அபுதாபி அய்மான் சங்கத்தில் இன்று உத்தம நபி (ஸல்) உதய தின விழா

Vinkmag ad

அபுதாபி அய்மான் சங்கத்தில் இன்று உத்தம நபி (ஸல்) உதய தின விழா

அபுதாபி : அபுதாபி அய்மான் சங்கத்தில்  இன்று 28.01.2016 வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு உத்தம நபி (ஸல்) உதய தின விழா இந்தியன் இஸ்லாமிக் செண்டர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது என அபுதாபி அய்மான் சங்கத்தின் தலைவர் அதிரை அல்ஹாஜ் சாகுல் ஹமீது தெரிவித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச்செயலாளராக பதவியேற்ற பின்னர் அமீரகத்துக்கு அய்மான் சங்கத்தின் சார்பில் முதல் முறையாக முஹம்மது அபூபக்கர் அழைக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.
இந்த விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர்  மற்றும்  அய்மான் சங்க மார்க்கத்துறை முதன்மைச் செயலாளர் மௌலவி ஹுசைன் மக்கி ஆலிம் மஹ்லரி உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.
பெண்களும் நிகழ்ச்சியில் பங்கேற்க வசதி செய்யப்பட்டுள்ளது.
அய்மான் சங்க பொதுச்செயலாளர் காயல் எஸ்.ஏ.சி. ஹமீது உள்ளிட்ட நிர்வாகிகள் விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்புடன் செய்து வருகின்றனர்.

News

Read Previous

விழித்தெழட்டும் என் நாடு!

Read Next

தலைகுனிவு!

Leave a Reply

Your email address will not be published.