அமீரக தேசிய தினம்

Vinkmag ad

டிசம்பர் 2 – ஐக்கிய அரபு குடியரசுகள் – 44வது தேசிய தினம்

 

ஐக்கிய அரபுக் குடியரசு!

ஒற்றுமைதானே இதன் தனிச்சிறப்பு!

 

அமீரகம் ஓர் அற்புதம்!

உயர்ந்தவை பலவும் இதன்வசம்!

வர்த்தகம் கண்டு நலம்பெறுவார்!

வந்தவர் யாவரும் வளம் பெறுவார்!

ஐவகை நிலங்களில் இது பாலையாம்!

அமீரகத்தில் உண்டு அதிசய சோலையாம்!

தரத்தில் தங்கமெனப் போற்றிடுவார்!

தங்கமும் தரம் கொண்டதிங்கே, கண்டிடுவார்!

உழைப்பு ஊதியமாய் கைசேரும்!

உள்ளூரில் செல்வாக்கும் உயர்ந்திடும்!

முத்துக்குளித்த அமீரகத்தில் கால்பதித்து

சொத்துக் குவித்த அயலவர் பலருண்டு!

வானளாவிய கட்டிடங்கள் மலைக்கும் நாடே!

வாழ்க்கையும் வளமாய் நலமாய் செழிக்கும் ஊடே!

தேமதுரத் தமிழோசை பரவும் வகை

செய்தித்தாளும் போடுதிங்கே சிங்கநடை!

பொறுப்புகள் உணர்த்தும் சுடுபூமிதான்!

பொருந்தி வாழ்ந்தால் சொர்க்க பூமிதான்!

ஐக்கியம் என்றென்றும் ஓங்கட்டுமே!

அமீரகம் வாழ்வாங்கு வாழட்டுமே!

 

வாழ்த்துகளுடன்

நர்கிஸ் ஜியா

News

Read Previous

ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவை 26 ஆம்ஆண்டு இலக்கியப் போட்டிகள்

Read Next

குளம்

Leave a Reply

Your email address will not be published.