியோ உணவு முறை. இதைக் கடைப்பிடிக்கத் துவங்கிய 15 நாட்களில் கிடைத்த ரிசல்ட் தான் மேற்சொன்னது. அதுவும் முழுமையான வெஜ் பேலியோ இல்லை. அரைகுறை பேலியோ தான். முழுமையாகக் கடைப்பிடித்தால் சுகரைப் பற்றிக் கவலைப்படவே வேண்டியதில்லை.
வெஜ் பேலியோ டயட் – காலையில் வெறும் வயிற்றில் உண்ண வேண்டியது:

முழு நெல்லிக்காய் – பெரியது – 3
காரட் பெரியது – 1
வெள்ளரிக்காய் – பெரியது – 1/2
செம்முள்ளங்கி – பெரியது -1
தக்காளி – பெரியது – 2
கொம்பு பாகற்காய் – 1/2 (கொட்டையின்றி)
இவற்றை வட்டமாகவோ வேண்டும் வடிவிலோ நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இதைத்தான் நாம் உண்ணப் போகிறோம்.

இந்த உணவுகளில் என்னென்ன சுவைகள் உள்ளன என்று பார்ப்போம்.

நெல்லிக்காய் – துவர்ப்பு
காரட் – இனிப்பு
முள்ளங்கி – கார்ப்பு
தக்காளி – புளிப்பு
பாகற்காய் – கசப்பு.

இதில் இல்லாத அல்லது குறைவாக உள்ள ஒரு சுவை உப்பு தான். எனவே சிறிது உப்பு சேர்த்து உண்ணலாம்.

இதைக் காலையில் 6-7 மணிக்குள் வெறும் வயிற்றில் உண்டால் 1 1/2 மணி நேரம் பசிக்காது. பின்னர் வழக்கம் போல உங்கள் உணவை உண்ணலாம்.

இதைப் போல இரவு உணவுக்கு 1 1/2 மணி நேரத்திற்கு முன்னால் ஒரு முறை உண்ணவும்.

நான் காலையில் மட்டுமே இதை உண்டு வந்தேன். அதன் பலனைத்தான் சொல்லி இருக்கிறேன். அதிலும் பாகற்காயை சேர்க்கவே இல்லை.

சேர்த்திருந்தால் சுகர் முற்றிலும் குறைந்து இருக்கும்.

இது சைவ உணவுக் காரர்களுக்கு ஒரு அருமையான மருந்தாகும்.

இது சுகரை மட்டுமல்ல, பிரசையும் கட்டுக்ள் வைக்கிறது.

இந்த உணவை உண்டுவந்தால், எந்த மாத்திரையையும் உட்கொள்ளத் தேவையில்லை.

அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

அருப்புக்கோட்டை.
——————————————————————
கடந்துபோன மணித்துளிகள் – மண்ணில்
கரைந்துபோன மழைத்துளிகள் – மீளாது !
கடமையைச் செய் ! – அதையும்
உடனடியாய்ச் செய் !
—————————————————————-
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.co

சுத்த சைவத்தின் மூலமும் கட்டுக்குள் வைக்க முடியும்.

 

News

Read Previous

சமையற்குறிப்பு

Read Next

ராசல் கைமாவில் தம்பே கிளினிக் மற்றும் பார்மஸி திறப்பு விழா

Leave a Reply

Your email address will not be published.